5 நாட்கள் லீவு.. சொந்த ஊருக்கு ரிசர்வ் செய்த மக்கள்.. சென்னையில் இருந்து கிளம்பும் ஸ்பெஷல் பஸ்கள்
சென்னை: பள்ளிகளில் காலாண்டு விடுமுறை, செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக இன்று புதன்கிழமை முதல் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
மிலாடி நபி முதல் காந்தி ஜெயந்தி வரை தொடர் விடுமுறை நாட்கள் வருகிறது அதே போல பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வதற்கு பலரும் விரும்புகின்றனர். இதே போல கோவை, திருப்பூர், சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் வேலை செய்பவர்கள் படிப்பவர்கள் சொந்த ஊர் செல்ல விரும்புவார்கள். ரயில்களில் இடங்கள் நிரம்பிவிட்டன. தென் மாவட்ட பகுதிகள், கோவை மார்க்கமாக செல்லக்கூடிய ரயில்களில் 5 நாட்களுக்கு எந்த வகுப்பிலும் இடங்கள் இல்லை. ரிசர்வ் செய்யாமல் ரயிலில் செல்வது சிரமமானது.

அரசு, ஆம்னி பஸ்களில் முன்பதிவு அதிகரித்துள்ளது. இன்றைய தினம் பயணம் செய்ய பெரும்பாலான பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். சொந்த ஊர்களுக்கு பயணம் செய்பவர்களின் வசதிக்காக வாரந்தோறும் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தினமும் இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக தினமும் 500 பஸ்கள் வீதம் 3 நாட்களுக்கு 1500 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வியாழக்கிழமை மிலாடி நபி, சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை அரசு விடுமுறை தினம் என்பதால் ஐந்து நாட்கள் விடுப்பு கிடைப்பதால் பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பயணிகள் முன்பதிவும் கூடுதலாகவே உள்ளது.
இதனால் வெளி ஊர்களுக்கும் மற்றும் சுற்றுவா செல்ல திட்டமிடும் பயணிகள் தங்களுடைய தேவைகளுக்கு, ஏற்ப முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதன்படி முன்பதிவு செய்வதன் மூலம் பயணிகளின் கூடுதல் தேவையை அறிந்து அதற்கு ஏற்றவாறு கூடுதல் பேருந்துகளை போக்குவரத்துக் கழகங்கள் இயக்க திட்டமிட்டுள்ளது. பயணிகள் சிரமமின்றி பயணிக்கவும் பாதுகாப்பாக திட்டமிட்டபடி பயணிக்கவும் உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதுடன் அன்றைய தேதியில் வெள்ளி, சனி, ஞாயிறு. மற்றும் திங்கள் கிழமை வரை பயணிகள் அதிகளவில் முன்பதிவு செய்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. மேலும், இந்நான் வரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து பயணம் மேற்கொள்ள செப்டம்பர் 27 அன்று 16,960 பயணிகளும் 29 அன்று 44,475 பயணிகளும் மற்றும் அக்டோபர் 3 அன்று 7,919 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.
பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 250 பேருந்துகளும் மற்றும் 29/09/2023 அன்று 480 பேருந்துகளும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 409 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 1700 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி அக்டோபர் 02ஆம் அன்று திங்கட்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 17,242 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம், சேலம், மதுரை, திருநெல்வேலி, கும்பகோணம் ஆகிய போக்குவரத்து கழகங்கள் மூலம் தேவையான பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது. மேலும் 28ஆம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்லும் பக்தர்களுக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் விடப்பட உள்ளதாகவும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications