சென்னையின் பசுமை போச்சே.. விழுந்த 694 மரங்கள்! 5 பேர் பலி -புயல் சேதம் எவ்வளவு? அமைச்சர்கள் விளக்கம்
சென்னை: மாண்டஸ் புயல் பாதிப்பு காரணமாக 5 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 694 மரங்கள் சாய்ந்ததாகவும் தமிழ்நாடு வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தை அடுத்த கடலோர பகுதியில் நள்ளிரவு பலத்த மழை மற்றும் அதிவேக காற்றுடன் கரையைக் கடந்தது.
இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்தன. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கைக்காக மாநகரம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

கரையை கடந்த புயல்
புயல் கரையை கடந்தபோது சென்னை மற்றும் வடகடலோர மாவட்டங்களில் 75 கி.மீ. வரை பலத்த காற்றும் வீசியது. புயல் கரையை கடக்கத் தொடங்கிய சுமார் 5 மணி நேரத்துக்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் அது முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

5 பேர் உயிரிழப்பு
இந்த நிலையில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், "மாண்டஸ் புயல் காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.

694 மரங்கள்
மாண்டஸ் புயலால் உயிரிழந்தவர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 3 பேர். 40 இயந்திர படகுகள் மற்றும் 160 வலைகள் மாண்டஸ் புயலின் காரணமாக சேதமடைந்து இருக்கின்றன. புயல் காற்று வீசியதன் காரணமாக மொத்தம் 694 மரங்கள் சாய்ந்து உள்ளன. இதுவரை 10,743 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்." என்றார்.

வனத்துறை அமைச்சர்
இதேபோல் இன்று சென்னை வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் புயல் பாதிப்புகளை பார்வையிட சென்ற வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கனமழை மற்றும் மாண்டஸ் புயலின் காரணமாக விலங்குகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.

வண்டலூர் பூங்கா
இந்த பூங்காவில் மாண்டஸ் புயலின் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததாக தகவல் கிடைத்தது. உடனே இங்கு வந்து ஆய்வு செய்தேன். அதில் 7 பெரிய மரங்களும், ஏராளமான சிறிய மரங்களும் கீழே விழுந்து உள்ளன. அதேபோல் பூங்காவிற்கு உள்ளே இருக்கும் அலுவலகம் அருகே உள்ள மதில் சுவர் சேதமடைந்து இருக்கிறது. அதை சீரமைக்க உத்தரவிட்டுள்ளோம்.

மீட்புப்பணி
கீழே விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி தூய்மை செய்வதாக பூங்கா இயக்குநர் தெரிவித்து இருக்கிறார். அனைத்து அதிகாரிகளும் இங்கு உள்ளதால் பராமரிப்பு பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. மிருங்கள் மற்றும் அவை தங்கி இருந்த கூண்டுகளுக்கு எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை." என்றார்.

துரிதப்பணி
அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஊழியர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது












Click it and Unblock the Notifications