Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5 கிலோ ரேஷன் கோதுமை.. பதிலுக்கு கோதுமை பீர் தருவீங்களா? ஆஹா, ஐடியாவோட கிளம்பி வந்துடுச்சு சிங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல் முறையாக, முழுக்க கோதுமையில் தயாரிக்கப்பட்ட பீர் விற்பனைக்கு வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.. இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இல்லாவிட்டாலும், இந்த பீர் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.

கோடை வெயில் சுள்ளென அடித்து பிளந்து கொண்டிருக்கிறது.. 105 டிகிரியை தாண்டிய வெப்பநிலை தமிழகத்தை வதைத்து கொண்டிருக்கிறது.. இதனால் கூலிங் பீர் விற்பனையும் அதிகரித்துள்ளதாம்.. தினந்தோறும் 60,000 பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை, தற்சமயம் 1 லட்சம் பெட்டிகளை தாண்டிவிட்டது என்கிறார்கள்.

1 Wheat Beer Price in Tamil Nadu Tasmac and what is the Special demand by Alcohol Drinking Association Chellapandian

தகவல்கள்: இந்நிலையில், 100 சதவீதம் கோதுமையில் தயாரிக்கப்பட்ட, "100% வீட் பீர்" என்ற பெயரில் புதிய பீர் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்த கோதுமை வீட் பீர் விலை 190 ரூபாய், காப்டர் வகை பீர்கள் 160 ரூபாய் - 170 ரூபாய் விலையில் கிடைக்க போகிறதாம். 5 வகை புதிய பீர்களை விற்க, டாஸ்மாக் நிர்வாகமும் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது..

இதுகுறித்து மதுவகை ஆய்வாளர் ஒருவர் சொல்லும்போது, பெரும்பாலான பீர் வகைகள், ஏதாவது ஒரு தானியத்தில் இருந்துதான் தயாராகின்றன என்றாலும், இதில் கலக்கப்படும் வேதிப்பொருட்கள்தான் உடலுக்கு கெடுதலை தரக்கூடியதாக இருக்கின்றன.. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யவிருக்கும் கோதுமை தயாரிப்பான பீர் உற்பத்தி செய்ய, சற்று கூடுதல் நாட்கள் பிடிக்கும்..

பீர் விலை: ஆனால், டிராபிக்கல் பீர் விலையே ரூ.170 முதல் ரூ.180 ஆக இருக்கும்போது இறக்குமதி செய்யப்படும், எப்படியும் பீர் விலை ரூ.230-க்கு மேல் இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கலாம்" என்று கருத்து கூறியிருக்கிறார்..

அதாவது, கோதுமை பீர் வெறும் ரூ.190 விலைக்கு கிடைக்கலாம் என்று சொல்லப்பட்டு வந்தநிலையில், 230 ரூபாய்க்கு மேல் விலை இருக்கும் என்ற தகவல் குடிமகன்களுக்கு அதிர்ச்சியையும், குழப்பத்தையும் தந்து வருகிறது... எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவுமே இதுவரை வரவில்லை.

அறிக்கை
: இப்படிப்பட்ட சூழலில், டாஸ்மாக் நிறுவனத்துக்கு தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறது.. இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர், செல்லபாண்டியன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.. அந்த அறிக்கையில், "டாஸ்மாக் நிர்வாகமே, அன்பான வேண்டுகோள்.. புதிய கோதுமை பீர் வாங்கிட காசில்லை.. அதனால், ரேஷன் கடையில் 5 கிலோ கோதுமைக்கு, ஒரு கோதுமை பீர் தந்திட உத்தரவிட வேண்டும்" கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்னும் கோதுமை பீர் பற்றின அறிவிப்பே அதிகாரப்பூர்வமாக வரவில்லை.. அந்த கோதுமை பீரின் விலையும் எவ்வளவு என்று உறுதியாக தெரியவில்லை..

கோரிக்கை:
அதற்குள் செல்லபாண்டியன், காசில்லை என்று சொல்லி, புதிய கோரிக்கையையும் அரசுக்கு விடுத்திருக்கிறார். ஏற்கனவே ரேஷனில் தேங்காய் எண்ணெய்யை தர சொல்லி விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.. ஆனால், 2 கிலோவாக பாமாயிலை உயர்த்தி தர வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்து வருகிறார். இதற்கு நடுவில் செல்லபாண்டியன் விடுத்திருக்கும் இந்த கோரிக்கையை அரசு பரிசீலிக்குமா? தெரியவில்லை..

ஒவ்வொரு முறை தேர்தல் சமயங்களிலும், தேர்தல் அறிவிப்புகளாக சில முக்கிய விஷயங்களை வெளியிட்டு வருபவர் செல்லபாண்டியன்...

செல்லப்பாண்டியன்:
அரசு டாஸ்மாக்கில் விற்கப்படும் மது வகைகளை போதைப்பொருள் என்று நிரூபித்து கெஜட்டில் வெளியிட வைத்தால், ஒரு லட்சம் பரிசு தருகிறேன் என்று ஏற்கனவே தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் சவால் விடுத்தவரும் இதே செல்லபாண்டியன்தான். இப்போது தமிழக அரசுக்கு செல்லபாண்டியன் விடுத்திருக்கும் இந்த "பீர்" கோரிக்கை மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+