மே 4 என்ன நடக்கும்? குலதெய்வ வழிபாட்டில் குதித்த திமுக தலைகள்.. பூஜையில் இறங்கிய அமைச்சர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மே-4-ந்தேதி தேர்தல் ரிசல்ட் எப்படி வரும் என்கிற எதிர்பார்ப்பில் தான் இன்னமும் அரசியல் கட்சிகள் இருந்து வருகின்றன. எந்தெந்த சோர்ஸ்களில் விசாரிக்க முடியுமோ அந்தந்த சோர்ஸ்களிடமெல்லாம் விசாரிக்கிறார்கள்.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் ஒட்டுமொத்தமாக 85.15% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது 2011-ல் பதிவான 78.3% என்ற சாதனையை முறியடித்து, தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே மிக உயர்ந்த பதிவாகக் கருதப்படுகிறது.

2021 தேர்தல் ஒப்பீடு: கடந்த 2021 தேர்தலில் 72.8% வாக்குகள் மட்டுமே பதிவாகின. அதனுடன் ஒப்பிடும்போது, இந்த முறை சுமார் 12.35% வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.

நேர வாரியான போக்கு: காலை 9 மணி வரை 17.69% ஆக இருந்த வாக்குப்பதிவு, நண்பகல் 1 மணிக்குள் 56.81% என மின்னல் வேகத்தில் உயர்ந்தது. பிற்பகல் 3 மணிக்கு 70% விழுக்காட்டைத் தொட்டு, இறுதி நேரத்தில் 85% கடந்து வியக்க வைத்தது.

Tamil Nadu Election 2026 Who will win the elctions DMK ministers are praying at their deities

முதலில் நாம் கவனிக்க வேண்டியது வாக்காளர் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வீழ்ச்சி. 2025 அக்டோபர் நிலவரப்படி 6.41 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை, சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு (Special Intensive Revision - SIR) பிறகு 5.43 கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது சுமார் 70 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 2021 தேர்தலின் போது 6.37 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை இப்போது 5.67 கோடியாகக் குறைந்துள்ளது என்பது ஒரு அசாதாரணமான சூழலாகும். பொதுவாக ஒவ்வொரு தேர்தலிலும் 30 முதல் 40 லட்சம் புதிய வாக்காளர்கள் இணைவதுதான் தமிழகத்தின் மரபு. ஆனால் இந்த முறை 11 சதவீத வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது, வாக்குப்பதிவு சதவீதத்தை செயற்கையாக உயர்த்தி காட்டியுள்ளது.

ரிசல்ட் எதிர்பார்ப்பு

இப்படிப்பட்ட நிலையில்தான் மே-4-ந்தேதி தேர்தல் ரிசல்ட் எப்படி வரும் என்கிற எதிர்பார்ப்பில் தான் இன்னமும் அரசியல் கட்சிகள் இருந்து வருகின்றன.

அதேசமயம், சென்னை மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அடித்து கொளுத்தும் வெப்பத்தைத் தாங்க முடியாமல் குளுகுளு இடங்களை தேடி பெரும்பாலானோர் மலைவாசஸ்தலங்களுக்கு சென்று விட்டனர். கோடீஸ்வரர்களாக இருப்பவர்கள், இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர். தேர்தல் களைப்பை முடித்துவிட்டு மே 3-ந்தேதி தமிழகம் திரும்புகின்றனர். இது ஒருபுறமிருக்க, திமுக அமைச்சர்கள் பலரும் தங்களின் இஷ்ட கோவில்களுக்குச் சென்று ரகசியமாக பூஜை புனஸ்காரங்கள் செய்து வழிப்பட்டு வருகின்றனர்.

மூத்த அமைச்சர்களான துரைமுருகன், கே.என். நேரு, ஏ.வ.வேலு, ஐ.பெரியசாமி, முத்துச்சாமி, தங்கம் தென்னரசு மற்றும் மூர்த்தி, சேகர்பாபு உள்ளிட்ட பலர் இந்த பட்டியலில் இருக்கிறார்கள். இதில், காசிக்கு சென்று அங்குள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதனை வழிபட்டு திரும்பியிருக்கிறார் மூர்த்தி. இவர்களின் வேண்டுதலே, மீண்டும் திமுக ஆட்சி வர வேண்டும் ; தொங்கு சட்டமன்றம் அமையக்கூடாது ; நான் வெற்றி பெற வேண்டும் என்று அவர்களின் பிரார்த்தனைகள் இருந்துள்ளது.

திமுக தலைமை பெரியாரிய கொள்கைகளில் ஊறிப்போனாலும், திமுகவில் உள்ள பெருந்தலைகளில் 99 சதவீதம் ஆத்திகர்களாகவே இருக்கின்றனர். இவர் களுக்கு கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் இருக்கிறது. அதனால்தான், நாம் வெற்றிபெற வேண்டும் ; மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும் என்கிற விசேச பூஜை நடத்தி வழிபட்டுள்ளனர் என்கிறார்கள் அறிவாலய உடன்பிறப்புகள்.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+