எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு 10க்கு 5 மார்க் 13.06%, 1மார்க் 10.01% பேர்: புதிய தலைமுறை சர்வே
சென்னை: புதிய தலைமுறை கருத்துக்கணிப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 10க்கு அதிகபட்சமாக 5 மதிப்பெண்களை 13.06 சதவீதம் பேர் அளித்துள்ளனர்.
புதிய தலைமுறை தொலைக்காட்சி தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைப்பார்கள், கூட்டணிகள் குறித்து மக்கள் கருத்து, அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் கருத்து, எதிர்க்கட்சியின் வாக்குறுதிகள் குறித்த மக்கள் கருத்து என பல்வேறு கேள்விகளை முன்வைத்து கருத்துக்கணிப்புகளை நடத்தி உள்ளது.
அப்படி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 10க்கு எத்தனை மதிப்பெண்கள் அளிப்பீர்கள் என்று கேள்வி கேட்டது.

ஒருமதிப்பெண்கள்
இந்த கேள்விக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 10க்கு அதிகபட்சமாக 5 மதிப்பெண்கள் அளிப்போம் என அதிகமானோர் கருத்து தெரிவித்துள்ளனர். 2வது பட்சமாக 10க்கு ஒரு மதிப்பெண் என 10.01 சதவீதம் பேர் கொடுத்துள்ளனர். 3வது பட்சமாக 9.59 சதவீதம் பேர் 8 மதிப்பெண் கொடுத்துள்ளனர். 7 மதிப்பெண்களை 8.92 சதவீதம் பேர் கொடுத்துள்ளனர்.

2 மதிப்பெண்கள்
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 10க்கு 10 மதிப்பெண்களை 7.39 சதவீதம் பேர் கொடுத்துள்ளனர். 4 மதிப்பெண்களை 7.50 சதவீதம் பேரும், 3 மதிப்பெண்களை 7.06 சதவீதம் பேரும். 2 மதிப்பெண்களை 6.74 சதவீதம் பேரும் அளித்துள்ளனர்.

கருத்து இல்லை
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 10க்கு 6 மதிப்பெண்களை 6.13 சதவீதம் பேரும், 10க்கு பூஜ்யம் மதிப்பெண்களை 4.91 சதவீதம் பேரும் அளித்துளளனர். கருத்து சொல்ல இயலாது என்று 13.85 சதவீதம் பேர் கொடுத்துள்ளனர்.

5 சதவீதத்திற்கு கீழ் அதிகம்
அதேநேரம் இந்த கருத்துக்கணிப்புகளை பார்க்கும் போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 10க்கு 5 மதிப்பெண் அல்லது ஐந்து மதிப்பெண்ணுக்கு கீழ் 57 சதவீதம் பேர் கொடுத்துள்ளனர். இதேபோல் 5 முதல் 10 மதிப்பெண்களை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 36 சதவீதம் பேர் கொடுத்திருப்பது தெரிகிறது.
-
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்? -
இப்பவாது யோசிங்க எடப்பாடி.. அதிமுக தொண்டர்களின் பல்ஸை பிடித்த ஆதவ் அர்ஜுனா -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு












Click it and Unblock the Notifications