இன்றும் மாற்றம் இல்லை.. 23 நாட்களாக உயராத பெட்ரோல், டீசல் விலை.. அதே விலையில் விற்பனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் இன்றும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 5 மாநில சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் தொடர்ந்து 23 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரே விலையில் விற்கப்படுகிறது.

கடந்த இரண்டு மாதமாக இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தது. தினமும் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தலாம் என்று விதி கொண்டு வந்த பின் தினமும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டது.

5 State Assembly election: No change in Petrol, Diesel prices today also

சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 69.36 டாலரை தொட்டது. 2.62 டாலர் இது உயர்ந்தது. இதன்பின் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது. இந்த நிலையில் தொடர்ந்து 23 நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

தற்போது சென்னையில் பெட்ரோல் விலை 93.11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 86.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.டெல்லியில் பெட்ரோல் விலை 97.17 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 81.47 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 87.24 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 85.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

பெங்களூரில் பெட்ரோல் விலை 94.11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 87.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை 97.57 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 88.60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

5 மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இப்படி பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படடவில்லை. தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு இந்தியால் பெட்ரோல் டீசல் விலை உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+