அரசியல் கட்சிகள் திக் திக்.. 5 மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று மாலை ரிலீஸ்
சென்னை: தெலுங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நடந்து முடியும் நிலையில் மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாக உள்ளதை அடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி பொதுமக்கள் வரை அனைவரும் அதை எதிர்பார்த்து காத்து உள்ளார்கள்.
கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கும், மிசோரம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா மூலமாக பாஜக செய்த ஆபரேசன் தாமரை காரணமாக மத்திய பிரதேசத்தில் 2 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.

மிசோரம் மாநிலத்தில் சொராம்தங்காவின் எம்.என்.எப் கட்சியும், தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ் (பி.ஆர்.எஸ்) கட்சியும் வெற்றிபெற்று ஆட்சியமைத்தனர். இந்த 5 மாநிலங்களில் ஆளும் அரசுகளின் ஆட்சி காலம் இந்த ஆண்டுடன் நிறைவடையும் நிலையில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை கடந்த அக்டோபர் மாதம் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
"மிசோரம் மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 ஆம் தேதி மற்றும் 17 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 17 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23 ஆம் தேதி தேர்தல் நடக்கும். தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும். டிசம்பர் 3 ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்." என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் வாக்குப்பதிவு சுமுகமாக நடந்து முடிந்து இருக்கின்றன. இறுதியாக இன்று தெலுங்கானா மாநிலத்தில் வாக்குப்பதிவு பரபரப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தில் வாக்குப்பதிவு இன்று மாலை நிறைவடையும். ஒவ்வொரு தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்பும், தேர்தலுக்கு பின்பும் கருத்துக்கணிப்புகள் ஊடகங்களில் வெளியிடப்படும்.
குறிப்பாக தேர்தலில் வாக்களித்துவிட்டு வரும் மக்களிடம் கருத்துக்களை பெற்று வெளியிடப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அரசியல் கட்சிகளாலும், பொதுமக்களாலும் உன்னிப்பாக நோக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு ஊடகங்கள், கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை எடுத்து வைத்து உள்ளது. இன்று தெலுங்கானா மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அங்கும் கருத்துக்கணிப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இன்று தெலுங்கானாவில் வாக்குப்பதிவு முழுமையாக நிறைவடைந்த பிறகு அனைத்து ஊடகங்களும், அமைப்புகளும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட உள்ளன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை காட்டிலும், பிந்தைய கருத்துக்கணிப்புகளில் துல்லியம் அதிகம் இருக்கும் என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை நமது ஒன் இந்தியா தமிழும் உடனுக்குடன் வெளியிட இருக்கிறது. ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தின் லைவ் பக்கம் மற்றும் செய்திகள் மூலமாக இவற்றை நீங்கள் அறியலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications