5 பக்கமும் சொதப்பிய எடப்பாடி! ஏன் இப்படி பண்ணுறாரு? எதுக்கு? அதிமுகவில் எழுந்த பூதம்! கவனிச்சீங்களா?
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் முக்கியமான சில விஷயங்கள் காரணமாக அதிருப்தி இருப்பதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த வாரம் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் 13 தீர்மானங்களில் ஆளும் திமுகவிற்கு எதிராக கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இது போக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்வரும் நாடாளுமன்றப் பொது தேர்தலில், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடிடும் வகையில், கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் களப்பணி ஆற்றிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜகவை எந்த இடத்திலும் இந்த தீர்மானங்கள் விமர்சனம் செய்யவில்லை. அதேபோல் கூட்டணி குறித்தும் அறிவிக்கவில்லை.
வாழ்த்து; இந்த நிலையில்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக மாஜி அமைச்சர்கள் இடையே சமீபத்தில் நடைபெற்ற சந்திப்பு ஒன்று அக்கட்சி வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது.
அதில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லியிருக்கிறார்கள் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் மற்றும் அதிமுக மா.செ.க்கள். அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி. வாழ்த்துகளை பரஸ்பரம் பகிர்ந்து கொண்ட நிலையில் நடப்பு அரசியல் குறித்து பேசிக்கொண்டனர்.

முதலீட்டாளர்கள் மாநாடு. மோடியின் தமிழ்நாடு பயணம், உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை . இதனால் டெல்லி பாஜக எடப்பாடி மீது அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
பொதுவாக மோடி தமிழ்நாடு வரும் போதெல்லாம் எடப்பாடி சந்திப்பது வழக்கம். சண்டை போட்டு நேரம் வாங்கி குறைந்தபட்சம் விமான நிலையத்திலாவது பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்துவிடுவார். ஆனால் இந்த முறை எடப்பாடி அபப்டி சந்திப்பு நடத்தவில்லை.
சென்னையில் சமீபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி அதிகமுகவின் பொதுச்செயலாளர் என்று நீதிமன்றம் உறுதி செய்த பின் நடந்த முதல் பொதுக்கூட்டம் ஆகும் இது. இதில் கூட பாஜக கூட்டணி பற்றி எடப்பாடி பேசி இருந்தார். இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அவர் உறுதியாக உடைத்து பேசி இருந்தார்.
அதோடு 40 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு வெற்றிபெறுவோம் என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு இருந்தார்.
அப்செட்: தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை . இதனால் டெல்லி பாஜக எடப்பாடி மீது அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதன் விளைவாக வரும் நாட்களில் அதிமுகவில் சில அதிரடிகள் நடக்கும் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் முக்கியமான சில விஷயங்கள் காரணமாக அதிருப்தி இருப்பதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
1. அவர் எதிர்க்கட்சி தலைவராக சென்னை வெள்ளத்தை பெரிதாக பயன்படுத்தவில்லை. அந்த விஷயத்தில் அவர் பெரிதாக தலையிடவே இல்லை. ஒரு அறிக்கை, ஒரு நிவாரண பொதுக்கூட்டத்தோடு நிறுத்திவிட்டார்.
2. அடுத்தடுத்து அமைச்சர்கள் கைதாகிறார். ஆனால் அதை பற்றியும் எடப்பாடி பெரிதாக பேசுவதே இல்லை. எதிர்க்கட்சி தலைவராக அவரின் நிலைப்பாடுகள் சரியில்லை.

3. அதோடு அவர் சேலத்திலேயே அதிகம் இருக்கிறார். சென்னைக்கு எப்போதாவது விசிட் அடித்தால் எப்படி எதிர்க்கட்சி தலைவராக இருக்க முடியும்.
4. ஜெயலலிதா கோடநாட்டில் இருந்து வென்றார் என்றால் ஆவர் ஜெயலலிதா.. ஆனால் எடப்பாடி அப்படியே சேலத்தில் இருந்து வெல்ல முடியுமா? எதிர்க்கட்சி தலைவராக அவர் எல்லா மாவட்டத்திற்கும் செல்ல வேண்டுமே .. ஸ்டாலின் கூட எதிர்கட்சியாக இருந்த போது ஊர் ஊராக சென்றாரே?
5. இப்படி புலம்பி தவிக்கும் கட்சி நிர்வாகிகள் சிலர்.. ஒருவேளை எடப்பாடி பழனிசாமிக்கு லோக்சபா தேர்தலில் வெல்வதே விருப்பம் இல்லை போல.. அது விட்டுக்கொடுத்துவிடலாம் என்ற திட்டத்தில் இருக்கிறார் போல என்றும் விவாதங்கள் கட்சிக்கு உள்ளே நடந்து வருகிறதாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications