+2 பொதுத்தேர்வு! 50,674 பேர் தமிழ் தேர்வு எழுத வராதது சமூகத்திற்கு பேரிழப்பு! கல்வியாளர்கள் கவலை!
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத மாணவர்கள் ஆர்வம் காட்டாதது பற்றி கல்வியாளர்கள் கவலை.
சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 50,674 பேர் தமிழ் தேர்வு எழுத வராதது சமூகத்திற்கு மிகப் பெரும் பேரிழப்பு என கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கவலையும், ஆதங்கமும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் உயர்கல்வி விழுக்காடு குறையும் எனக் கூறியுள்ள அவர் இந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் முதல் மாவட்ட கல்வி அதிகாரிகள் வரை அனைவருக்கும் பொறுப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேபோல் இது தொடர்பாக கருத்துக் கூறியுள்ள மற்றொரு கல்வியாளரான நெடுஞ்செழியன், குடும்ப வறுமையும், தோல்வி அச்சமும் தேர்வெழுத வர விடாமல் தடுத்திருக்கலாம் எனக் கூறுகிறார்.

+2 பொதுத் தேர்வு
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 13ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது. இந்த தேர்வை லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் எழுதும் நிலையில் 50,674 பேர் முதல் பரீட்சையான தமிழ் பரீட்சையை எழுத வரவில்லை. கடந்தாண்டு தமிழ் தேர்வை 32,000 பேர் எழுத வராத நிலையில் இந்தாண்டு அதன் எண்ணிக்கை கூடுதலாக உயர்ந்திருப்பது பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளை மட்டுமல்ல தமிழ் ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கல்வியாளர்கள் கவலை
இதனிடையே இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது பற்றி அறிய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசினோம். அப்போது அவர் கூறுகையில், ''50,000 மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை என சும்மா மொட்டையாக அரசு தேர்வுகள் இயக்குநரகம் கூறக்கூடாது. தேர்வெழுத வராதவர்களில் எத்தனை பேர் மாணவர்கள், எத்தனை பேர் மாணவிகள், எந்த மாவட்டங்களில் எவ்வளவு பேர் ஆப்செண்ட், தனியார் பள்ளிகளில் எத்தனை பேர், அரசுப் பள்ளிகளில் எத்தனை பேர் என்ற முழு விவரத்தையும் வெளியிட வேண்டும்.''

யார் பொறுப்பு?
''மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத வராததற்கு குறிப்பிட்ட ஒருவர் மீது பழியை சுமத்தக் கூடாது. இந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் முதல் மாவட்ட கல்வி அதிகாரிகள் வரை பொறுப்பு இருக்கிறது. நீட் தேர்வு வந்தது முதல் மேல்நிலை வகுப்புகளில் பயாலஜி பிரிவை தேர்வு செய்வதை பெரும்பாலானோர் தவிர்க்க ஆரம்பித்துவிட்டனர். மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத வரவில்லை என்பதை வெறுமனே ஆப்செண்டாக மட்டும் பார்க்கக் கூடாது. இதனை சமூகத்தின் பேரிழப்பாக கருத வேண்டும். ஆம், தேர்வு எழுதவே இத்தனை பேர் வரவில்லை என்றால் உயர்கல்வி விழுக்காடு குறையும். சமூகத்தின் வளர்ச்சிக்கு பயன்பட வேண்டிய அறிவு பயன்பட முடியாமல் போகிறது.''

மிக கவனமாக
''இதனால் இந்த விவகாரத்தை பள்ளிக்கல்வித்துறை மிக சீரியஸாக எடுத்துக்கொண்டு ஆராய வேண்டும்'' எனக் கூறினார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.இதேபோல் இது தொடர்பாக கருத்துக் கூறியுள்ள மற்றொரு கல்வியாளரான நெடுஞ்செழியன், குடும்ப வறுமையும், தோல்வி அச்சமும் தேர்வெழுத வர விடாமல் தடுத்திருக்கலாம் எனக் கூறுகிறார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications