மதுரை, கோவை உட்பட பல மாவட்ட எஸ்.பி.க்கள் டிரான்ஸ்பர்.. மொத்தம் 51 ஐபிஎஸ் அதிகாரிகள்.. அரசு அதிரடி
சென்னை: தமிழகத்தில் சீனியர் ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்பட 51 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் பல அதிகாரிகள் பதவி உயர்வில் செல்கிறார்கள்.
திருச்சி எஸ்.பி.யாக இருந்த ஜியாவுல் ஹக், கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை சிஐடி சிறப்பு பிரிவில் இருந்த அரவிந்த் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை எஸ்.பி. மகேஷ்வரன் கடல் அமலாக்கப் பிரிவு எஸ்.பி. ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.ஆக அரவிந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பணியிடமாற்றம்
சென்னை காவல் துறையில் உதவி சூப்பிரண்டாக பணியாற்றிய தீபா சத்யன், பணி உயர்வு பெற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு எஸ்பியாக நியமிக்கப்படுகிறார். மத்திய குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் குற்றப்புலனாய்வு பிரிவின் எஸ்பியாக நியமிக்கப்படுகிறார். அடையார் துணை போலீஸ் கமிஷனர் பகலவன், கரூர் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்படுகிறார்.

கரூர், திருச்சி
கரூர் மாவட்ட எஸ்பியாக இருந்த பாண்டியராஜன், வணிக குற்றப்பிரிவு சிஐடி விசாரணை பிரிவின் எஸ்பியாக நியமிக்கப்படுகிறார். திருச்சி நகர சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் நிஷா, அம்பத்தூர் துணை போலீஸ் கமிஷனராக இடமாற்றம் செய்யப்படுகிறார். அம்பத்தூர் துணை போலீஸ் கமிஷனர் ஈஸ்வரன், அசிஸ்டன்ட் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக மாற்றப்படுகிறார். மாதவரம் துணை போலீஸ் கமிஷனர் ரவளி பிரியா, திண்டுக்கல் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்படுகிறார்.

திண்டுக்கல், விருதுநகர், வள்ளியூர்
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் எஸ்பி சக்திவேல், சிலை கடத்தல் பிரிவு எஸ்பியாக நியமிக்கப்படுகிறார். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் துணை எஸ்பி ஹரி கிரண் பிரசாத், எஸ்பியாக பதவி உயர்வு பெற்று சென்னை தி.நகர் துணை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்படுகிறார். விருதுநகர் மாவட்ட துணை எஸ்பியாக பணியாற்றிய சிவபிரசாத், பதவி உயர்வு பெற்று மதுரை நகர சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.

கன்னியாகுமரி, திருப்பூர்
நாகர்கோவில் உதவி எஸ்பி ஜவகர் பதவி உயர்வு பெற்று சென்னை அண்ணாநகர் துணை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்படுகிறார். திருப்பூர் துணை போலீஸ் கமிஷனர் பத்ரிநாராயணன், கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்படுகிறார். கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா, சென்னை கிரைம் பிரான்ச் சிஐடி இரண்டாவது பிரிவு எஸ்பியாக நியமிக்கப்படுகிறார்.

ஈரோடு எஸ்பி
சேலம் நகர சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் தங்கதுரை, ஈரோடு மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்படுகிறார். ஈரோடு மாவட்ட எஸ்பி சக்தி கணேசன், நாமக்கல் மாவட்ட எஸ்பியாக மாற்றப்படுகிறார். நாமக்கல் மாவட்ட எஸ்பி அருளரசு, கோவை மாவட்ட எஸ்பியாக இடமாற்றம் செய்யப்படுகிறார்.
கோவை, மதுரை, நெல்லை
கோவை மாவட்ட எஸ்பி, சுஜித் குமார் மதுரை மாவட்ட எஸ்பியாக மாற்றப்படுகிறார். மதுரை மாவட்ட எஸ்பி மணிவண்ணன், திருநெல்வேலி மாவட்ட எஸ்பியாக மாற்றப்படுகிறார். திருநெல்வேலி மாவட்ட எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா, சென்னை சைபர் கிரைம் எஸ்பிஐயாக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications