தமிழகத்தில் மேலும் 510 பேருக்கு கொரோனா உறுதி.. டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகம்!
சென்னை: தமிழகத்தில் மேலும் 510 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,39,352 பேராகும்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் பரவிய கொரோனா தொற்று தற்போது மெல்ல மெல்ல பாதிப்பு குறைந்து பாதிப்பு எண்ணிக்கை 5 இலக்கத்திலிருந்து 3 இலக்கத்திற்கு வந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில சுகாதாரத் துறை இன்றைய தினம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இன்று 510 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 8,38,340 பேராகும். இன்று ஒரே நாளில் 51,644 சளி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இதுவரை 1,61,23,270 சேம்பிள்கள் சோதனை செய்யப்பட்டன.
அது போல் இன்று ஒரே நாளில் 51,470 பேருக்கு பிசிஆர் சோதனை செய்யப்பட்டன. இதுவரை 1,58,11,552 பேருக்கு பிசிஆர் சோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் 306 ஆண்களுக்கும் 204 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் 253 கொரோனா சோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 521 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதுவரை 8,22,468 பேர் வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில் 4,517 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இன்று ஒரே நாளில் 4 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை கொரோனாவிலிருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 12,367 பேராகும். இன்று சென்னையில் மட்டும் 142 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரியலூரில் 4 பேருக்கு செங்கையில் 27 பேருக்கும், கோவையில் 54 பேருக்கும், கடலூரில் 2 பேருக்கும் திண்டுக்கல்லில் 7 பேருக்கும் ஈரோட்டில் 27 பேருக்கும் நாமக்கல்லில் 12 பேருக்கும் திருவள்ளூரில் 33 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இதுவரை கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,31,563 பேராகும். அரியலூரில் 4,698 பேருக்கும் செங்கல்பட்டில் 51,607 பேருக்கும், கோவையில் 54,500 பேருக்கும், கடலூரில் 24,942 பேருக்கும், தருமபுரியில் 6593 பேருக்கும் காஞ்சியில் 29,281 பேருக்கும் திருவள்ளூரில் 43,594 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications