சென்னையில் டஃப் பைட் கொடுக்கும் கொரோனாவும் டிஸ்சார்ஜும்.. முதல்முறையாக 5 ஆயிரம் தாண்டியது பாதிப்பு
சென்னையில் 5-ஆவது நாளாக 4 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு!.. டிஸ்சார்ஜிலும் கலக்கல்!
சென்னை: சென்னையில் 5445 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 5015 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். அதாவது மருத்துவமனைக்கு வந்தவர்களை போல் 100 சதவீதம் பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக வீசி வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் குறைந்த அளவில் இருந்த பாதிப்பு தற்போது பல்கி பெருகி வருகிறது.
இந்த நிலையில் தினந்தோறும் தமிழகத்தில் ஏற்படும் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி சென்னையில் 5445 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை
இன்று ஒரே நாளில் 5015 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். சென்னை இன்று ஒரே நாளில் 40 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர். இதன் மூலம் சென்னையில் 4,701 பேர் இதுவரை பலியாகிவிட்டனர். இதன்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 107 பேர் பலியாகிவிட்டனர்.

ஈரோடு
அரியலூரில் இன்று ஒரே நாளில் 38 பேருக்கும் செங்கல்பட்டில் 1164 பேருக்கும் சென்னையில் 5445 பேருக்கும் கோவையில் 1008 பேருக்கும் கடலூரில் 249 பேருக்கும் தருமபுரியில் 154 பேருக்கும், திண்டுக்கல்லில் 245 பேருக்கும் ஈரோட்டில் 473 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி
காஞ்சிபுரத்தில் 352 பேருக்கும் கன்னியாகுமரியில் 211 பேருக்கும் திருவள்ளூரில் 792 பேருக்கும் திருவண்ணாமலையில் 225 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் இதுவரை அரியலூரில் 5529 பேருக்கும் செங்கல்பட்டில் 78757 பேருக்கும் கோவையில் 77280 பேருக்கும் சென்னையில் 328520 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

60 வயது
12 வயதுக்குட்பட்டவர்களில் 20483 ஆண்களுக்கும் 20965 பெண்களுக்கும் என 41448 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் 13 முதல் 60 வயதுடையோரில் 572463 ஆண்களும் 374227 பெண்களும் 60 வயதை கடந்தோரில் 100439 ஆண்களுக்கும் 59449 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications