கிராமங்களில் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர்.. பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. . நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

55 லிட்டர் தரமான குடிநீர்
ஜல்ஜீவன் இயக்கம் மூலம் வீட்டுக்குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு 2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுளள்து. குறிப்பாக குக்கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு ஏற்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது 79,395 குக்கிராமங்களில் ஒருநபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சூப்பர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

1.27 கோடி குடும்பம்
மொத்தம் 1.27 கோடி குடும்பங்களுக்கு வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க வழிவகை செய்யப்படும் என்று நிதி அமைச்சர் கூறி இருக்கிறார். தமிழ்நாட்டில் பல்வேறு கிராமங்களில் இன்னும் தரமான குடிநீர் கிடைக்காத நிலையில் ஒருநபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்கப்படும் என்று கூறி இருபப்து மிகவும் சிறப்பான திட்டமாகும்.

தூய்மை பாரத இயக்கம்
மேலும் கிராமப்புறங்களில் ரூ.400 கோடி செலவில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுளள்து. ஈர நிலங்களை சார்ந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு நீர்வள தகவல், மேலாண்மை அமைப்பு ரூ.30 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில்அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர்நிலைகள் புனரமைப்பு பணிகள்
ரூ.610 கோடி செலவில் நீர்நிலைகள் புனரமைப்பு பணிகள் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர நீர் பாசன திட்டங்களுக்கு ரூ.6,607.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு நீர்வள தகவல், மேலாண்மை அமைப்பு ரூ.30 கோடியில் செயல்படுத்தப்படும் பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications