"குழந்தை இறந்து 2 மணி நேரமாச்சேம்மா.. உடம்பெல்லாம் ஜில்லுன்னு ஆயிடுச்சே".. கதறிதுடித்த பெற்றோர்!
சென்னை: "குழந்தை இறந்து 2 மணி நேரமாச்சே..ம்மா.. உடம்பெல்லாம் ஜில்லுன்னு ஆயிடுச்சே" என்று டாக்டர்கள் சொல்லவும் பெற்றோர் கதறி துடித்து அழுதுள்ளனர். விமானத்திலேயே 6 மாத குழந்தையின் உயிர் பிரிந்த அதிர்ச்சி நிறைந்த சோகம் சென்னை தம்பதிக்கு நிகழ்ந்துள்ளது!
சென்னையை சேர்ந்தவர் சக்தி முருகன். இவரது 29 வயது மனைவி கீதா. இவர்கள் இருவருமே என்ஜினியர்கள். அதனால், ஆஸ்திரேலியாவில் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களது 6 மா கைக்குழந்தை ஹர்த்திக்!

இந்நிலையில், இவர்களுக்கு இப்போது லீவு என்பதால், இந்தியா வர முடி செய்தனர். அதற்காக முருகன், கீதா, மற்றும் கீதாவின் அம்மா பிரிட்டோ குயின் ஆகியோர் குழந்தையுடன் ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னைக்கு வருவதற்காக ஃபிளைட்டில் ஏறினர்.
கொஞ்ச நேரத்தில் கீதா குழந்தைக்கு ஃபிளைட்டிலேயே பாலூட்டி உள்ளார். பிறகு தன் மடியிலேயே படுக்க வைத்து தூங்க வைத்துள்ளார். குழந்தையும் நன்றாக தூங்கிவிடவும், அவனை யாரும் எழுப்பவில்லை. நள்ளிரவு சென்னை ஏர்போர்ட்டும் வந்து சேர்ந்தனர்.
ஆனால், அப்போதும் குழந்தை தூக்கத்தில் இருந்து எழவில்லை என்பதால், எழுப்பி பார்த்தனர்.. அப்போதும் எழவில்லை... அதனால் பதட்டமடைந்த பெற்றோர், ஏர்போர்ட்டில் உள்ள மருத்துவ சேவை மையத்துக்கு தூக்கி சென்றனர். அங்கு பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், "குழந்தை இறந்து 2 மணி நேரமாச்சே..ம்மா.. உடம்பெல்லாம் ஜில்லுன்னு ஆயிடுச்சே" என்று சொன்னார்கள்.
இதை கேட்டதுமே சக்திமுருகனுக்கும் கீதாவுக்கும் ஏர்போர்ட்டிலேயே கதறி அழுதனர். உடனடியாக விமான நிலைய போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த அவர்கள் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பான விசாரணையும் நடத்தினர். பால் குடித்தபிறகு குழந்தை கண் விழிக்கவில்லை என்பதால், அநேகமாக மூச்சு திணறி இறந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். எனினும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் எதுவும் தெரியும் என்கிறார்கள் போலீஸார்.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருவுடன் ஒப்பிடுவது தவறு.. பரந்தூர் விமான நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் கருத்து -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications