கொட்டுக்காளி, மகாராஜா, தங்கலான் உள்பட 6 தமிழ் படங்கள் ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு தேர்வு
சென்னை: 2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடுவதற்காக 6 தமிழ் திரைப்படங்கள் உள்பட 28 திரைப்படங்களை இந்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இவற்றுள் 10 இந்தி படங்களும், 5 மலையாளப் படங்களும், தலா 3 தெலுங்கு, மராத்திய படங்களும் ஒரு ஒரிய படமும் அடங்கும்.
மகாராஜா, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், தங்கலான், வாழை, ஜமா ஆகிய 6 படங்கள் ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொட்டுக்காளி திரைப்படம் ரஷ்ய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு வென்றது.

திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் லாஸ் ஏஞ்சல்ஸில் இந்த விழா நடைபெறுகிறது.
97ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி (இந்திய தேதிபடி மார்ச் 3) நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்கு நாமினேஷனான பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது.
இந்த ஆண்டு லாபாடா லேடிஸ் எனும் திரைப்படம் ஆஸ்கர் விருது 2025 ஆண்டிற்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படம் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக ஒவ்வொரு திரைத்துறையும் சேர்த்து 28 படங்களை தேர்வு செய்துள்ளது. அதில் தமிழ் திரையுலகம் சார்பில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மாரி செல்வராஜ் இயக்கிய வாழை, விக்ரம் நடித்த தங்கலான், ஜமா ஆகிய படங்கள் பரிந்துரைக்கப்பட்டன.
அது போல் மலையாளத்தில் ஆட்டம், உல்லொழுக்கு, ஆடுஜீவிதம் ஆகிய படங்களும் போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த படங்களை தேர்வு செய்ய அனைத்து மொழி திரைத்துறையை சேர்ந்த 13 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழ் திரைத்துறையை சேர்ந்த எடிட்டர் பிரவீண் இருக்கிறார்.
அமீர்கான் தயாரிப்பில் கிரண் ராவ் இயக்கத்தில் பாலிவுட்டில் வெற்றி நடை போடும் Laapataa Ladies என்ற திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications