யேசுதாஸ் மகன் விஜய் வீட்டிலும் 60 சவரன் தங்கம், வைர நகைகள் மாயம்.. வீட்டு பணியாளர்கள் மீது புகார்
சென்னை: பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸின் வீட்டிலும் 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகளை காணவில்லை என அவருடைய மனைவி தர்ஷனா பாலா சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாடகர் யேசுதாஸின் இளைய மகன் விஜய் யேசுதாஸ், பிராமபுரத்தில் மனைவி தர்ஷனா பாலா, மகன், மகளுடன் குடியிருந்து வருகிறார். இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மொழிகளில் பாடியுள்ளார்.
இவர் 2015 ஆம் ஆண்டு தனுஷின் மாரி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு காதலர்கள் தினத்தின் போது துபாயில் நடந்த இசைக் கச்சேரியில் தர்ஷனா பாலாவை சந்தித்தார். இருவரும் 5 ஆண்டுகள் காதலித்துவிட்டு பின்னர் இவர்களுக்கு 2007ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆமேயா, ஆவ்யன் ஆகிய மகள், மகன் உள்ளனர்.

தங்கம் வைரம்
இந்த நிலையில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை காணவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்த யேசுதாஸ் மருமகள் தர்ஷனா அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது புகாரில் வீட்டில் இருந்த 60 சவரன் நகைகளை காணவில்லை. அதில் வைர நகைகளும் இருந்தன. இந்த திருட்டில் வீட்டு பணியாளர்கள் மீது சந்தேகம் இருக்கிறது என புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஐஸ்வர்யா ரஜினி வீட்டில்
ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினி வீட்டிலும் கடந்த மாதம் 10 ஆம் தேதி தங்கம் , வைரம் உள்ளிட்ட பாரம்பரிய நகைகளை காணவில்லை என புகார் எழுந்தது. மேலும் தனக்கு வீட்டு பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாக அவர்களது பெயருடன் ஐஸ்வர்யா புகார் அளித்திருந்தார். ஐஸ்வர்யாவுக்கு எந்தெந்த நகைகளை காணவில்லை என்ற குழப்பமும் இருந்தது.

60 சவரன் நகைகள்
குத்துமதிப்பாக 60 சவரன் நகைகள் காணாமல் போயிருக்கும் என கூறியிருந்தார். போலீஸார் இந்த வழக்கில் பணிப்பெண் ஈஸ்வரியையும் டிரைவர் வெங்கடேசன் ஆகியோர் கைதாகியுள்ளனர். இந்த நிலையில் ஈஸ்வரி வீட்டில் போலீஸார் 140 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் 95 லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டின் பத்திரத்தையும் கைப்பற்றினர்.

எத்தனை பவுன்
ஐஸ்வர்யா சொன்னதோ 60 , ஆனால் கிடைத்ததோ 140 என்பதால் போலீஸார் குழப்பமடைந்தனர். மேலும் தனுஷ், ரஜினி வீட்டிலும் இவர் திருடியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை சூடு பிடித்தது. ஐஸ்வர்யாவுக்கு எந்த நகைகள் காணாமல் போனது என்றே தெரியவில்லை. தெரிந்திருந்தால் அதன் ரசீதை வைத்து சவரனை கணக்கு செய்திருக்கலாம். இந்த வழக்கில் அதுவும் இல்லை.

200 பவுன் நகைகளை காணவில்லை
இதனால் போலீஸார் கடைசியாக அந்த நகைகளை தனது தங்கை சவுந்தர்யா- விசாகன் திருமணத்தின் போது அணிந்திருந்ததாக ஐஸ்வர்யா கூறி அவர் சில புகைப்படங்களையும் காண்பித்தார். இதையடுத்து சவுந்தர்யா வீட்டிலிருந்து திருமண ஆல்பத்தை மொத்தமாக போலீஸாரிடம் கொண்டு போய் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை நடத்தப்படுகிறது. தற்போது ஐஸ்வர்யா 200 பவுன் நகைகளை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினியை போல் விஜய் யேசுதாஸ் வீட்டு திருட்டிலும் வீட்டு பணியாளர்கள் மீது புகார் கூறப்பட்டிருக்கிறது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications