10 வயது பேத்தியை வன்கொடுமை செய்த 60 வயது கொடூர தாத்தா கைது
10 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை தந்த தாத்தா கைது செய்யப்பட்டார்
சென்னை: இதோ இந்த தாத்தாவுக்கு வயசு 60.. ஆனால் 10 வயசு பேத்தியை கதற கதற டார்ச்சர் தந்துள்ளார்.. இத்தனைக்கும் அந்த குழந்தை இவரது சொந்த பேத்தி.
Recommended Video

சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் அந்த பெண்.. 36 வயதாகிறது.. இவரது தம்பி வீடு வியாசர்பாடியில் உள்ளது.. அதனால், தன்னுடைய 10 வயது மகளை அழைத்து கொண்டு அங்கே சென்றிருந்தார்.. அந்த பெண்ணின் அப்பாவும் தம்பியுடன்தான் தங்கி இருக்கிறார்.

குடியிருக்க வாடகை வீடு ஒன்றை பார்க்க தம்பி தன்னுடன் வருமாறு சொல்லவும், அக்காவும் அவருடன் சென்றுள்ளார்.. குழந்தையை வீட்டிலேயே, தன் அப்பாவிடம் பார்த்து கொள்ளுமாறு விட்டு சென்றுள்ளார். குழந்தையும் தாத்தாவிடம் விளையாடி கொண்டிருந்தாள்.
பிறகு வீடு பார்த்துவிட்டு, அக்காவும், தம்பியும் வீட்டிற்கு வந்துள்ளனர்.. அப்போது குழந்தை அழுது கொண்டிருந்தாள்.. அதனால் பதறி போன அம்மா, என்ன ஏதென்று கேட்கவும், "அம்மா.. தாத்தா என்னை.. இப்படியெல்லாம் செய்தார்" என்று சொல்லி குழந்தை கதறி இருக்கிறாள்.
அந்த தாத்தாவுக்கு வயசு 60 ஆகிறதாம்.. பெயர் டேவிட்... இவருக்கு ரகு என்று இன்னொரு பெயரும் உள்ளது.. வீட்டில் தன்னிடம் ஒப்படைத்துவிட்டு போன பேத்தியை தாத்தா பாலியல் தொல்லை தந்திருக்கிறார்.. அதனால் வலி பொறுக்க முடியாமல் குழந்தை அழுதது கண்டு, ஆவேசமும், ஆத்திரமும் அடைந்த அந்த பெண் நேராக எம்கேபி நகர் மகளிர் போலீசுக்கு சென்றார்..
தன் குழந்தையை தன்னுடைய அப்பாவே செக்ஸ் டார்ச்சர் தந்துள்ளார் என்று சொல்லியும், உடனடியாக நடவடிக்கை கோரியும் புகார் தந்தார். இதையடுத்து அந்த புகாரின்பேரில் விசரணை மேற்கொண்ட போலீசார், அடுத்த செகண்டே தாத்தாவை தூக்கி உள்ளே வைத்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications