குன்றத்தூரில் 60 வயசு பெண்ணின் கள்ளக்காதல்.. சென்னையில் தங்க நகையுடன் நடமாடிய மாமியார்.. இப்படியா?
சென்னை: குன்றத்தூர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பிச் சென்ற கொள்ளையனை தேடி வந்தனர். கொள்ளையடித்து சென்ற நபர் இந்தியில் பேசியதால் வட மாநில நபர் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.. இந்நிலையில், நகை திருடிய குற்றவாளி சிக்கியிருக்கிறார்.. மேலும் ஒருவர் தலைமறைவாக உள்ளதால் அவரை தேடும் பணியை போலீசார் விரிவுபடுத்தி உள்ளனர்.
குன்றத்தூர் காந்தி சாலை, மணிகண்டன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி பெயர் அபிதா.. 60 வயதாகிறது.. ராஜேந்திரனின் 88 வயது அம்மா வள்ளியம்மாள் என்பவரும் இவர்களுடனேயே ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

திருமண மண்டபம்
ராஜேந்திரன் பொழிச்சலூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்... கடந்த 31ம் தேதி, பணிநிமித்தமாக ராஜேந்திரன் திருமண மண்டபத்திலேயே தங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது.. இதனால் மனைவியும், வள்ளியம்மாளும் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.
அன்றையதினம் இரவு 10.30 மணியளவில் வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்றுள்ளார் ஒரு மர்ம நபர்.. அந்த நேரத்தில் வீட்டின் வெளியேயிருந்த கழிவறைக்கு அபிதா சென்றுள்ளார்.. அபிதாவை பார்த்ததுமே மர்ம நபர் அவரது முகத்தில் ஓங்கி குத்தி நிலை குலைய செய்துள்ளார். இதில் அபிதா சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து விட்டார்..
மாமியார் வள்ளியம்மாள்
பிறகு வீட்டிற்குள் சென்ற மர்ம நபர், அங்கிருந்த வள்ளியம்மாளையும் தாக்கி, அவரது கைகளை கட்டிப் போட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 7 சவரன் தங்க செயின் மற்றும் 4 சவரன் மதிப்புடைய தங்க வளையல்கள் என்று மொத்தம் 11 சவரன் நகைகளை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிவிட்டார்..
வள்ளியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அபிதா உள்ளிட்ட வள்ளியம்மாளையும் மீட்டனர்... வள்ளியம்மாளை மட்டும் சிகிச்சைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து குன்றத்தூர் போலீஸார், கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற வீட்டை ஆய்வு செய்தனர்.
அந்த பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் கைப்பற்றினர்.. நகைகளை கொள்ளையடித்து சென்ற நபர் இந்தியில் பேசியதால் வட மாநில நபர் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற அடிப்படையில் போலீஸார் விசாரணையை துவக்கினார்கள்.
உடம்பெல்லாம் காயங்கள்
அப்போதுதான், மாமியார் வள்ளியம்மாள் உடலில் மட்டுமே காயங்கள் இருந்ததையும், அபிதாவின் உடலில் எவ்வித காயங்களும் இல்லாமல் இருப்பதை கண்டும் போலீசாருக்கு சந்தேகம் கிளம்பியது..
அதுமட்டுமல்ல, வள்ளியம்மாள் அணிந்து இருந்த நகையை மட்டுமே கள்ளக்காதலன் பறித்து சென்று இருந்ததால் போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அபிதாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் தந்தார்.. பிறகு அந்த பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சம்பவம் நடந்த நேரத்தில் அபிதா ஒருவருடன் நின்று பேசிக் கொண்டிருப்பது பதிவாகியிருந்தது..
அந்த நபர் யார்? என்று போலீசார் தங்கள் பாணி விசாரணையை நடத்தியபோதுதான், பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அபிதா கூறினார்.
60 வயது பெண் காதல்
அதாவது, அபிதாவிற்கு திருமணமாகி குழந்தை இல்லையாம்.. எனவே, அருகிலுள்ள கோயிலுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போதுதான் கோயிலில் 35 வயது நபருடன் அபிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவே கள்ளக்காதலாக மாறியிருக்கிறது.
ஒருகட்டத்தில் அந்த கள்ளக்காதலன், அபிதாவிடம் பணம் கேட்க ஆரம்பித்துள்ளார்... அதற்கு அபிதா, தன்னிடம் பணம் இல்லை என்றதுடன், தன்னுடைய நகைகள் வீட்டில் மாமியாரின் கண்காணிப்பில் உள்ளது என்றும் சொல்லி உள்ளார்.. அந்த நகையை மாமியாருக்கு சந்தேகம் வராமல் எடுத்தால், 2 பேரும் நகையை பங்கு போட்டுக் கொள்ளலாம் என்றும் அபிதா ஐடியா தந்துள்ளார்.
அதுமட்டுமல்ல, ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு இதே போல் நகை பறிப்பு சம்பவம் நடந்து உள்ளது. இதனை சமாளித்து போலீசில் புகார் கொடுக்காமல் கள்ளக்காதலனை அபிதா காப்பாற்றி உள்ளார்.. அதுபோல இந்த முறையும் திருட்டு நடந்தால், போலீசில் புகார் கொடுக்க மாட்டார்கள் என்று, கள்ளக்காதலனுக்கு தைரியம் தந்துள்ளார் அபிதா. இதற்கு பிறகே கள்ளக்காதலன் நகைகளை கொள்ளையடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
வள்ளியம்மாள் நகைகள்
சம்பவத்தன்று ராஜேந்திரன் திருமண மண்டபத்திலேயே தங்கிவிட்டதால், உடனே கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்துள்ளார் அபிதா.. இரவு நேரம் வீட்டுக்குள் நுழைந்த கள்ளக்காதலன், வள்ளியம்மாளை நிஜமாகவே தாக்கிவிட்டு, அபிதாவை மட்டும் தாக்குவது போல் நடித்திருக்கிறார்.
முதலில் மாமியார் வள்ளியம்மாளை மட்டும் தாக்கி நகையை பறித்து உள்ளார். பிறகு போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக தன்னையும் கட்டிப்போட்டு விட்டு செல்லுமாறு அபிதா சொல்லவும், அதன்படியே, நகைகளுடன் செல்லும்போது அபிதாவையும் சேர்த்து கட்டிப்போட்டு விட்டு சென்றுள்ளார் கள்ளக்காதலன்.
இவ்வளவும் போலீசாரிடம் அபிதா வாக்குமூலமாக சொல்லி உள்ளார். ஆனால், கள்ளக்காதலன் தலைமறைவாகவே உள்ளதால், அவரை தேடி வருகின்றனர். தன்னுடைய சொந்த வீட்டிலேயே காதலனை வரவழைத்து, கொள்ளை சம்பவத்தையும் அரங்கேற்றியிருக்கும் 60 வயது பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications