சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சபலத்தால்" சரிந்த சாம்ராஜ்ஜியம்.. பிறந்தமேனி கோலம்.. இவங்ககிட்ட மட்டும் "ஜாக்கிரதை".. போலீஸ் வார்னிங்

நடுத்தர வயது ஆண்களை மிரட்டி பணம் பறிக்கும் பெண்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: தொழில்நுட்பங்கள் பெருக பெருக, அதை தவறாக பயன்படுத்தி பணம் பறிக்கும் கும்பல்களும் பெருகிவிட்டதை மறுக்க முடியாது.. இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார், புது எச்சரிக்கை ஒன்றை பொதுமக்களுக்கு விடுத்துள்ளனர்.

இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார் புது எச்சரிக்கை ஒன்றை பொதுமக்களுக்கு விடுத்துள்ளனர்.
சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்த பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.. யாரையும் நம்பி மோசடியில் விழுந்துவிடாதீர்கள் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே வருகிறார்கள்.

ஒரு சம்பவத்தையும் உதாரணமாக சொல்கிறார்கள் சைபர் கிரைம் போலீசார்... "இப்படித்தான் நடுத்தர வயதை தொட்ட அந்த நபருக்கு, இளம்பெண் ஒருவர் போன் செய்துள்ளார்.. அந்த பெண் யாரென்றே அவருக்கு தெரியாது..

 ஹாய் ஹலோ

ஹாய் ஹலோ

ஹலோ... என்று பேச தொடங்கி உள்ளார்.. அடுத்து, நீங்கள் என்ன செய்கிறீர்கள்? எந்த ஊர்? என்று கேட்டு பேசிக்கொண்டிருக்கும் போதே, திடீரென அந்தபெண், வாட்ஸ் அப் வீடியோ காலில் வாங்க என்ஜாய் பண்ணலாம் என்றாராம்.. உடனே இந்த நபருக்கும் சபலம் துளிர்த்துவிட, உடனே வீடியோ கால் செய்துள்ளார்.. அங்கே பார்த்தால், அந்த பெண், உடம்பில் ஒட்டுத்துணிகூட இல்லால் நின்றுகொண்டிருந்தாராம்.. இதை பார்த்ததும் அந்த நபருக்கு தூக்கி வாரிப்போட்டுள்ளது.. ஆனால் ஆசை யாரை விட்டது? அடுத்த செகண்டே இந்த நபரும் பிறந்த மேனிக்கு சென்றுள்ளார்..

பிறந்தமேனி

பிறந்தமேனி

ஒருசில நிமிடங்கள் கழித்து, செல்போன் திடீரென கட் ஆகிவிட்டது.. லைன் கட் ஆகிவிட்டதால் மறுபடியும் போன் வரும் என்று சார் காத்திருந்தார்.. ஆனால், அடுத்த நிமிடமே, அவரது போனுக்கு, அவரது பிறந்த மேனி போட்டோக்கள் வந்து விழுந்திருக்கிறது.. அதை பார்த்ததும் ஆடிப்போய்விட்டார்.. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே, போன் வந்துவிட்டது.. "செல்போனில் வீடியோ காலில் நீ அந்த பெண்ணை ரசித்ததை படமாக்கி வைத்துள்ளோம்... நாங்கள் கேட்கும் பணத்தை அனுப்பாவிட்டால் உன் மானம் போய் விடும்" என்று மிரட்டி உள்ளனர்.

 போச்சு மானமே

போச்சு மானமே

அந்த மிரட்டல் குரலால் மிரண்டு போன, இந்த சபலிஸ்ட், பல லட்சங்களை இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டாராம்.. இது ஒரு உதாரணம்தான், இப்படி ஒவ்வொரு நாளும் செக்ஸ் மோசடி கும்பல் பலரையும் தங்களது வலையில் வீழ்த்தி பணம் பறித்துக்கொண்டேதான் இருக்கிறது.. மானம் போய்விடும் என்பதால் பலர் வெளியே சொல்வதில்லை.. இதைதான் அந்த கும்பலும் ஆயுதமாக கையில் எடுக்கிறார்கள்.. அதனால், இதுபோன்ற மோசடி நபர்களிடம் சிக்காமல் இருக்க மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார் அந்த சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி.

 SEX மோசடி

SEX மோசடி

மேலும் சில எச்சரிக்கைகளையும் அந்த அதிகாரி சொல்கிறார்.. இதுபோன்ற கும்பல்கள், முதலில் ஆசையை தூண்டிவிட்டுதான், பணம் பறிக்கும் மோசடியில் இறங்குவார்களாம்.. வெளிநாட்டில் இருந்தோ அல்லது வெளி மாநிலங்களில் இருந்து கொண்டோ... குழுவாக செயல்பட்டு பெண்களை பேச வைத்து ஏமாற்றுவார்களாம்.. பேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்களில் உள்ள போன் நம்பரை எடுத்து தொடர்பு கொள்ளவும் செய்வார்கள்.. சென்னையில் மட்டும் நாள்தோறும் இந்த மோசடி வலையில் ஏகப்பட்ட பேர் சிக்குகிறார்கள் என்கிறார் அந்த அதிகாரி.. கடந்த ஆண்டு, நூற்றுக்கணக்கானோர் இப்படி சபலத்தால் விழுந்து பாதிக்கப்பட்ட நிலைலயில் வெறும் 4 பேர் மட்டுமே தைரியமாக புகார் தந்தார்களாம்..

 சபலபுத்தி

சபலபுத்தி

அதிலும் ஒருவர், ரூ.17 லட்சத்தை இப்படி இழந்திருக்கிறாராம்.. அதனால், அறிமுகம் இல்லாத பெண்களிடம் இருந்து வரும் இதுபோன்ற அழைப்புகளை ஏற்று ஏமாற வேண்டாம் என்றும் பெரும்பாலும் வட மாநில அழகிகளை இதற்காக பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்காளம், டெல்லி, குஜராத் போன்ற வட மாநிலங்களில் இருந்தே இந்த செக்ஸ் மோசடி கும்பல் அதிகமாக கைவரிசை காட்டி வருவதால், இதுபோன்ற மோசடி கும்பலை பிடிப்பது என்பது கடினமான காரியமாகவே இருப்பதாக அதிகாரிகள் சொல்கிறார்கள்..!!!

பழகலாம், பேசலாம்

பழகலாம், பேசலாம்

சமீபத்தில் ஒருவர் போனில் பேசிய பெண்ணிடம், முகத்தைகூட பார்க்காமல் 15 லட்சம் இழந்துள்ளார்.. எனவே, உங்கள் போனுக்கு வாட்ஸ்அப் என்றில்லாமல் சாதாரண போன் வந்தாலும், "வாங்க... பழகலாம்.. பேசலாம்" என்று அழைக்கலாம்... அறிமுகம் இல்லாத பெண்களிடம் உஷாராக இருங்கள்.. தயக்கமின்றி புகார் தரும்போது, அவர்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்பதால் துணிந்து பாதிக்கப்பட்டவர்கள் தர முன்வர வேண்டும்... இங்குள்ளவர்களை எளிதாக பிடித்துவிட முடிவதால்தான், வெளிமாநில அல்லது வெளிநாட்டு பெண்களை வைத்து பேச வைக்கிறது அந்த மோசடி கும்பல் என்று எச்சரிக்கிறார்கள் போலீசார்.

English summary
61 year old man threatened with RS 20 lakh by young woman and Why cybercrime Branch warn the public
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X