வேகமாக குறையும் தொற்று.. பெருகும் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 690 பேர் பாதிப்பு
சென்னையில் இன்று 690 பேருக்கு மட்டும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 690 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 723ஆக இருந்த தொற்று எண்ணிக்கை இன்று குறைந்துள்ளது
தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே தொற்று வேகமாக குறைந்து வருகிறது... அதேபோல டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே வருகிறது.. இதற்கு தமிழக அரசு மேற்கொண்டு வரும் சீரிய முயற்சிதான் காரணம்..

இனி வரும் காலங்களில் இந்த தொற்று அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது குறைவாகவே பாதிப்பு கண்டறியப்பட்டு வருவது ஆறுதலை தந்து வருகிறது.
தமிழகத்தில் மேலும் 2,511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,24,522 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,91,236 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 3,848 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல, தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 11,122 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக சென்னையில் வழக்கம்போல் அதிக பாதிப்பு காணப்படுகிறது.. சென்னையில் இன்று ஒரே நாளில் 690 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 199916 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூரில் 214 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டில் 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. சேலத்தில் 145 பேரும் திருவள்ளூரில் 133 பேரும் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. . இதில் சென்னைக்கு அடுத்து கோவையில்தான் அதிக பாதிப்பு உள்ளது.. மற்ற மாவட்டங்களில் இரட்டை இலக்கத்திலேயே பாதிப்படைந்தோர் எண்ணிக்கை உள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications