Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் 4375 ஏக்கரில் 6வது நீர்தேக்கம்.. ஓஎம்ஆர் டூ ஈசிஆரில் பிரம்மாண்டம்.. டெண்டர் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோவளத்தில் ரூ.471 கோடியில் புதிதாக அமைக்கப்பட உள்ள 6-வது நீர்த்தேக்க திட்டத்தின் முதல் கட்டப்பணிக்கு நீர்வளத்துறை டெண்டர் கோரி உள்ளது. பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைக்கு இடையே திருப்போரூர் அருகே அரசு நிலத்தில் சுமார் 4 ஆயிரத்து 375 ஏக்கர் நிலத்தில் நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது. இந்த ஏரி அமைந்தால் தென் சென்னையின் குடிநீர் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும்.

சென்னை மாநகரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கோடிக்கணக்கான மக்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வருகிறார்கள். சென்னையின் புறநகர் பகுதிகளில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நீர் தேவையை பூர்த்தி செய்ய, நீர் தேக்கங்களை அமைக்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் குடிநீர் தேவைக்காக செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் பகுதியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

6th new reservoir at Kovalam Chennai at a cost of Rs 471 crore Tender has been floated

சென்னையில் ஏரிகள்

தற்போதைய நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி, தேர்வாய் கண்டிகை ஆகிய ஐந்து குடிநீர் தேக்கங்கள் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஐந்தும் சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ளது. இதுதவிர கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்தும், தெலுங்கு கால்வாய் திட்டம் மூலம் கிருஷ்ணா நதி மூலம் குடிநீர் சென்னைக்கு கிடைக்கிறது. ஆந்திராவில் இருந்து வரும் கிருஷ்ணா நதி நீரை பூண்டி ஏரிக்கு கொண்டு வரப்படுகிறது.

தென்சென்னையின் குடிநீர்

அங்கிருந்து கிருஷ்ணா நதி நீர் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தேவைப்படும்போது கால்வாய் மூலம் திறந்து விடுகிறது. இதற்கு என்று தனியாக கால்வாய்களும் உள்ளன. இந்த நீர்தேக்கங்கள் ஒரு புறம் எனில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. அந்த திட்டம் மூலமும் பல லட்சம் வீடுகளுக்கு தென் சென்னையில் குடிநீர் வழங்கப்படுகிறது.

கோவளம் அருகே 4375 ஏக்கரில் 6-வது நீர்த்தேக்கம்

எனினும் தற்போதைய நிலையில் தென்சென்னையை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து அவர்களின் குடிநீர்தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, சென்னையில் ஆறாவதாக புதிய நீர் தேக்கம் திருப்போரூர் மற்றும் கோவளம் இடையே 4375 ஏக்கரில் அமைக்கப்பட இருக்கிறது. சுமார் ரூ.471 கோடியில் 6-வது நீர்த்தேக்கம் அமைப்பதற்கான பணிகளிலும் நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

புதிய நீர் தேக்கம்

நீர்வளத்துறை வெளியிட்ட தகவலின்படி, திருப்போரூர் முதல் கோவளம் இடையே 4 ஆயிரத்து 375 ஏக்கர் அரசு நிலத்தில் நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது. 1.6 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட இந்த புதிய நீர்த்தேக்கம் சுமார் ரூ.471 கோடி மதிப்பில் கட்டப்படப்பட உள்ளது. இந்த ர்த்தேக்கம் அமைக்கும் பணியில் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். கோவளம் பகுதியில் உள்ள தமிழக அரசின் உப்பு கழக நிறுவனத்திற்கு சொந்தமாக அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்க, தமிழக நீர்வளத்துறை ரூ.32 கோடிக்கு டெண்டர் கோரி இருக்கிறது. இதுதொடர்பாக மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, அடுத்த 3 ஆண்டுகளில் இந்த பணிகள் நிறைவடையும் என அதிகாரிகள் கூறினார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+