மதுரை மல்லிகைக்கு ரூ.7 கோடி..சாத்தூர் வெள்ளரி..விளாத்திக்குளம் மிளகாய்.. புவிசார் குறியீடு பெற நிதி
மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் மல்லிகை விவசாயிகளுக்கு ரூ.7 கோடியில் பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
சென்னை: மதுரை மல்லிக்கு ஓர் இயக்கமாக, மதுரையில் மல்லிக்கு பிரத்யேக தொகுப்பு ஏற்படுத்தப்படும். பருவம் இல்லா காலங்களிலும் மதுரை மல்லி உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் கூறியுள்ளார். மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் மல்லிகை விவசாயிகளுக்கு ரூ.7 கோடியில் பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்றைய தினம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
3 அல்லது 4 கிராமங்களுக்கு தலா, ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம் செய்யப்படும். 4311 வேளாண் விரிவாக்க அலுவலர்கள் 4 கிராமங்களுக்கு ஒருவர் என நியமிக்கப்பட்டு திட்டத்தை செயல்படுத்துவர் விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள், திட்ட பயன்கள் குறித்த விவரங்களை எடுத்துச் செல்ல உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.

நெல் ஜெயராமன் மரபு பாதுகாப்பு இயக்கம் மூலம் 196 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்பட்டன. வேளாண்மை தோட்டக்கலை பட்ட படிப்பு முடித்த பட்டதாரிகள், தொழில்முனைவோராக தலா 2 லட்சம் நிதி உதவி வழங்க 4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத்தில், ரசாயனம், உர பயன்பாட்டை குறைத்து, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க 32 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.26 கோடி ஒதுக்கீடு
இயற்கை உரங்களை தயாரிக்க 100 குழுக்களுக்கு 1 லட்சம் வீதம் வழங்க, ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு. ஏரி, குள வண்டல் மண்ணில் ஊட்ட சத்து இருப்பதால் விவசாயிகள் இவற்றை இந்த ஆண்டும் வயல்களுக்கு இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்
நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மை திட்டம் ரூ.50 கோடியில் செயல்படுத்தப்படும். 1 லட்சம் ஏக்கரில் மாற்று பயிர் சாகுபடிக்கு ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 6 லட்சம் ஏக்கரில் நெல்லுக்குப் பின் மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் உற்பத்தி, கொள்முதல் உள்ளிட்டவற்றிக்காக, 37 மாவட்டங்களில் பணம் இல்லா பரிவர்த்தனையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மின்னணு வேளாண்மை திட்டத்தின் கீழ், 37 மாவட்டங்களில் பணம் இல்லா பரிவர்த்தனை விரிவுபடுத்தப்படும்
355 வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் ரூ.2 கோடியில் மின்னணு உதவி மையங்கள் அமைக்கப்படும்

விவசாயிகளுக்கு தேவையான தொழில் நுட்பம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் கொண்டு செல்ல வட்டார அளவில் WhatsApp குழுக்கள் ஏற்படுத்தப்படும். இயற்கை இடர்பாடுககளால் பாதிக்கபட்ட 40.74 லட்சம் ஏக்கர் பதிவு செய்த 26 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு
வரும் ஆண்டில் 127 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து உழவர்களுக்கு தேவையான கட்டமைப்புகள் உருவாக்கப்படும். விவசாயிகளிடம் இருந்து சிறுதானியங்களை நேரடியாக கொள்முதல் செய்து, நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகம் செய்ய திட்டம்
உணவு தானிய உற்பத்தியில் சிறந்து விளங்கும் மாவட்ட, வட்டார அலுவலர்களை ஊக்கப்படுத்த விருதுகள் வழங்கப்படும். சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சிறுதானிய திருவிழா நடத்தப்படும். ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு
வேளாண் காடு திட்டம் மூலம் விவசாயிகளுக்கு 75 லட்சம் செம்மரம், தேக்கு,சந்தனம் முழு மானியத்தில் வழங்க 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதி திராவிட, பழங்குடியின சிறு - குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம் வழங்கப்படும். ஆதி திராவிட சிறு குறு விவாசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பழங்குடியின சிறு - குறு விவாசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு
பல்வேறு துறைகளின் திட்டப் பலனை விவசாயிகள் ஒரே இடத்தில் பெற உதவும் வகையில், ஒரு தளம் ஒரு பயன் திட்டம் அமல்படுத்தப்படும். 13க்கும் மேற்பட்ட துறைகளின் திட்டப் பலன் இந்த இணைய தளம் மூலம் கிடைக்கும்
கறவை மாடு, ஆடுகள், கோழி, தீவனப் பயிர், பழ மரங்கள், மரக் கன்றுகள், தேனீக்கள், மண்புழு உரம், பண்ணைக் குட்டை நீர் வளர்ப்பு. இவை அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து, ரூ.50,000 மானியம் வழங்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கருவேப்பிலை சாகுபடியை அதிகரிக்க 5 ஆண்டுகளில் ரூ.1,500 ஹெக்டேரில் செயல்படுத்த ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பலா சாகுபடியை உயர்த்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் 2,500 ஹெக்டேரில் பலா சாகுபடியை உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண்ருட்டி பலாவிற்கு ஒருங்கிணைந்த தொகுப்பு அமைத்து பகுதிகளுக்கு ஏற்ப பலா ரகங்கள் அறிமுகம் செய்யப்படும் என வேளாண்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1000 ஹெக்டேர் சாகுபடியை அதிகரிக்க வேளாண் பட்ஜெட்டில் ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ரூ.11 கோடியில் முருங்கை இயக்கம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூறியுள்ளார். தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய முருங்கை ஏற்றுமதி மண்டலம் உருவாக்கப்படும் எனவும் எம்ஆர்கே பன்னீர் செல்வம் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

மதுரை மல்லிக்கு ஓர் இயக்கமாக, மதுரையில் மல்லிக்கு பிரத்யேக தொகுப்பு ஏற்படுத்தப்படும். பருவம் இல்லா காலங்களிலும் மதுரை மல்லி உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இராமநாதபுரத்தில் மதுரை மல்லிகைக்கு தேவையான செடிகள் உற்பத்தி செய்யப்படும்
மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் மல்லிகை விவசாயிகளுக்கு ரூ.7 கோடியில் பயிற்சி அளிக்கப்படும். 1000 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு மிளகாய் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரித்து, மிளகாய் மண்டலம் ஏற்படுத்தப்படும்.
பேரீட்சை, அத்தி உள்ளிட்ட சிறப்பு தோட்டக் கலை பயிர்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
1000 ஹெக்டேரில் சாகுபடி செய்ய பயிற்சி; ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டிராகன் ஃபுரூட், அவகேடா, லிச்சி போன்ற பழங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 1,000 ஹெக்டேரில் சாகுபடிக்கு நடவடிக்கை எடுக்கப்படும். ரூ. 15 கோடி மதிப்பீட்டில் 10 லட்சம் வேளாண் குடும்பங்களுக்கு பேரீட்சை, டிராகன் ஃபுரூட், அவகோடா, அத்தி பழ சாகுபடி பயிர்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
சாத்தூர் வெள்ளரி, விளாத்திக்குளம் மிளகாய், கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா உள்ளிட்ட பத்து பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பனை சாகுபடியை அதிகரிக்க 10 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும். விவசாயிகளுக்கு பனை மதிப்பு கூட்ட பாதுகாப்பு உபரகணங்கள்,கொட்டகை அமைக்க நிதி உதவி செய்யப்படும். தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளத்தில் ரூ.15 கோடியில் பனை ஆராய்ச்சி நிலையம் பனை மேம்பாட்டுத் திட்டம். பனை சாகுபடியினை ஊக்குவித்து பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications