ஒரே நாளில்.. 7 இனிப்பான திட்டங்கள்.. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு.. பெண்கள், மாணவர்களுக்கு முக்கியம்
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேற்று ஒரே நாளில் 7 முக்கியமான நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவரின் அறிவிப்புகள் மக்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார். இந்த நிகழ்விற்கு பின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதில் அவர் வெளியிட்ட 7 முக்கியமான அறிவிப்புகள் பெரிய அளவில் கவனம் பெற்றன.

அறிவிப்பு 1 - அதன்படி ஆட்டோ ஓட்டும் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு 1லட்சம் மானியம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். மானியம் வழங்கும் திட்டம், மேலும் 500 மகளிர் பயன்பெறும் வகையிலும், 3ம் பாலினத்தவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
அறிவிப்பு 2 - ஸ்விக்கி, ஓலா, ஜொமோட்டோ போன்ற சர்வீஸ் துறையில் பணிபுரிபவர்களுக்கு என விரைவுச் சேவை நல வாரியம் அமைக்கப்படுகிறது. அவர்கள் வாழ்க்கை மற்றும் பணிகள் முக்கியமானது. அவர்களை காக்கும் விதமாக இந்த நல வாரியம் அமைக்கப்படும்.
அறிவிப்பு 3 - விடுதலை போராட்ட வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 11 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அறிவிப்பு 4 - விடுதலை போராட்ட வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 11 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். தமிழ்நாடுதான் விடுதலை போராட்டத்திற்கான விதையை முதலில் விதைத்தது என்று பேசியது குறிப்பிடத்தக்கது.
அறிவிப்பு 5 - மாநிலம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆக.25 முதல் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின நாளில் அறிவித்துள்ளார். வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்து 122 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில், இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு 500 கோடி ரூபாய் செலவு செய்யப்படும். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம் காரணமாக பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை அதிகரித்து உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இந்த திட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதல்முறையாக காலை உணவு திட்டம் பள்ளிகளில் தொடங்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது.
அறிவிப்பு 6 - ராணுவத்தில் இருந்து திரும்பும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர்களுக்கு 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரம் நபர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்படும்,
அறிவிப்பு 7 - நடப்பாண்டு பல்வேறு துறைகளை சேர்ந்த 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற முக்கியமான அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications