தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
சென்னை:தமிழகத்தில் ஏழு ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக 7 பேரை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில் மிகப் பெரிய அளவில் ஐபிஎஸ் மாற்றம் வர வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவும், அவர்கள் முன்பு வகித்த பதவியும் தற்போது மாற்றப்பட்டுள்ள பதவியும் விபரம் வருமாறு.

1. கல்விப் பயில விடுப்பில் சென்றிருந்த ஐஜி அபின் தினேஷ் மொடக் மீண்டும் பணிக்கு திரும்பிய நிலையில், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி கல்பனா நாயக் இடமாற்றம் செய்யப்பட்டு, ரயில்வே ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. ராணிப்பேட்டை எஸ்பி தேஷ்முக் சேகர் சஞ்சய் மாற்றப்பட்டு மதுரை 6- வது பட்டாலியன் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. சென்னை ரயில்வே எஸ்.பி, தீபா சத்யன் மாற்றப்பட்டு ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. மதுரை 6-வது பட்டலியன் கமாண்டன்ட் இளங்கோ மாற்றப்பட்டு சென்னை ரயில்வே எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
6. கடலோர காவல் குழுமம், ராமநாதபுரம் எஸ்.பி, ஜெயந்தி மாற்றப்பட்டு சேலம் மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
7.சேலம் மண்டல அமலாக்கப் பிரிவு எஸ்.பி, மகேஷ்குமார் மாற்றப்பட்டு நில அபகரிப்பு தடுப்பு- சிறப்பு பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த இடமாறுதல் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications