Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"முதலிரவு".. அவங்க 2 பேர் தள்ளிதான் நிப்பாங்க.. ரோஷினி யார்.. 7 பேரை திருமணம் செய்த சந்தியா கண்ணீர்

7 திருமணம் செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 6 கல்யாணம் செய்துவிட்டு, 7வது கல்யாணத்துக்கு ரெடியாகி கொண்டிருந்த சந்தியா, போலீசாரிடம் சிக்கியதுடன், பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை தந்துள்ளார். அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ளது கள்ளிப்பாளையம்.. இங்கு வசித்து வருபவர் தனபால்.. 35 வயதாகிறது.. மதுரையை சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுடன் கடந்த 7ம் தேதி திருமணம் நடந்துள்ளது.

புதுவெங்கரைஅம்மன் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தாலும், பெண் வீட்டின் சார்பில் வெறும் 3 பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளார்..

 முதலிரவு

முதலிரவு

இதனால் மாப்பிள்ளை வீட்டில் சந்தேகம் ஏற்பட்டாலும், அடுத்த 2வது நாள் வீட்டை விட்டு நகை, பணத்துடன் சந்தியா எஸ்கேப் ஆகி உள்ளார்.. யாரை கல்யாணம் செய்தாலும், 2 நைட் மட்டும்தான் அவர்களுடன் சந்தியா இருப்பாராம். விடிந்ததும், நகை பணத்தை அபேஸ் செய்துவிட்டு, தலைமறைவாகிவிடுவாராம்.. இதையடுத்து, சந்தியா 7வது திருமணம் செய்ய போவதாக தனபாலுக்கு தகவல் கிடைக்கவும், சாதுர்யமாக, சந்தியா & கோ-வை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளார் தனபால். அதற்கு பிறகு போலீசார் சந்தியாவிடம் விசாரணை நடத்தினார்கள்..

 நிர்வாண போட்டோ

நிர்வாண போட்டோ

சந்தியா போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் இதுதான்: மதுரையை சேர்ந்தவர் திருமண புரோக்கர் பாலமுருகன்.. அவரது கூட்டாளிகள் ரோஷினி, மாரிமுத்து.. இவர்கள் 3 பேருமே என்னை நிர்வாணப்படுத்தி போட்டோ, ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்துள்ளனர்.. மோசடி திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால், என்னுடைய நிர்வாண படத்தை வெளியிடுவேன் என்றும் குழந்தைகளை கொன்று விடுவேன் என்றும் மிரட்டினார்கள்.. அதனால்தான் நான் இந்த திருமணங்களுக்கு சம்மதித்தேன்.

 ரோஷினி

ரோஷினி

என்னை போல, வேறு 4 பெண்களும் இவர்களிடம் சிக்கி உள்ளனர்.. இதில் எவ்வளவு பணம் கிடைத்தாலும், ஆந்த பணம் முழுதையும், அவர்களே எடுத்துக்கொள்வார்கள்.. எங்களுக்கு கொஞ்சம் பணம் மட்டுமே தருவார்கள்.. மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் எதாவது ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தருவார்கள்.. எனக்கு அப்பா, அம்மா யாரும் இல்லை.. அதனால், என்னுடைய அக்கா - மாமாவாக ரோஷினி, மாரிமுத்து 2 பேரும் நடிப்பார்கள்.. ஒரு கல்யாணம் பேசி முடிப்பதற்கு முன்பேயே, அக்கா - மாமாவாக நடிக்க, என்னுடைய வீட்டிற்கு வந்துவிடுவார்கள்..

 வார்னிங் புரோக்கர்கள்

வார்னிங் புரோக்கர்கள்

பெண் பார்க்க, திருமண ஆசையில் வரும் இளைஞர்களிடம் நான் நெருங்கி பழக வேண்டும்.. பாசமாக அவர்களிடம் பேச வேண்டும் என்பது கண்டிஷன்.. அப்படி பேசும்போது, செல்போன், பட்டுப்புடவை, பணம், நகை என ஆசையாக நெருங்கி கேட்டு, சாமர்த்தியமாக அவர்களிடம் வாங்கி கொள்ள வேண்டும்.. திருமணம் முடிந்ததுமே, இந்த வீட்டை காலி செய்து விட வேண்டும்.. எனக்கு எந்த கல்யாணம் நடந்தாலும், மாப்பிள்ளை வீட்டில் போட்டோ எடுக்கும்போதுகூட, புரோக்கர்கள் சற்று விலகியே எச்சரிக்கையாக நிற்பார்கள்..

 மிட்நைட் பிளான்

மிட்நைட் பிளான்

பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை பிடித்து விட்டது என்று சொல்லி உடனடியாக திருமணத்துக்கு ஏற்பாடு செய்வார்கள்.. திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டில் 2 நாட்கள் தங்கி இருந்து, மாப்பிள்ளை வீட்டாரை ஏமாற்றிவிட்டு கிளம்ப வேண்டும்... அதற்கு முன்பு போனில் தகவல் தந்துவிட்டு செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்ய வேண்டும்.. அதற்குள் கார் என்னை அழைத்து செல்ல நள்ளிரவில் அங்கே தயாராக இருக்கும்.. முதலிரவு முடிந்ததுமே தப்பிச்செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தால், கிளம்பி விட வேண்டும்.. ஒருவேளை மாப்பிள்ளையை ரூமில் விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்ப முடியாத சூழல் ஏற்பட்டால், பாலில் தூக்க மாத்திரை கொடுத்து விட்டு, பொருட்களை வாரிசுருட்டிக்கொண்டு கிளம்ப வேண்டும்.

 ஆபாச வீடியோ

ஆபாச வீடியோ

இதுவரை ஏமாந்த மாப்பிள்ளை வீட்டார், அவமானங்களுக்கு பயந்து, பெரும்பாலும் புகார் கொடுக்கவில்லை.. எல்லாரும் பெரிய இடத்து பிள்ளைகள் என்பதால், போலீஸ்வரை விவகாரம் செல்லவில்லை.. இதைதான் புரோக்கர்கள் சாதகமாக பயன்படுத்தி கொண்டனர்.. நாமக்கல், கரூர், திருப்பூர், காங்கேயம் பகுதிகளில் திருமண மோசடிகளை செய்துள்ளோம்.. ஆனால், என்னை கட்டாயப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய புரோக்கர் பாலமுருகன் மீது நான் ஏற்கனவே மதுரை போலீசில் புகார் தந்தேன்.. ஆனாலும் போலீசார் அவர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. திருமணம் என்ற போர்வையில் எனக்கு அவர் பல திருமணங்களை அவர் செய்து வைத்து போலீசில் வசமாக சிக்க வைத்து விட்டார்" என்று கண்ணீருடன் கூறினார் சந்தியா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+