பிளாஸ்டிக் கவருக்குள் 7 மாத சிசு.. அதிர்ச்சியில் உறைந்த சிவக்கொழுந்து.. சென்னையில் கொடுமை
Recommended Video

சென்னை: குப்பை தொட்டியில் 7 மாத ஆண் சிசு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சென்னை பேசின்பாலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேசின் பாலம் பகுதியில் இன்று வழக்கம்போல குப்பைகளை அகற்றி தெருக்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார் சிவக்கொழுந்து (பெண்). சிவராஜபுரம் 4 வது தெருவில் அவர் தனது பணிகளை செய்து கொண்டிருந்தபோதுதான், அந்த அதிர்ச்சி காட்சியை அவர் பார்த்தார்.

குப்பை அள்ளும் பிளாஸ்டிக் கவரில் ஒரு பார்சல் இருந்துள்ளது. அதை குப்பை என்று நினைத்து குப்பைகளுடன் குப்பையாக அள்ளிக் கொண்டு, தான் வந்த மூன்று சக்கர மிதி வண்டியில் வைத்து கொண்டு சென்றுள்ளார்.
பேசின் பாலம் குப்பை கிடங்குக்கு சைக்கிளை மிதித்து சென்ற பிறகு, குப்பை கிடங்கில் குப்பையை கொட்டுவதற்காக பிளாஸ்டிக் கவரை திறந்து பார்த்துள்ளார்.
ஆனால், அந்த பைக்குள், 7 மாதமேயான சிசு ஒன்று இறந்த நிலையில் இருப்பதை கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து மேற்பார்வையாளர் தினகரனுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து முறைப்படி, பேசின்பாலம் காவல் நிலையத்திற்கு தகவல் கூறப்பட்டது. பின்பு சம்பவ இடத்திற்கு வந்த பேசின் பாலம் காவல் ஆய்வாளர் ராமசாமி சிசுவின் உடலை கைப்பற்றி ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications