“ஷாக்” கொடுத்த ரயில்வே.. 7 ஸ்டாப்பிங் கட்! வேளாங்கண்ணி - எர்ணாகுளம் நிரந்தர ரயில் நேரம் வெளியீடு
சென்னை: வேளாங்கண்ணி - எர்ணாகுளம் இடையே இயக்கப்பட்டு வந்த விரைவு ரயில் நிரந்திரமாக்கப்பட்டு இருக்கும் நிலையில் வாரம் 2 முறை இயக்கப்படும் ரயில்களின் நேரத்தை தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் - நாகை மாவட்டம் வேளாங்கண்ணி இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் தேதி முதல் வாரந்தர சிறப்பு விரைவு ரயில் எர்ணாகுளத்தில் புறப்பட்டு வேளாங்கண்ணி வரை சென்று மீண்டும் எர்ணாகுளத்திற்கு சென்று வருகிறது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் கோட்டையம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவலிக்கரா, காயங்குளம், சாஸ்தா கோட்டா, கொல்லம், குந்தாரா, கொட்டாரக்கரா, புனலூர், தென்மலை ஆகிய கேரள மாநில ரயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றி இறங்கும்.
அதை தொடர்ந்து தமிழ்நாட்டின் செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு ஞாயிற அதிகாலை 05.50 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடையும்.
இந்த ரயில் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு வேளாங்கண்ணியில் புறப்பட்டு இதே வழித்தடத்தின் வழியாக திங்கள் அன்று காலை 11. 40 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சென்றடையும். வாரம் ஒரு முறை மட்டும் இயங்கி வந்த இந்த சிறப்பு விரைவு ரயிலை ஏராளமான பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தன.
இந்த நிலையில் இந்த ரயிலை வாரம் இரு முறை செல்லும் வகையில் நிரந்தரமாக இயங்கும் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி எர்ணாகுளம் வேளாங்கண்ணி விரைவு ரயில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் சனிக்கிழமை பகல் 1.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணியை வந்து அடையும்.
அதன் பின்னர் வேளாங்கண்ணியில் ஞாயிறு மாலை 06.40 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டு திங்கள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளத்தை வந்தடையும். மீண்டும் எர்ணாகுளத்தில் இருந்து திங்கள் நண்பகல் 1.00 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை 05.45 மணிக்கு வேளாங்கண்ணியை வந்தடையும்.
மீண்டும் செவ்வாய்க்கிழமை மாலை 6:40 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை காலை 11.40 மணிக்கு எர்ணாகுளத்தை ரயில் வந்தடையும். இந்த ரயில் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் நிரந்தர ரயிலாக இயக்கப்படும் என்று அறிவித்துள்ள தெற்கு ரயில்வே அந்தந்த ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் நேர பட்டியலையும் வெளியிட்டு உள்ளது.

ஆனால், முன்பு நிறுத்தப்பட்ட பல ரயில் நிலையங்கள் நீக்கப்பட்டு கோட்டையம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், காயங்குளம், கொல்லம், கொட்டாரக்காரா, புனலூர், செங்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் மட்டுமே ரயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில் மாவலிக்கரா, சாஸ்தா கோட்டா, குந்தாரா, தென்மலை ஆகிய ரயில் நிலையங்கள் இந்த பட்டியலில் நீக்கப்பட்டு உள்ளன. அதேபோல், தமிழ்நாட்டில் கடையநல்லூர், சங்கரன்கோவில், அதிராம்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் ஏற்கனவே ரயில் நிறுத்தப்பட்டு வந்த நிலையில் நிரந்தர ரயில் நிறுத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications