நிர்மலா முதல் மோடி வரை.. தமிழ்நாடுதான் போகஸ்.. திமுக மீதுதான் அட்டாக்! ஏன் தெரியுமா? 7 ஷாக் காரணம்
சென்னை: சமீப காலமாக நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் திமுகவை பாஜக தலைவர்கள் குறி வைத்து தாக்கி பேசி வருவது கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
தேசிய அளவில் மாநில கட்சிகள், எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக கைகோர்க்க தொடங்கி உள்ளன. திமுக, காங்கிரஸ் , ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்தனர். இதற்காக பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. கடந்த கூட்டத்தில் 14 கட்சிகள் பீகாரில் உள்ள பாட்னாவில் கலந்து கொண்ட நிலையில் இந்த முறை கூடுதல் கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்டன.

இவர்களின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் அந்தமானில் போர்ட் பிளேயர் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 24 கட்சிகள் கலந்து கொண்ட நிலையில் திமுகவை மட்டும் குறிப்பிட்டு தனியாக தாக்கி பிரதமர் மோடி விமர்சனம் செய்தார்.
அதில், எதிர்க்கட்சிகள் தங்களின் தனிப்பட்ட ஆதாயங்களில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றன என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, பெங்களூருவில் ஊழல்வாதிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஊழல் வழக்குகள் இருந்தபோதிலும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் திமுகவுக்கு நற்சான்றிதழை கொடுத்துள்ளன.
அரசு என்பது குடும்பத்திற்காக குடும்பம் மூலம் நடத்தப்படுவது என்பதே இவர்களின் முழக்கம். ஊழல்வாதிகளைப் பாதுகாக்க இப்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைகின்றன.. அவர்களுக்கு குடும்பம் தான் முதன்மையானது, தேசம் ஒன்றும் இல்லை, என்று திமுகவை தாக்கி பேசி உள்ளார்.
நாடாளுமன்றம் பாஜக அட்டாக்: இதையடுத்து நாடாளுமன்றத்திலும் கடந்த 2 நாட்களாக திமுகவை பாஜக தலைவர்கள் தாக்கி பேசினார்கள். நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசுகையில், தமிழ்நாட்டை எதிர்க்கட்சிகள் இந்தியாவிலிருந்து பிரித்து பேசி வருகிறார்கள் விவாதத்தில் அனைவரது கருத்தையும் கேட்டேன். இந்த வாய்ப்பு கடவுள் கொடுத்த வாய்ப்பாக கருதுகிறேன்.
2 தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் அமைச்சர் ஒருவர் இது இந்தியா பற்றிய பிரச்சனை அல்ல தமிழ்நாடு பற்றியது என்று ஒரு விஷயத்தை குறிப்பிடுகிறார் பெரிய தலைவர்களை கொடுத்த தமிழ்நாட்டில் இருந்து இப்படியான அமைச்சர்களும் வந்திருக்கிறார்கள்.
வட இந்தியா தான் 'இந்தியா' என்கிறார் திமுக அமைச்சர் ஒருவர்; தமிழ்நாடு இந்தியாவின் அங்கம் இல்லையா?; ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர், அப்துல் கலாம் ஆகியோர் பிறந்த தமிழ்நாட்டை எப்படி பிரித்து பார்க்க முடியும்?, என்று மோடி பேசி உள்ளார். சமீபத்தில் இந்தியா, வடஇந்தியா குறித்து ஏ வ வேலு பேசியதை விமர்சனம் செய்து பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டு விமர்சித்து உள்ளார்.
திமுக : நாடாளுமன்றத்தில் நேற்று நடத்த விவாதத்திலும் சரி, இன்று நடத்த விவாதத்திலும் சரி.. தொடர்ச்சியாக திமுகவை பாஜக அமைச்சர்கள் தாக்கி பேசினார்கள். மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கொண்டு வந்திருந்தாலும் கூட.. திமுக மீதுதான் கடுமையான தாக்குதல் நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்டது.
மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நடந்த விவாதத்தில் இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்து பேசினார். அதில், நாம் திராவிடர் அல்லர்- நாம் தமிழர்- நம் தாயகம் தமிழ்நாடு- திராவிடம் அல்ல- அந்தணர் ஆரியர் அல்ல என சிலப்பதிகாரம் சொல்வதாக ம.பொ.சிவஞானம் கூறியிருக்கிறார். சிலப்பதிகாரத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துபவர் பிரதமர் மோடி. ஒரே பாரதம் உன்னத பாரதம் என சொன்னது சிலப்பதிகாரம்- அதை செயல்படுத்துகிறார்.
திரெளபதி பற்றி பேசுகிறீர்களே. ஜெயலலிதாவின் சேலையை தமிழ்நாட்டு சட்டசபையில் துகிலுரித்தீர்களே. ஜெயலலிதாவை சட்டசபையில் தாக்கியது திமுக. ஜெயலலிதா சபதம் எடுத்து முதல்வரான பின்னரே சட்டசபைக்கு வந்தார். 1989 மார்ச் 25-ந் தேதி ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்த கட்சி திமுக, என்று திமுகவை விமர்சனம் செய்து நிர்மலா சீதாராமன் பேசினார்.
நேற்றும் திமுக மீது விமர்சனம்: நேற்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்திலும் அமைச்சர் ஸ்மிரிதி இராணி திமுகவை விமர்சனம் செய்தே பேசினார். நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசியதும் அவரை குறுக்கிட்டு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பேசினார். இதில் தமிழ்நாடு பற்றி அவர் பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் தனது பேச்சில், நீங்கள் இந்தியா இல்லை, ஏனெனில் இந்தியா என்பது ஊழல் இல்லை. இந்தியா என்பது வாரிசு அரசியலில் நம்பிக்கை கொள்ளவில்லை. மாறாக இந்தியா என்பதை மெரிட் அரசியலை, தகுதியை விரும்புகிறது . உங்களைப் போன்றவர்கள் ஆங்கிலேயர்களிடம் சொன்னதை இன்று நினைவில் கொள்ள வேண்டும் - இந்தியாவிலிருந்து வெளியேறு. இந்தியா ஊழலிருந்து வெளியேறு , இந்தியா வாரிசு அரசியலில் இருந்து வெளியேறு, இந்தியா கூட்டணி இதில் இருந்தெல்லாம் வெளியேற வேண்டும்.
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் மிக மோசமான பேச்சுக்கு எனது கண்டனங்களை தெரிவிக்கிறேன். எதிர்க்கட்சிகள் இந்தியா கிடையாது, நீங்கள் ஊழல்வாதிகள், ஊழலை கண்டுபிடித்தவர்கள். மணிப்பூர் பிரிக்கப்பட்டதாக, பிளவு அடைந்துவிட்டதாக ராகுல் காந்தி கூறினார். மணிப்பூரை பிரிக்க முடியாது. அது இந்தியாவின் ஒரு பகுதி. பிரிக்க முடியாது.

நீங்கள் மணிப்பூரை பற்றி பேசும் முன் தமிழ்நாட்டை பற்றி பேசுங்கள். எங்களை பற்றி பேசும் முன் உங்கள் கூட்டணி திமுக பற்றி பேசுங்கள். ஊழலை பற்றி பேசும்போது, உங்கள் கூட்டணியில் இருக்கும் திமுகவை பாருங்கள். நீங்கள் இந்தியாவிற்கு ஊழலை அறிமுகம் செய்த கட்சி.தமிழ்நாட்டில் உங்கள் கூடவே இருக்கும் திமுகவை பாருங்கள். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பண்டீட்டுகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு அவர்களுக்கு எப்போது நீதி வழங்குவீர்கள்., என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பேசி உள்ளார்.
என்ன காரணம்?: திமுகவை மட்டும் இப்படி பாஜகவினர் தாக்க பின்வரும் விஷயங்கள் காரணமாக கூறப்படுகின்றன. அதன்படி 1. எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பதில் திமுக பங்கு வகிக்கிறது. 2. பல மாநிலங்களில் பாஜக தோல்வி அடைய காரணமான பெண்களுக்கு ரூ.1000, இலவச பஸ் போன்ற திட்டங்களின் மாஸ்டர்மைண்ட் திமுகதான். 3. தமிழ்நாட்டில் உள்ள கூட்டணி பார்முலாவை தேசிய அளவில் கொண்ட செல்ல திமுக நினைக்கிறது.
4. காங்கிரஸ் கட்சியுடன் நட்பாக உள்ள திமுக மற்ற கட்சிகள் காங்கிரசுடன் இணைய பாலமாக உள்ளது. 5. தேசிய அளவில் எப்படி கூட்டணி உருவாக்க வேண்டும் என்பதற்கான அடிப்படை கொள்கைகளை வழங்குகிறது. 6. கொள்கை ரீதியாக பாஜகவை பெரிதாக கட்சிகள் எதிர்க்காத நிலையில் திமுகவின் கொள்கை பாஜகவின் கொள்கைக்கு அப்படியே எதிராக உள்ளது. 7. மாநில சுயாட்சி என்ற கொள்கையை பல மாநிலங்களுக்கு கடத்துகிறது.. இந்த 7 விஷயங்கள்தான் பாஜகவை அச்சறுத்துவதால் நேரடியாக திமுகவை மோடியே தாக்க தொடங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது.இப்போது நாடாளுமன்றத்தில் தாக்கி பேசிய மோடி சமீபத்தில்தான் போபாலிலும் திமுகவை தாக்கி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications