சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திடீர்னு நொறுங்கி உடைந்து கண்ணீர் விட்ட பிரேமலதா.. விஜயகாந்த் ஹெல்த் + அந்த தங்கமான மனசு.. என்னாச்சு

தேமுதிக விஜயகாந்த் குறித்து பிரேமலதா உருக்கமான பேட்டி ஒன்று தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: விஜயகாந்த் உடல்நிலை குறித்தும், அவரது குணநலன்கள் குறித்தும், பிரேமலதா விஜயகாந்த் உருக்கத்துடன் பேசியுள்ளது, தேமுதிக தொண்டர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு உடல்நலம் சரியில்லை.. அவரது பிறந்தநாள் மற்றும் சுதந்திர தினத்தன்று தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்.

இந்நிலையில், ஒரு தனியார் டிவிக்கு பிரேமலதா விஜயகாந்த் ஒரு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் பல உருக்கமான தகவல்களை தெரிவித்துள்ளார். அதன்சுருக்கம்தான் இது:

ஒரு வார்த்தை ட்வீட்.. கனிமொழி, விஜயகாந்த் போட்ட ஒற்றை வார்த்தை என்ன தெரியுமா? ஒரு வார்த்தை ட்வீட்.. கனிமொழி, விஜயகாந்த் போட்ட ஒற்றை வார்த்தை என்ன தெரியுமா?

 ஆக்டிவ்

ஆக்டிவ்

"அவரது உடல்நிலையை பார்த்து தொண்டர்கள் அழுவதாக சொல்கிறார்கள்.. உண்மைதான்.. எல்லாருக்குமே அந்த கவலை இருக்கு.. அவரை மாதிரி ஒரு ஆக்டிவ் நபர் யாரும் இல்லை.. அவரது இடத்தை நிரப்ப இன்னும் யாரும் வரவில்லை.. ஆனால் வெளியே வரவேண்டும், தன் தொண்டர்களை சந்திக்க வேண்டும் என்று அவர்தான் விரும்பினார்.. அதனால்தான் அழைத்து வந்தோம்.. ஆனாலும், நடப்பதிலும், பேசுவதிலும் குறைபாடு இருக்கிறது.. அது இல்லை என்று மறுக்க முடியாது.. 70 வயது ஆகிவிட்டது.. எல்லா வகையான சிகிச்சையும் தரப்பட்டுள்ளது.. இப்போதும் சிகிச்சை நடக்கிறது.. இப்போது அவர் நல்லாவே இருக்கார்

 குலுங்கி குலுங்கி கண்ணீர்

குலுங்கி குலுங்கி கண்ணீர்

விஜயகாந்த்தை பொறுத்தவரை, தொண்டர்களுக்கான தலைவர்.. தொண்டர்களுக்கான தலைவர்.. எத்தனை வருஷமானாலும் அப்படித்தான் இருப்பார்.. இவர் தேர்தல் பிரச்சாரங்களுக்கு செல்லும்போதும், பொதுக்கூட்டஙகளிலு கலந்துகொள்ளும்போதும், மக்கள் இவரை பார்க்கும் போதெல்லாம் அடையும் உற்சாகத்தை சொல்ல முடியாது.. இப்போ மறுபடியும் தொண்டர்களை சந்திக்கிறார்.. அதைகூட தவறு என்கிறார்கள்..

கேப்டன்

கேப்டன்

தொண்டர்களை பார்க்கணும் என்று அவர்தான் விரும்புகிறார்கள்.. ஆனால், ஏன் அவரை கூட்டிட்டு வந்தீங்க? ஏன் கஷ்டம் தர்றீங்க என்று கேட்கிறார்கள்.. சரி, வீட்டிலேயே ஓய்வெடுக்கட்டும் என்று நினைக்கிறோம்.. ஆனால், கேப்டனை எங்க கண்ணிலேயே காட்டுவதில்லை என்கிறார்கள்.. வெளியில் அழைத்து வந்தாலும் குறை, அழைத்து வராவிட்டாலும் குறை சொல்றாங்க.. தொண்டர்கள், மா.செ.க்கள் அவரை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.. தொண்டர்களிடம் என்னை அழைத்து செல்லுங்கள் என்று விஜயகாந்த் சொன்னதால்தான், பாதுகாப்பாக அழைத்து வருகிறோம்.

 விஜயகாந்த்

விஜயகாந்த்

ஆனால், அதை நெகட்டிவ்வாக மீடியாக்களில் சொல்கிறார்கள். கேப்டன் விரும்புவதை நாங்கள் செய்கிறோம்.. அவ்வளவுதான். இந்த முறை 75வது சுதந்திர தினம்.. அது சாதாரண சுதந்திர தினம் இல்லை.. விஜயகாந்த் தேசக்தி மிக்கவர்.. நிறைய படங்களிலும் தன் தேசபக்தியை வெளிப்படுத்தியிருப்பார்.. அதனால்தான், 116 அடி உயரத்தில் தேசிய கொடியை அன்று ஏற்றினோம்.. இதை வேறு கட்சியினர்கூட யாரும் செய்யவில்லை.. இதை பற்றி எல்லாம் மீடியாவில் எழுதுவதில்லை.. தேசிய கொடியை ஏற்றிவிட்டு, ஆனந்த கண்ணீர் வடித்தார்.. அதையும் தவறாக புரொஜக்ட் செய்கிறார்கள்..

 பாக்கியம்

பாக்கியம்

பிறந்தநாள் அன்றும், தொண்டர்களை சந்தித்ததில் அவருக்கு நிறைய மகிழ்ச்சி.. வீட்டுக்கு சென்றபிறகும்கூட அதை பற்றி நிறைய எங்களிடம் சொல்லி கொண்டே இருந்தார்.. டிவியில்கூட பிறந்தநாள் நிகழ்ச்சியை பார்த்து கொண்டே இருந்தார்.. தொண்டர்கள் என்றாலே அவருக்கு குஷி வந்துவிடும்.. பெரிய பாக்கியமே தொண்டர்கள்தான் எங்களுக்கு.. சினிமா, அரசியல், பொதுமக்கள் என எந்த தரப்பிலும், இதுவரை அவரை யாருமே பிடிக்கல என்று சொன்னது இல்லை.. அவருக்கு எத்தனையோ பேர் துரோகம் செய்தார்கள்.. முதுகில் குத்தினார்கள்.. கூடவே இருந்து குழி பறித்தார்கள்.. ஆனால் அவர்களும் இன்று கேப்டன் நல்லா இருக்கணும் என்கிறார்கள்.

 கண்ணீர் துளி

கண்ணீர் துளி

அவரது உடல்நிலை குறித்து கேள்வி கேட்கிறீர்கள்.. இதற்கு என்னால் அழாமல் பதில் சொல்ல முடியுமா என்று தெரியாது (குரல் உடைந்து கண்ணீர் சிந்துகிறார்).. முடிந்தவரை அழாமல் பதில் சொல்கிறேன்.. அவருக்கு அம்மா இல்லை.. ஒரு வயதாக இருக்கும்போதே அம்மா இறந்துவிட்டார்.. திருமணம் ஆனதும், என்னிடம் அவர் சொன்ன முதல் வார்த்தை, எனக்கு நீ தாயாக இருக்க வேண்டும் என்பதுதான்.. இந்த நிமிடம்வரை மனைவி என்பதையும் தாண்டி அம்மாவாகவே அவரை பார்த்து கொள்கிறேன்" என்று அந்த பேட்டி தொடர்கிறது.

English summary
70 Vijayakanth: Captain Vijakanth is a patriot and Wants to meet DMDK volunteers, says Premalatha Vijayakanth தேமுதிக விஜயகாந்த் குறித்து பிரேமலதா உருக்கமான பேட்டி ஒன்று தந்துள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X