விஜயகாந்த் ரெடியாயிட்டார் போல.. "யார்கிட்டயும் காசு வாங்கல, வசூல் பண்ணல".. பறந்த லெட்டர்.. செம ஹேப்பி
விஜயகாந்த் தன்னுடைய தொண்டர்களுக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்
சென்னை: விஜயகாந்த் தொண்டர்களுக்கு ஒரு லெட்டர் எழுதியுள்ளார்.. அதில், "தேமுதிக துவங்கிய நாள் முதல் இன்று வரை யாரிடமும் பணத்தை வசூல் செய்யாமல், சொந்த உழைப்பில் வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தைக் கொண்டுதான் கட்சியை வளர்த்து வருகிறோம் என்றும் இதற்கு நமக்கு கிடைத்த கழகத்தின் நரம்புகளாகவும், ரத்த நாளங்களாகவும் செயல்படும் தொண்டர்கள்தான் காரணம் என்றும் பூரித்து தெரிவித்துள்ளார்.
70 வது பிறந்தநாள் விழாவில், விஜயகாந்த்தை நேரில் பார்த்து தொண்டர்களும் ரசிகர்களும் பூரித்து போயுள்ளனர்.. இந்நிலையில், எம்பி தேர்தலுக்கு தேமுதிக தயாராகி வருகிறது.. இது தொடர்பான முக்கிய ஆலோசனையை, விஜயகாந்த் குடும்பத்தினர் நடத்தியதாக தெரிகிறது.
அப்போது, அந்த ஆலோசனையின்போது, விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், சுதீஷ், பிரேமலதா உள்ளிட்ட மிக முக்கியமானவர்களே கலந்து கொண்டதாக கூறப்பட்டது.

IDEA + 2
விஜயபிரபாகரன் பிரேமலதாவிடம், "2011 வெற்றிக்கு பிறகு, தேமுதிகவில் ஜெயலலிதா விளையாடியதால் நம் கட்சி எம்எல்ஏக்கள் சோரம் போனார்கள்... ஆனாலும் 2016 வரை தேர்தல் வரை கட்சியை தூக்கி நிறுத்த முடிந்தது. அதன் பிறகு நமக்கான வெற்றிங்கிறது இல்லாமலே போய்விட்டது. அதற்கு காரணம் அப்பாவின் உடல்நிலைதான். அப்பாவின் உடல்நிலை மற்றும் கட்சியில் வெற்றி இல்லாத நிலை எல்லாம் சேர்ந்து நம் கட்சி தொண்டர்களை சோர்வடைய வைத்து விட்டது. கடந்த 6 ஆண்டுகாலமாக தேர்தல் செலவுகளை செய்து மனமுடைந்து போயிருக்கிறார்கள்.

IDEA + 2
அடிமட்டத்தில் வேலை செய்ய ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள். முதலில் அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில், தலைமையிலிருந்து ஏதேனும் செய்தாக வேண்டும். அதற்கான செயல்திட்டத்தை வரும் புத்தாண்டில் இருந்து துவங்க வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார்... அதுமட்டுமல்ல, தேர்தல் பணிகள் துவங்கி விட்டால் நிறைய அறிக்கைகள், அறிவிப்புகள், உத்தரவுகள் என பல்வேறு விஷயங்கள் தலைமைக்கழகத்தில் இருந்து தரப்பட வேண்டும்" என்பன உட்பட கட்சி தலைமை, நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட பல விஷயங்களை விவாதித்துள்ளார். இதற்கெல்லாம் பிரேமலதாவும் ஆமோதித்ததாக கூறப்பட்டது.

காசில்லை
இந்நிலையில், திடீரென தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. தேமுதிக 18வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி, விஜயகாந்த் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.. அதில் உருக்கமான சில விஷயங்களையும் பதிவு செய்துள்ளார்.. இந்த அறிக்கையானது தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருவதுடன், நம்பிக்கையையும் துளிர்க்க வைத்துள்ளது.. அந்த அறிக்கை இதுதான்: "பல்வேறு சவால்களைத் தாண்டி நல்ல நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட கட்சி நமது தேசிய முற்போக்கு திராவிட கழகம். நமது கட்சி தொடங்கி 17 ஆண்டுகள் முடிவைடந்து நாளை (செப்.14) 18-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

விஜயகாந்த் லெட்டர்
கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தொடங்கப்பட்ட தேமுதிக தொடர்ந்து மக்களுக்காக மக்கள் பணி ஆற்றி தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் தனக்கென ஓர் இடத்தை பிடித்துள்ளது. தேமுதிகவிற்கு என்றுமே ஒரு தனி வரலாறு உண்டு. தேமுதிக சாதி, மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட கட்சியாக தமிழ்நாட்டில் துவங்கப்பட்டது. தமிழ்நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு துவங்கப்பட்ட இயக்கமாகும்.

முற்றுப்புள்ளி
எந்தக் கட்சியில் இருந்தும் பிரிந்து வராமல் சாதி, மதத்தை வைத்து கட்சி ஆரம்பிக்காமல் சுயம்புவாக மக்களுக்காவே ஆரம்பிக்கப்பட்ட நமது கட்சி இன்றைக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தமிழகம் முழுவதும் கிளைகள் மற்றும் பூத்துகளை அமைத்து வெற்றிநடை போடுகிறது. லஞ்சம், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக அனைத்து துறைகளிலும் முன்னேற்ற உறுதி கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்சி தேமுதிக.

விஜயகாந்த்
லட்சக்கணக்கான தொண்டர்களின் உண்மையான உழைப்பால் உருவான நமது கழகம், முதலில் ரசிகர் மன்றமாக ஆரம்பிக்கப்பட்டு, 2000-மாவது ஆண்டு ரசிகர் மன்றத்திற்கு என கொடி அறிமுகப்படுத்தி பின்னாளில் அரசியல் கட்சியாக மாறி மக்களின் ஆதரவோடு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சியாக உயர்ந்தது. இதற்கு உண்மையான தொண்டர்களும், நிர்வாகிகளும் தமிழக மக்களும்தான் காரணம். என் தொண்டர்கள் என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியமாக நான் கருதுகிறேன்.

ரத்த நாளங்கள்
கட்சி துவங்கிய நாள் முதல் இன்று வரை யாரிடமும் பணத்தை வசூல் செய்யாமல், சொந்த உழைப்பில் வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தைக் கொண்டுதான் கட்சியை வளர்த்து வருகிறோம். இதற்கு நமக்கு கிடைத்த கழகத்தின் நரம்புகளாகவும், ரத்த நாளங்களாகவும் செயல்படும் தொண்டர்கள்தான் காரணம். எத்தனையோ வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள், சூழ்ச்சிகள், வந்தபோதும் பல சவால்களை சந்தித்து தற்போதும் வீறுநடை போடுகிறது நமது கழகம். தோல்வி என்பது சறுக்கல்தானே தவிர அது வீழ்ச்சி அல்ல. எனவே வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவின் பலத்தை நாம் அனைவருக்கும் நிச்சயமாக நிரூபிப்போம்" என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications