"ஏ.. தள்ளு".. ஒரே செகண்டில் தவியாய் தவித்த விஜயகாந்த்.. டக்கென கூலிங் கிளாஸை கழட்டி.. யார் அந்த பெண்
கூலிங்கிளாஸை கழட்டி, தொண்டர்களை உற்று நோக்கினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன்னுடைய கட்சி ஆபீசில் என்ட்ரி ஆனதுமே, கோயம்பேடு பகுதியே திக்குமுக்காடிவிட்டது..!
சுதந்திர தினத்தன்று கொடியேற்றுவதற்கு விஜயகாந்த் அழைத்து வரப்பட்டிருந்தார்.. வேனில்தான் உட்கார வைக்கப்பட்டிருந்தார். அவரால் நேராக நிமிர்ந்து உட்காரகூட முடியவில்லை.. அவரது தோளை பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார் பிரேமலதா.
தேசிய கொடி ஏற்றும்போது, இரு கைகளாலும் ஏற்ற முயன்றார்.. அப்போது விஜயகாந்த் அப்படியே சாய்ந்து விழ போனார்.. உடனே பிரேமலதா, ஒரு கையால் விஜயகாந்த்தை இழுத்து பிடித்து கொண்டு இன்னொரு கையால் கொடியேற்றினார்..

ப்ளீஸ் விடுங்க
தேசிய கொடிக்கு இப்படியா மரியாதை செலுத்துவது என்ற விமர்சனங்கள் அப்போது எழுந்தன.. பிறகு, கூலிங் கிளாஸ் போட போனார்.. ஆனால் விஜயகாந்தால் போட்டுக் கொள்ள முடியவில்லை. பிரேமலதா தான் கண்ணாடி எடுத்து அவருக்கு மாட்டிவிட்டார்.. கடைசிவரை அவரை கீழே விழாதவாறு பிடித்துக் கொண்டே நின்றார் பிரேமலதா.. இதையெல்லாம் பார்த்து, தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுதே விட்டனர்.. இந்த நிலைமையில் அவரை வெளியே அழைத்து வர வேண்டுமா? இதெல்லாம் வன்கொடுமையில் சேராதா? அவரை இப்படி துன்புறுத்தி அரசியல் செய்ய வேண்டுமா? அவரை விடுங்க ப்ளீஸ்" என்று ஆதங்கத்தை கொட்டினார்கள்.

கோயம்பேடு ஆபீஸ்
இந்நிலையில், நேற்றைய தினம் மறுபடியும் ஒரு அறிவிப்பு வெளியிட்டார் பிரேமலதா.. இன்றைய தினம், விஜயகாந்த் பிறந்த நாள் என்பதால், கட்சி ஆபீசுக்கு வரப்போவதாகவும், அவரது உடல்நிலை நன்றாக உள்ளது, யாரும் தேவையில்லாமல் வதந்தியை பரப்பாதீர்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.. மறுபடியும் விஜயகாந்த்தை கோயம்பேடு ஆபீசுக்கு அழைத்து வரப்போகிறார்களா? என்ற அக்கறை மிகுந்த வருத்தம் இருந்தாலும், விஜயகாந்த்தை மீண்டும் பார்த்துவிட வேண்டும் என்று அவரது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சென்னையை நோக்கி திரண்டனர்.

கோயம்பேடு
வழக்கமாக தனக்கு பிறந்தநாள் என்றால், அதை தொண்டர்களுடன் சேர்ந்து கொண்டாடுவது விஜயகாந்த்தின் வழக்கம்.. சினிமாவில் ஆரம்ப காலத்தில் இருந்தே, பலருக்கும் உதவியவர் விஜயகாந்த்.. கண்ணுக்கு தெரிந்த மற்றும் கண்ணுக்கு தெரியாத எத்தனையோ பேருக்கு வாழ்வும், சோறும் போட்டவர்.. அதேசமயம், அரசியலுக்கு வந்தபிறகு, தன்னுடைய பிறந்த நாளை ஒவ்வொரு வருடமும் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகிறார். இந்த நாளில், கூடுதல் நலத்திட்டங்களை வழங்குவது விஜயகாந்த்தின் இயல்பு.. எனவே, அவரது தொண்டர்கள் விஜயகாந்த்தை நேரில் சந்திக்க காலையிலேயே கட்சி ஆபீசில் திரண்டனர்.

ஆக்டிவ் நபர்
விஜயாந்த் வருகைக்கு முன்னதாக, அவரது தொண்டர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஒரு நல்ல தலைவன் வேண்டுமானால், அதற்கு ஒரு யுகமே தேவைப்படும் என்பார்கள்.. ஆனால், எங்களுக்கு இந்த யுகத்திலேயே நல்ல மனிதரும், நல்ல தலைவரும் ஒருசேர கிடைத்துவிட்டர்க்ள்.. இதைவிட வேறென்ன எங்களுக்கு வேண்டும்? விஜயகாந்த் வழியில் நாங்கள் பயணிப்பதை பெருமையாக நினைக்கிறோம்.. அவர் இப்போதுகூட ஆக்டிவ்வாகவே இருக்கிறார்.. அவரால் எழுந்து நிற்க முடியவில்லை, உடல் மோசமாகிவிட்டது என்று மற்றவர்கள் தான் சொல்கிறார்கள். ஆனால், அப்படியெல்லாம் அவர் இல்லை.. நாங்கள் பேசுவது எல்லாம் அவருக்கு எல்லாமே புரிகிறது.. நாங்கள் ஏதாவது கேட்டாலும், உடனே பதில் சொல்கிறார்.. நாங்கள்தான் நேர்லேயே பார்க்கிறோமே.. இன்றைய தினம் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கேக் வெட்டியுள்ளோம்.. பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி வருகிறோம்" என்றனர்.

தெய்வம்
இதில் தேமுதிக மகளிர் அணியினர்தான் அனைவரையும் திகைக்க செய்துவிட்டனர்.. காலையிலேயே திரண்டு கால் கடுக்க நின்றிருந்தனர்.. இவர்கள் விஜயகாந்த்தை பற்றி சொல்லும்போது, "தலைவர்" என்றுகூட சொல்லவில்லை.. "தெய்வம்" என்று குறிப்பிட்டுதான் செய்தியாளர்களிடம் பேச்சையே தொடங்கினர்.. "தெய்வ தரிசனத்துக்காக எப்படி மக்கள் வரிசையில் காத்திருப்பார்களோ, அப்படி நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.. எங்க ஆயுசைகூட அவருக்காக நாங்கள் தந்துடறோம்.. 200 வருஷம் கேப்டன் வாழ வேண்டும்.. அவரை நாங்கள் ரொம்ப மிஸ் பண்றோம்.. அவரை பார்க்காத ஒவ்வொரு நாளும், எங்கள் உயிரே எங்களை விட்டு போன மாதிரி இருக்கு..

கண்ணீர் + அழுகை
அவரை பார்க்கும்போதுதான், இழந்த உயிர் மறுபடியும் எங்களுக்கு வருகிறது.. எங்களுக்கு சாப்பாடு வேணாம், ஒன்னும் வேணாம்.,. எங்க கேப்டனை ஒரு நாளைக்கு ஒருமுறை எங்க கண்ணில் காட்டினால் போதும்.. மக்களே, மக்களே என்று அவர் கூப்பிடு அந்த வார்த்தைக்காக ஏங்கி கிடக்கிறோம்" என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.. இதெல்லாம் நின்று கேட்டுக் கொண்டிருந்த, மகளிர் அணியை சேர்ந்த இன்னொரு பெண், விஜயகாந்த் பற்றி சொல்ல சொல்ல அழுது கொண்டே இருந்தார்.. அவரால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.. அவரால் பேசவும் முடியவில்லை.. நிகழ்ச்சிமுடியும்வரை மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார்.

ஒயிட் & ஒயிட்
சரியாக 12 மணிக்கு விஜயகாந்த் அழைத்து வரப்பட்டார்.. ஒயிட் & ஒயிட், கூலிங்கிளாஸ் சகிதம் ஆஜரானார்.. நெற்றியில் வழக்கம்போல் திருநீறு வைத்திருந்தார்.. கூட்டத்தினரை பார்த்து "தம்ப்ஸ்அப்" சின்னத்தில் விரல் காட்டினார்.. பிறகு இரு கைகளையும் கூப்பி கூட்டத்தினருக்கு வணக்கம் சொன்னார்.. ஆனால், 10 விரல்களையும் ஒன்றாக சேர்த்து அவரால் வணக்கம் தெரிவிக்க முடியவில்லை.. பிறகு, இரு கைகளையும் தலைக்கு மேல் குவித்து வணக்கம் சொல்லி கொண்டே இருந்தார்.

"தள்ளு.. தள்ளு"
ஆனாலும், முன்பு போலவே, அடிக்கடி, நாற்காலியில் இருந்து சாய்ந்து விழப்போனார்.. எனவே, ஒருவர் அவரது விஜயகாந்த் தோளை, எந்நேரமும் அழுத்தி தாங்கிப்பிடித்து கொண்டிருந்தார்.. ஒருகட்டத்தில், அவரது அருகில் இருந்த நிர்வாகிகள், விஜயகாந்த்தை சுற்றி நெருக்கமாக நின்று கொண்டனர்.. இதன் காரணமாக, தொண்டர்களை விஜயகாந்த்தால் பார்க்க முடியவில்லை. உடனே, பக்கத்தில் இருந்த நபரின் கையை பிடித்து "தள்ளு.. தள்ளு" என்று சொல்லி நகர சொன்னார்.

கூலிங் கிளாஸ்
இதனை பார்த்த தொண்டர்கள் கரகோஷம் எழுப்பி கூச்சலிட்டனர்.. பிறகு, திடீரென விஜயகாந்த், தான் அணிந்திருந்த கூலிங் கிளாஸை லேசாக எடுத்துவிட்டு, தொண்டர்களையே ஒரு நிமிஷம் உற்று நோக்கினார். இதை பார்த்ததும் தொண்டர்கள் இன்னும் சத்தமாக கூச்சலிட்டு, ஆரவாரம் செய்தார்கள்.. ஆனால் அதற்குள் அருகில் இருந்தவர், அந்த கூலிங் கிளாஸை விஜயகாந்த்துக்கு அணிவித்து விட்டார்.. தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் செல்போனில் ஆசைதீர தொண்டர்கள், விஜயகாந்தை வீடியோ எடுத்துக் கொண்டனர்.

ஹேப்பி பர்த்டே கேப்டன்
பொதுவாக, ஒரு தேர்தலில் தோல்வி அடைந்தாலே சில கட்சிகளின் அலுவலகம் காலியாகி விடும்.. ஆனால், அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தும், இந்த அளவுக்கு தொண்டர்கள் திரண்டு, கண்ணீருடன் வாழ்த்துகிறார்கள் என்றால், அது விஜயகாந்த்தின் பாசத்துக்காகத்தான்.. ஒரு கட்சி தலைவரை, தலைவர் என்று சொல்லாமல் "தெய்வம்" என்று சொல்கிறார்கள் என்றால், அதுவும் விஜயகாந்தின் ஈர மனசுக்காகத்தான்.. ஹேப்பி பர்த்டே கேப்டன்..!
-
விஜயகாந்த் வெற்றி பெற்ற அதே தொகுதி.. சட்டசபை தேர்தலில் களம் இறங்கும் பிரேமலதா? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications