உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட 70 வயது தாத்தா.. யாரந்த 38 வயது பெண்? சென்னையில் என்ன நடந்தது தெரியுமா
சென்னை: போரூர் நெற்குன்றம் பகுதியில் மகள் வெளியூர் சென்ற சந்தர்ப்பத்தில் வீட்டில் தனியாக இருந்த 70 வயது முதியவரிடம் நெருங்கிய பழக்கமுள்ள ஒரு பெண் வந்தார்.. அன்று நடந்தது என்ன, அதன்பிறகு வீட்டில் என்ன ஆச்சு என்று தெரியுமா?.. மகள் திரும்பி வந்தபோது கண்டது கண்டு அவர் அதிர்ந்து போனார்.. என்ன நடந்தது என்பதை இங்கே பார்க்கலாம்..
சென்னை போரூர், நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் தன்னுடைய மகளுடன் சேர்ந்து வசித்து வருகிறார்.. கோடை விடுமுறை சீசன் என்பதால் கடந்த வாரம் அவருடைய மகள் வெளியூர் புறப்பட்டு சென்றுவிட்டார்.
அதன்பிறகு வீட்டில் தனியாக இருந்த முதியவர், தனக்கு முன்பே பழக்கமான அண்ணா நகர் சாந்தி காலனியை சேர்ந்த ஒரு பெண்ணை போனில் தொடர்பு கொண்டார்.. அவர் பூ வியாபாரம் செய்யும் 38 வயது பெண்.. இருவருக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்கனவே இருந்ததால் முதியவர் அவரை தன்னுடைய வீட்டிற்கே அழைத்து வந்ததாக தெரிகிறது.

தங்கம் நகை மாயம்
வீட்டில் தனிமையில் உல்லாசமாக நேரம் கழித்த இந்தப் பெண், சரியான நேரம் பார்த்து முதியவரின் கவனத்தை திசை திருப்பினார்.. அந்த சமயத்தில் வீட்டு பீரோவை திறந்து அதில் வைத்திருந்த 6½ பவுன் தங்க நகைகளை சுருட்டிக்கொண்டு சீக்கிரமாக அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டாராம். நகைகள் திருடப்பட்ட விஷயமே முதியவருக்கு அந்த நேரத்தில் தெரியவில்லை.. பிறகுதான் தெரியவந்துள்ளது, ஆனால், இந்த விஷயத்தை மகளுக்கும் சொல்லவில்லை.
ஊரிலிருந்து வந்த மகள்
பிறகு நேற்றைய தினம் மகள் வெளியூரிலிருந்து திரும்பி வந்தார்.. ஒரு விஷேச நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நகை எடுக்க பீரோவை திறந்தபோது, அதில் இருந்த தங்க நகைகள் எல்லாம் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.. உடனே தன்னுடைய அப்பாவிடம் விசாரித்திருக்கிறார். ஆனால், முதியவர் நடந்தவற்றை மறைத்துவிட்டு, வீட்டு வேலைக்காக ஒரு பெண்ணை வரவழைத்ததாக மட்டும் சொன்னார்..
கோயம்பேடு போலீஸ் அதிரடி
ஆனாலும் மகள் விடவில்லை... நகை எப்படி மாயமானது என்பது தனக்கு தெரிந்து ஆகவேண்டும் என்று கறாராக சொன்னார். பிறகுதான் விஷயத்தை சொன்னால் பெற்ற தந்தை.
இதனால் அதிர்ச்சியும் கோபமும் அடைந்த மகள், உடனடியாக கோயம்பேடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார்.. போலீசார் வழக்கு பதிவு செய்து உடனடியாக விசாரணை தொடங்கினர்.. சாந்தி காலனியை சேர்ந்த பூ வியாபாரி பெண்ணை கண்டுபிடித்து கைது செய்தனர்.. இந்த சம்பவம் நெற்குன்றம் மற்றும் போரூர் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.. பூ வியாபாரி பெண்ணிடம் விசாரணை நடக்கிறது.. திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டனவா என்பது போலீஸ் விசாரணையில் தெரியவரும்..
தாத்தாக்கள் குறி
சென்னை போன்ற பெரிய நகரங்களில் தனிமையில் வாழும் முதியோர்களை குறிவைத்து நம்பிக்கை வார்த்தைகளால் ஏமாற்றி திருட்டு செய்யும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன..
குடும்பத்தினர் இல்லாத நேரங்களில் முதியோரை மட்டுமே வீட்டில் விட்டுவிட்டு சென்றால் இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நடக்கும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.. நகை பாதுகாப்பு விஷயத்திலும், அந்நியர்களை வீட்டில் அனுமதிப்பதிலும் அதிகமான கவனம் செலுத்த வேண்டும் என்று போலீசாரும் வலியுறுத்துகின்றனர்..!!!












Click it and Unblock the Notifications