அந்த தாத்தா பேரு கேட்டாரு.. இங்கெல்லாம் தொட்டாரு.. 10 வயது குழந்தையை சீரழித்த 73 வயது கொடூரன்!
10 வயது சிறுமியை சில்மிஷம் செய்த 73 வயது நபர் கைது செய்யப்பட்டார்
சென்னை: "அந்த தாத்தா என் பேர் கேட்டாரு.. அப்பறம் என்னை இங்கெல்லாம் தொட்டாரும்மா" என்று சொல்லும்போதே 10 வயது குழந்தை கதறி அழுதாள்.
அம்பத்தூரில் வசித்து வரும் அந்த தம்பதிக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகளுக்கு 10 வயதாகிறது.. இளைய மகளுக்கு 6 வயதாகிறது.. 2 குழந்தைகளும் அங்கிருந்த ஒரு பள்ளியில் படித்து வருகிறார்கள்.

சாயங்காலம் ஆனால், இருவரும் டியூஷன் சென்றுவிடுவார்கள். அப்படித்தான் போன 30-ம் தேதி டியூஷனுக்கு போனார்கள். பிறகு 10 வயது மகள் அழுது கொண்டே வீட்டுக்கு வந்தாள்.
இதனால் என்ன ஆச்சு என்று அம்மா கேட்கவும், "நான் டியூஷன் முடிச்சிட்டு வந்துட்டே இருந்தேன்.. அந்த தெருவில் ஒரு தாத்தா என் பேர் கேட்டார், அப்பறம் இங்கெல்லாம் தொட்டார்" என்று குழந்தை சொல்லும்போதே அழுதுவிட்டாள். இதனால் கொதித்து பெற்றோர், அம்பத்தூர் மகளிர் ஸ்டேஷனில் புகார் தந்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட நபரை விசாரித்தனர். அவர் பெயர் சுந்தரமூர்த்தி, 73 வயதாகிறது.. இதை பற்றி கேட்டதற்கு முதலில் மறுத்தவர், பிறகு போலீசார் தங்கள் பாணியில் கேட்டபிறகு உண்மையை ஒப்புக் கொண்டார். சுந்தரமூர்த்தி வீட்டு வழியாகத்தான் குழந்தை தினமும் டியூஷனுக்கு போவாளாம்.. இதை கவனித்த பிறகுதான், இப்படி காத்திருந்து வேலையை காட்டி உள்ளார்.
இவர் சென்னையில் உள்ள அரசுக் கல்லூரியில் செக்யூரிட்டியாக வேலைபார்த்து ரிடையர் ஆனவராம்.. சிறுமியிடம் சில்மிஷம் செய்த 73 வயது தாத்தா, போக்சோவில் கைதாகி ஜெயிலில் உள்ளார்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications