71 வயசு "பொண்ணுக்கு" 75 வயது நபருடன் லவ்! உடனே கல்யாணத்துக்கு ரெடியான மாப்ளை! ஸ்டோர் ரூமில் ட்விஸ்ட்
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த 71 வயது ருபிந்தர் கௌர் பந்தேர் என்ற பெண்ணுக்கு, 75 வயதான வெளிநாட்டு வாழ் இந்தியர் சந்திரஜித் சிங் க்ரேவால் என்பவருடன் நட்பு ஏற்பட்டது.. இந்த பழக்கமானது காதலில் வந்து முடிந்தது.. பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர்.. இதற்கான திருமண ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தபோதுதான், இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.. என்ன நடந்தது?
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சியாட் பகுதியை சேர்ந்தவர் ருபிந்தர் கவுர் பாந்தர்.. இந்த பெண்ணுக்கு 71 வயதாகிறது.. இந்திய வம்சாவளியான இந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.. ஆனால், விவாகரத்து பெற்று, அமெரிக்காவிலேயே தனியாக வசித்து வந்திருக்கிறார்.

தன்னுடைய பெரும்பாலான நேரத்தை சோஷியல் மீடியாவில் செலவிட்டு வந்துள்ளார்.. அப்போதுதான், ருபிந்தருக்கு, ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த சரஞ்சித் கிங் கிரேவால் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.. 75 வயதாகும் சரஞ்சித், வெளிநாடு வாழ் இந்தியர் ஆவார்.
திருமணமாகி விவாகரத்து
சரஞ்சித்துக்கும் ஏற்கனவே திருமணமாகி, மனைவியை விவகாரத்து செய்துவிட்டு, தனிமையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.. இருவருமே ஒரே மாதிரியான வாழ்க்கைச்சூழலில் உள்ளதால், நாளடைவில் நெருங்கி பழகினார்கள்.. பின்னர் அது காதலாக மாறியது.
ஒருகட்டத்தில் ருபிந்தரை நேரில் பார்க்க ஆசைப்பட்டு, அமெரிக்கா கிளம்பி சென்றார் சரஞ்சித்.. இதுவே பழக்கமாகி, அடிக்கடி ருபிந்தரை பார்த்துவிட்டு வந்தார்.. பிறகு 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்த திருமணத்தை தன்னுடைய சொந்த ஊரான பஞ்சாப் மாநிலம் லுாதியானாவில் நடத்த வேண்டும் என்று ருபிந்தர் ஆசைப்பட்டார்..
தடபுடல் திருமண வேலைகள்
இதற்காக கடந்த ஜூலை மாதமே ருபிந்தர் இந்தியாவுக்கு வந்துவிட்டார்.. தன்னுடைய கல்யாண வேலைகளை தடபுடலாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே ருபிந்தர் மாயமாகிவிட்டார்..
கல்யாண ஏற்பாட்டை செய்வதாக சொல்லி இந்தியாவுக்கு சென்ற ருபிந்தரிடமிருந்து எந்த தகவலும் இல்லாததால் அவரது குடும்பத்தினருக்கு சந்தேகம் கிளம்பியது.. இதனால், ருபிந்தரின் மூத்த சகோதரி கமலா, டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் உதவியை நாடினார்.. தன்னுடைய 71 வயது சகோதரியை காணாமல் போய்விட்டதாக கூறி புகாரும் தொடர்ந்தார்.
சகோதரியை காணவில்லை
இந்த புகாரின்பேரில் ருபேந்தரை தேடும் பணி ஆரம்பமானது.. அப்போதுதான் சரஞ்சித்திடமும் ருபேந்தரை பற்றி விசாரித்து பார்க்கலாம் என்று நினைத்தனர்.. இதற்காக சரஞ்சித்தை தொடர்பு கொள்ள முயன்றபோது, சரஞ்சித்தையும் காணவில்லை.. இது போலீசாருக்கு குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.. எனவே, சரஞ்சித்தின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர்..
அப்போது ருபிந்தர் மாயமானதாக கூறப்பட்ட ஜூலை மாதத்தில், சரஞ்சித்துக்கு வேறொரு நம்பரிலிருந்து அடிக்கடி அழைப்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது சம்பந்தமாக போலீசார் விசாரித்தபோது, பஞ்சாபின் மல்காபட்டியைச் சேர்ந்த சுக்ஜித் சிங் சோன் என்பவர்தான் சரஞ்சித்திடம் பேசியவர் என்பது உறுதியானது.
இதையடுத்து, சுக்ஜித்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது.. அப்போதுதான், ருபிந்தரை கொலை செய்து எரித்ததாகவும், இந்த கொலையை செய்ய சொல்லி 50 லட்சம் ரூபாய் பேரம் பேசியதே 75 வயது காதலன் சரஞ்சித் என்றும் சுக்ஜித் தன்னுடைய வாக்குமூலத்தில் கூறி திகைக்க வைத்தார்.
காதலியிடம் பணம் வசூல்
இது குறித்து போலீசார் சொல்லும்போது, "திருமணத்துக்கு முன்பே ருபிந்தரிடமிருந்து சரஞ்சித் நிறைய பணம் கேட்டு வாங்கியிருக்கிறார்.. உயிருக்கு உயிராக காதலிப்பதாக சொல்லி உள்ளார்.. பிறகு திருமணம் செய்து கொள்வதாகவும் சொல்லி அவரை இந்தியா வரவழைத்துள்ளார்..
இந்தியா வந்த பிறகும்கூட, ருபிந்தரிடமிருந்து பணத்தை வசூல் செய்து கொண்டேயிருந்தார்.. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது.. ஒருகட்டத்தில் பணத்தை ருபிந்தர் திருப்பி கேட்டபோதுதான், சுக்ஜித் சிங் என்பவரை வைத்து, ருபிந்தரை எரித்து கொன்றுள்ளார்.. இப்போது சரஞ்சித் தலைமறைவாக உள்ளதால், அவரை தேடி வருகிறோம்" என்றனர்.
ஸ்டோர் ரூமில் உடல்
கடந்த வாரம்தான் ருபிந்தர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.. 50 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்ட சுக்ஜித் சிங், ருபிந்தரை கொன்றுவிட்டு, தன்னுடைய வீட்டிலுள்ள ஸ்டோர் ரூமில் சடலத்தை மறைத்து வைத்திருந்தாராம்.. எனவே, சுக்ஜித் சிங்கின் வீட்டில் சோதனை செய்த போலீசார், ருபிந்தரின் எஞ்சியிருக்கும் எலும்புகளை கண்டெடுத்தனர்.. அவைகளை தற்போது பரிசோதனைக்கும் அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
71 வயது பெண், 75 வயது நபரை காதலித்து, இருவரும் திருமணமும் செய்ய முடிவெடுத்த நிலையில், இப்படியொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது பஞ்சாப் மாநிலத்தில் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.


Click it and Unblock the Notifications
