சாரட்டு வண்டி கேட்ட பாகிஸ்தான்.. டாஸ் போட்டு வென்ற இந்தியா! தேசப் பிரிவினையில் அறியாத சுவாரஸ்யங்கள்
சென்னை: நாளை குடியரசுத் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் பிரனாப் முகர்ஜி காலம் வரை குடியரசுத் தலைவர் பயன்படுத்திய சாரட்டு வண்டியை தங்களுக்கு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் கேட்ட நிலையில் இந்தியா அதை எப்படி பெற்றது? தேசப் பிரிவினையின்போது நிகழ்ந்த சொத்துப் பிரிவினை என்ன என்று விரிவாக பார்ப்போம்.
இதுகுறித்து முகநூலில் நியான்டெர் செல்வன் என்பவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், "சுதந்திரம் கிடைத்ததும் இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் மட்டும் பிரியவில்லை. சொத்துக்களையும், கடனையும் பிரிக்க முடிவெடுத்தார்கள். இதற்கு மவுண்ட்பேட்டன் தலைமையில் இந்தியா சார்பில் படேல், ராஜேந்திர பிரசாத் ஆகியோரும் பாகிஸ்தான் சார்பில் ஜின்னா, லியாகத் அலிகான் ஆகியோரும் கொண்ட 12 பேர் கமிட்டி அமைக்கப்பட்டது. ஒன்றிணைந்த இந்தியாவின் 17.5% சொத்துக்களும், கடனும் பாகிஸ்தானுக்கு என முடிவெடுத்தார்கள்.

இந்திய ரிசர்வ் வங்கியில் அப்போது ரூ.400 கோடி ரொக்கம் இருந்தது. அதில் ரூ.75 கோடி பாகிஸ்தானுக்கு என முடிவானது. ஆனால் அட்வான்ஸ் வாங்குவது தான் உலக வழக்கம் ஆச்சே? சுதந்திரத்துக்கு முன்பே அதில் "ரூ 20 கோடி அட்வான்ஸ் கொடு" என பாகிஸ்தான் கேட்டு வாங்கிக்கொண்டது. கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுக்கள் மக்களிடம் புழக்கத்தில் இருந்தன. 1948 மார்ச் 31 வரை இந்திய கரன்சி நோட்டுக்களையே பயன்படுத்துவது என பாகிஸ்தான் முடிவெடுத்தது. பழைய நோட்டுகளில் ரூபாய் நோட்டில் இந்தியா என எழுதி இருந்த இடத்தில் ரப்பர் ஸ்டாம்பில் பாகிஸ்தான் என அடித்து பயன்படுத்தியது பாகிஸ்தான்.
அரசு அலுவலகங்களில் இருந்த சொத்துக்கள் 80:20 என்ற விகிதத்தில் பிரிக்கலாம் என முடிவானது. ஆனால் இதற்குள் தேச பிரிவினையால் கலவரம், வெட்டுகுத்து, வன்முறை எல்லாம் இரு நாடுகளிலும் நடக்க இந்த பாகபிரிவினையும் ரொம்ப சர்ச்சைக்குரியதாக ஆகிவிட்டன. லைப்ரரிகளில் இருக்கும் புத்தகங்கள், அரசு அலுவலகங்களில் இருக்கும் டேபிள் சேர் எல்லாம் கணக்குபோட்டு சரிபாதியாக பிரித்தார்கள். இதில் சுண்டைகாய் கால்பணம், சுமை கூலி முக்கால் பணம் கதையாய் அதை எல்லாம் யார் கொன்டுபோய் பாகிஸ்தானில் சேர்ப்பது, அதற்கான போக்குவரத்து கூலி எல்லாம் அதிகம் என்ற பிரச்சனை இருந்தது.
உதாரணமாக நாகாலாந்து மாநிலத்தில் எங்கோ உள்ள டிஸ்ட்ரிக்ட் கமிஷனர் ஆபிஸில் இருந்து 75 ரூபாயை பாகிஸ்தானுக்கு அனுப்பவேண்டும்!!! போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள லத்திகளில் கால்வாசி, ட்ரம்களில் கால்வாசி,..இதை எல்லாம் கணக்கு போட்டு பிரித்தார்கள். லாகூர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த இந்து கான்ஸ்டபிள் ஒருவர் இந்தியா போவதாக சொன்னார். அவரிடம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த சொத்துக்களை பிரித்து கொடுத்தார்கள்.
அதில் ஒரு போலீஸ் டிரம்மை அவர் கேட்க, பாகிஸ்தானிய காவலர் ஒருவர் அது தனக்கு வேண்டும் என கேட்க, இருவரும் ஒரு டிரம்முக்கு சண்டைபோட்டு அடித்து புரண்டதாக ப்ரிட்டிஷ் காவலதிகாரி ஒருவர் பதிவு செய்கிறார். பஞ்சாப் அரசு லைப்ரரிகளில் உள்ள என்சைக்ளோபிடியா ப்ரிட்டானிகாவில் ஏ முதல் கே வரை பாகிஸ்தானுக்கும், எல் முதல் இசட் வரை இந்தியாவுக்கும் பிரித்து எடுத்துபோனார்கள். லைப்ரரிகளில் ஒரே ஒரு காப்பியாக நூல் எதும் இருந்தால் "எந்த நாட்டுக்கு அந்த நூலில் அதிக பலன் உள்ளதோ அந்த நாட்டுக்கு அந்த நூல் சொந்தம்" என வினோதமாக ஒப்பந்தம் இருந்தது.
"ஆலிஸ் இன் ஒண்டர்லேன்ட்" நூல் ஒரே ஒரு காப்பி மட்டும் பஞ்சாப் நூலகத்தில் இருந்ததால் "இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளில் எந்த நாட்டுக்கு அந்த நூலால் அதிக பலன்" என மீட்டிங் போட்டு விவாதித்தார்கள். சாராயம், ஒயின் எல்லாம் பிரிக்கையில் பாகிஸ்தான் முஸ்லிம் நாடு என்பதால் அது முழுக்க இந்தியாவுக்கே கொடுத்துவிட்டார்கள். ஆனால் சரக்கின் சந்தை மதிப்பை கணக்குபோட்டு காசை பிரித்து வாங்கிகொண்டார்கள். நாய் விற்ற காசு குரைக்கவா செய்யும்?
குடியரசு தலைவரின் சாரட்டு வண்டியை இரு நாடுகளும் விடுவதாக இல்லை. மவுன்ட்பேட்டனே தலையிட்டும் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. கடைசியில் டாஸ் போட்டு முடிவெடுக்கலாம் என சொல்லி சமாதனப்படுத்தி டாஸ் போட்டதில் இந்தியாவுக்கு சாரட்டு வண்டி கிடைத்துவிட்டது. 2014ம் ஆண்டு பிரனாப் முகர்ஜி காலம் வரை அந்த வண்டிதான் குடியரசு தலைவர் பயன்பாட்டுக்கு இருந்தது. ஆண்டுக்கு ஒருமுறை சாரட்டு வண்டியில் ஏறி குடியரசு தலைவர் பாராளுமன்றம் வருவார்.
ஆனால் இன்னும் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. பிரிவினை சமயம் பாகிஸ்தான் இன்னும் தனக்கு காசு கொடுக்கவேண்டும் என இந்தியா ஒரு கணக்கை போட்டு அதற்கு வட்டி எல்லாம் போட்டு ரூ. 300 கோடியை பாகிஸ்தானிடம் கேட்கிறது. பங்காளிகள் மட்டும் இளைத்தவர்களா என்ன? அவர்கள் ரூ 560 கோடிக்கு பில்லை போட்டு வைத்து இருக்கிறார்கள். அஞ்சு வயசில் அண்ணன் தம்பி; பத்து வயசில் பங்காளினு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க?" என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications