பார்வையை திருப்பிய "கேசிஆர்".. மாடு மேய்க்கும் பெண்ணால் சரிந்த சாம்ராஜ்ஜியம்.. தெலுங்கானா 8 அம்புகள்
சென்னை: தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலுமே கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளார், கே.சி. சந்திரசேகர் ராவ்.. மாடு மேய்க்கும் பெண்ணால் ஆட்சியையே பறிகொடுக்கும் நிலைமைக்கும் ஆளாகியிருக்கிறார் கேசிஆர்..!!!
கேசிஆரை பொறுத்தவரை சிறந்த பேச்சாளர்.. தேர்தல் வியூகஙஙகளை சிறப்பாக வகுப்பவர்.. பிரச்சாரங்களை அதிரடி கிளப்புபவர்.. ஆனால், என்னமோ இந்தமுறை இவரது பிரச்சாரங்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை.. தெலுங்கானா மக்களின் நம்பிக்கையை மெல்ல மெல்ல இழந்தபடியே காணப்பட்டார் ராவ்.
சறுக்கல் - 1 : இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.. காங்கிரஸ் அளவுக்கு, தேர்தல் வியூகங்களை செயல்படுத்தாதது மிகப்பெரிய மைனஸாக பார்க்கப்படுகிறது.. அதேபோல, இப்போதுள்ள எம்எல்ஏக்களையே மறுபடியும் களத்தில் நிறுத்தியதும், கேசிஆருக்கு மிகப்பெரிய சறுக்கலாகும்..

ஏற்கனவே மக்களுக்கு அதிருப்தி நிலவிக் கொண்டிருக்கும்போது, அதிருப்திக்குள்ளானவர்களையே மீண்டும் வேட்பாளராக நிறுத்திவிட்டதால், கூடுதல் அதிருப்தியையே சம்பாதிக்க முடியும் என்று கணித்து சொன்னார்கள் அரசியல் விமர்சகர்கள்.
சறுக்கல் - 2 : அதேபோல, வருவாய் துறையில் முறைகேடு, மதுபான ஊழல், மதுபானம், மணல் நிலம் என்று கொள்ளையடிக்கப்பட்டதாக முன்வைத்த விமர்சனங்களும், கேசிஆருக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது. கேசிஆரின் மகள், மற்றும் கேசிஆர் தரப்பிடம் நடத்தப்பட்ட ரெய்டுகளும், சோதனைகளும், கேசிஆருக்கான டேமேஜ்ஜை மெல்ல மெல்ல உடைக்க துவங்கியது..
தெலங்கானாவில், தலித், ஓபிசி பழங்குடி, இஸ்லாமியர் போன்ற சமூகத்தினரே பெரும்பான்மையாக உள்ளனர்.. அதாவது, மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 85 சதவிகிதம் இவர்கள்தான் இருக்கிறார்கள். இந்த ஒவ்வொரு சமூகத்தினருக்குமே, பல்வேறு கோரிக்கைகள் உள்ளன.. எனவே, தங்களின் சமூகம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களையும் நடத்திவருகிறார்கள்.
சறுக்கல் - 3: ஆனால், இந்த போராட்டங்களை எல்லாம் கேசிஆர் கண்டும்காணாமல் கடந்து போனது, அந்தந்த சமூகத்தினரிடம் மிகப்பெரிய ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. மக்கள் நலத்திட்டங்களை மட்டுமே சந்திரசேகர ராவ் செயல்படுத்தினாரே தவிர, சமூகம் சார்ந்த அவர்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார் கேசிஆர் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
அதேபோல, தெலுங்கானாவில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்து ஆடியது.. படித்த இளைஞர்கள் வேலை கிடைக்காமல், விரக்திக்கு ஆளானார்கள்.. இந்த உச்சக்கட்ட வெறுப்பில்தான், ஸ்ரீஷா என்ற பட்டதாரி பெண், எருமை மாடு மாய்க்க கிளம்பினார்.
சறுக்கல் - 4: நாம எவ்வளவுதான் படித்து டிகிரி வாங்கினாலும், இந்த தெலுங்கானா நமக்கு வேலை தராது என்று வீடியோ பதிவிட்டுகொந்தளித்தார் ஸ்ரீஷா.. அத்துடன், இந்த தேர்தலிலேயே, கேசிஆரை எதிர்த்து போட்டியிடும் சூழலுக்கும் தள்ளப்பட்டார் ஸ்ரீஷா.. தெலுங்கானாவின் மிக இளம் வேட்பாளர் என்ற பெருமையையும் பெற்ற இந்த மாடு மேய்க்கும் பெண்ணால், கேசிஆரின் அரியணை கனவு தகர்த்தெறியப்பட்டுள்ளது.
சறுக்கல் - 5: உயர் கல்வித்துறைக்கு ராவின் ஆட்சியில் முக்கியத்துவம் எதுவும் தரப்படவில்லை என்ற விமர்சனம் ஏற்கனவே நிறைய இருக்கிறது. தெலங்கானாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் நிதி இல்லாமல் சிரமப்படுவதாக செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன..
சறுக்கல் - 6: அரசு பணிகளை ஒழித்து விட்டார் என்ற எதிர்க்கட்சியினரின் பிரச்சாரங்களுக்கு உரிய பதிலை கேசிஆர் தரப்பு சொல்லவில்லை.. எல்லாரும் பணத்தில் மிதக்கின்றனர் என்கிற குற்றச்சாட்டையும் பொய்யாக்க கேசிஆர் தரப்பு முயற்சிக்கவில்லை.. பாஜகவின் B டீம் போல செயல்படுகிறது ஆளும் கட்சி என்ற காங்கிரஸின் விமர்சனத்தையும் கேசிஆர் தரப்பு வலுவாக மறுக்க முயற்சிக்கவில்லை..
சறுக்கல் - 7: மகன், மகள், உறவினர்கள் போன்றோருக்கு கட்சியிலும், ஆட்சியிலும், முக்கியத்துவம் தந்து, குடும்ப அதிகார மையங்களை உருவாக்கி விட்டுவிட்டார் என்ற புகாரையும் கேசிஆர் தரப்பு தகர்க்க முயற்சிக்கவில்லை. மாறாக, இந்த தேர்தலிலும் அவர்களுக்கு சீட் தந்து, மாநில மக்களையே அதிர வைத்தார் கேசிஆர்.
சறுக்கல் - 8: கேசிஆர் போட்டியிடும் தொகுதிகளில் ஒன்று கஜ்வேல்.. அங்கே ஒரு பண்ணை வீடு இருக்கிறதாம். கேசிஆர் அங்கேதான் அடிக்கடி தங்கிவிடுவாராம். தொண்டர்களைகூட பார்ப்பதில்லையாம்.. இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்தது வேறு யாருமில்லை.. பிரதமர் மோடியும், பிரியங்கா காந்தியும்தான். 3வது முறையும், மாநிலத்தை ஆள துடிக்கும் ஆசை இருந்தாலும், தொகுதி மக்களையும், தொண்டர்களையும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டாராம் கேசிஆர்.
இந்த அதிருப்திகள் எல்லாமே ஒன்றுசேர்ந்து, இன்று கேசிஆருக்கு முன்பு வினாக்களாக எழுந்து நிற்கின்றன. ஏற்கனவே, இடைத்தேர்தல் நடந்த இரு தொகுதிகளில் தோற்றது, அவரது பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி. இப்போதும் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலுமே பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார் கேசிஆர்.. இப்படி ஒரு பரிதாபமான நிலைமை உருவாகுவதற்கு, காங்கிரஸோ, பாஜகவோ அல்லது மற்ற எதிர்க்கட்சிகளோ காரணம் கிடையாது.. சாட்சாத் கேசிஆரேதான்..!!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications