5 வருடங்களில் ஒரு பவுன் 1,25,000 ரூபாய்? விடாதீங்க.. விரட்டி பிடியுங்கள்! தங்கமான நேரம்
சென்னை: தங்கம் விலை கட்டுக்கடங்காமல் ஏறிக்கொண்டு வரும் வேளையில், தங்கத்தின் விலை ஏறவில்லை என்றும் டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதால்தான் அதிகப் பணம் கொடுத்து தங்கத்தை வாங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகப் பொருளாதார நிபுணர் நுட்பமான ஒரு விளக்கத்தைத் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி தங்கத்தின் விலை வானத்தை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. சில மாதங்கள் முன்னதாகவே ஒரு கிராம் தங்கத்தின் விலை 8 ஆயிரத்தைத் தொட்டுவிடும் எனக் கணித்து கூறப்பட்டது. அதேநிலையை இப்போது தங்கம் எட்டியுள்ளது. அதற்கு ஏற்ற மாதிரி தங்க நகைக்கடைகள் தினந்தோறும் புதிய புதிய ஆஃபர்களை அள்ளி வீசி வருகின்றன.

தங்கம் எடைக்கு இணையாக வெள்ளியைத் தருகிறோம் என்கிறது ஒரு விளம்பரம். சவரனுக்கு இத்தனை சதவீதம் தள்ளுபடி என்கிறது மற்றொரு விளம்பரம். கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் மக்கள் அதிக மகிழ்ச்சி அடைய முடியவில்லை. ஏனென்றால், ஏழைகளுக்கு எட்டாத உயரத்தில் தங்கத்தின் விலை பறந்து போய் உட்கார்ந்திருக்கிறது.
“தங்கத்தை வாங்க இதைவிடச் சரியான தருணம் இனி வரப் போவதில்லை. விலை வீழ்ச்சிக்கு வாய்ப்பே இல்லை” என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார் பங்குச் சந்தை ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன். வேறு சிலர் தங்கத்தை விட்டுவிட்டு வேறு முதலீடுகளை எடுப்பது புத்திசாலித்தனம் என்கிறார்கள்.
இது குறித்து விளக்கம் தேவை அதிகம் வேண்டி இருப்பதால் பொருளாதார நிபுணர் நாகப்பன் சில விடைகளை அளித்துள்ளார். அவர், “தங்கத்தின் தேவை அதிகரித்தால் விலை அதிகரிக்கும். இப்போது பண்டிகை காலம் என்பதால் தேவை உள்ளது. அதனால் மட்டுமே தங்க விலை ஏறவில்லை. முதலில் பணவீக்கம், அடுத்து வங்கிகளில் வட்டி விகித மாற்றம், பணத்தின் மதிப்பு டாலருடன் போட்டிப் போடும் அளவு இல்லை. அதில் தடுமாற்றம் நிலவுகிறது. இவை அனைத்தும் சேர்த்துத்தான் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது” என்கிறார்.
தொடர்ந்து விளக்கம் அளித்த அவர், “பணவீக்கம் அதிகரிக்கும்போது பணத்தின் மதிப்பு தானாகவே குறையும். அதனால் தங்கத்தில் முதலீடு அதிகரிக்கும். ஆகவே, அதிகப் பணம் கொடுத்து தங்கத்தை வாங்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது என்பதுதான் நிஜம். இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே 40 ஆண்டுக்காலத்தில் நடைபெறாத அளவுக்கு அமெரிக்காவில் பணவீக்கம் உச்சத்தை எட்டியது. அதனால் தங்கத்தை வாங்க ஆரம்பித்தது.
கூடவே அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை அரை சதவீதம் குறைத்துள்ளது. இப்படி வட்டியைக் குறைப்பதால், முன்பே வைப்புத் தொகையாக முதலீடு செய்து வைத்திருக்கும் பணத்தை எடுத்து வேறு முதலீடுகளில் போடுவார்கள். அவர்களின் அடுத்த தேர்வு தங்கமாக இருக்கும். இல்லை எனில் பங்குச் சந்தையாக இருக்கக்கூடும்.
முன்னதாகவே பங்குச் சந்தை வீழ்ச்சியில் காணப்படுகிறது. இதனால் பலரும் தங்கம் பக்கம் தாவினார்கள். கடந்த 4 ஆண்டுகளில் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. இந்தப் பங்குச் சந்தை வீழ்ச்சிக்குப் பின்னரே அது கிடுகிடுவென்று ஏறத்துவங்கியது.
அப்படிப் பார்த்தால் இந்த ஒரு ஆண்டில் மட்டும் 30% க்கும் மேல் தங்கத்தின் விலை ஏறி இருக்கிறது. டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு 72 ரூபாய் இருந்து 84 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. டாலர் மதிப்பில்தான் தங்கம் வாங்குகிறோம். டாலருக்கு இணையான பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடையும் போது அதிகப் பணம் கொடுத்து தங்கத்தை வாங்கவேண்டி உள்ளது. இதை விலை ஏற்றம் எனச் சொல்வதைவிடப் பணத்தின் மதிப்பு குறைந்ததால் தங்கத்தை வாங்கக் கூடுதலாக ரூபாய் செலவாகிறது என இதைப் பார்க்கலாம்” என்கிறார்.
தங்கத்தை அதிகம் யார் வாங்குகிறார்கள்? தனி நபர்கள் அதிகமாக வாங்கவில்லை. அவர்கள் பங்குச் சந்தை முதலீடு மூலம் வாங்குகிறார்கள். இதற்கு மேலாக பல நாடுகள் தங்கத்தை வாங்கி வைப்பதுதான் விலை ஏற காரணம். இந்தியா இந்த இரண்டாம் காலாண்டில் மட்டும் 18 டன் தங்கம் வாங்கி இருக்கிறது என ஒரு தகவல் வந்துள்ளது.
“வரும் காலங்களில் அதாவது இன்னும் 5 ஆண்டுகளில் இப்போது உள்ள விலையைவிட இரண்டு மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது” என்கிறார். அப்படி என்றால் இப்போது ஒரு கிராம் 8 ஆயிரம் உள்ளது. ஒரு கிராம் அப்படியே 16 ஆயிரம் ரூபாய் வரை போகும். ஒரு சவரன் வரும் 5 ஆண்டுகளில் 1லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை உயரப் போகிறது எனக் கணித்துச் சொல்லலாம்.
-
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
Gold Rate: தங்கம் விலை சரிவு! ஆனாலும் 1 லட்சத்திற்கு கீழே இறங்காது போலயே! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications