புதிதாக 8 மாவட்டங்கள்? - பேரவையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சொன்ன முக்கிய தகவல்!
சென்னை : தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பாக பரிசீலித்து வருவதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று பொதுப்பணித் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
முன்னதாக, எம்.எல்.ஏக்கள் தங்கள் பகுதியில் தனி மாவட்டமாகப் பிரிக்க வேண்டும் என வைத்த கோரிக்கைக்கு வருவாய்த்துறை அமைச்சர் பதில் அளித்தார்.

மானியக்கோரிக்கை விவாதம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 21ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து பட்ஜெட் மீதான விவாதம், துறைவாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, சிறு துறைமுகங்கள் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.

ஆரணி - கும்பகோணம்
முன்னதாக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தில், "திருவண்ணமாலை மாவட்டத்தில் இருந்து ஆரணியை தனியாக பிரித்து ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும்" என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார். அதேபோல அரசு கொறடா கோவி.செழியன், "டெல்டா மக்களின் மனம் குளிர இந்தக் கூடத்தொடரிலேயே கும்பகோணம் தனி மாவட்டமாக அமைக்கப்பட வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.

8 மாவட்டங்கள்
இதற்கு பதிலளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், "8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். 8 மாவட்டங்களை பிரிப்பது தொடர்பான கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது. முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். புதிய மாவட்டம் என்ற கோரிக்கைக்கு நிதிநிலைக்கு ஏற்ப முதல்வர் முடிவெடுப்பார்" என்று தெரிவித்தார்.

38+8?
தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் இருந்துவந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது தமிழ்நாட்டில் புதிதாக 6 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன்படி தமிழ்நாட்டில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. கடைசியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டால் தமிழ்நாட்டில் மாவட்டங்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரிக்கும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications