80000 ஆபாச வீடியோ, ரூ.100 கோடியா? புத்த பிட்சுகளை கூட விடல.. யாரிந்த விஷப்பெண்.. தாய்லாந்தில் ஷாக்
சென்னை: பெருகிவரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்றபடி, ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.. மற்றொருபக்கம் ஏஐ என்ற அதிபயங்கர தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் மோசடி நடக்கிறது.. திருமண மோசடிகளில் பல பெண்களே கைதாகி கொண்டிருக்கிறார்கள்.. இதற்கு நடுவில் பணக்காரர்களையும், தொழிலதிபர்களையும் குறிவைத்து மோசடிகள் நடக்கின்றன.. இப்படி எத்தனையோ மோசடிகளை கேள்விப்பட்டு வருகிறோம்.. ஆனால், புத்த மத துறவியைகூட ஏமாற்றி மோசடி செய்திருக்கும் அக்கிரமம் தற்போது நடந்துள்ளது.. புனித வாழ்க்கையை மேற்கொண்டு வருபவர்கள் புத்த துறவிகள்.. இதுபோன்ற புத்த பிட்சுளில் ஒருசிலர் புகார்களில் சிக்கியிருப்பதும், இவர்களை, பெண் ஒருவர் ஏமாற்றியிருப்பதும், அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.
தாய்லாந்து நாட்டில் புத்த மத துறவிகளை தனது ஹனிட்ராப் வலையில் விழ வைத்து, சுமார் 100 கோடி ரூபாய் பணம் பறித்த Ms GOLF என்ற பெண் போலீசாரிடம் சிக்கியிருக்கிறார். புத்தத் துறவிகளை குறி வைத்து நடத்தப்பட்ட ஹனிட்ராப் மோசடியின் பகீர் பின்னணி என்ன?

பாங்காக் துறவிகள்
கடந்த வருடம் ஜூன் மாதம், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், பிரபல புத்தத் துறவிகள் மடத்தின் தலைவர் ஒருவர் திடீரென தன்னுடைய துறவறத்தை விட்டு வெளியேறினார்..
இந்த விஷயம் போலீசுக்கு போனது.. துறவி எதற்காக திடீரென துறவறத்தை விட்டு போனார்? யாராவது அவரை மிரட்டினார்களா? துறவறத்தை கைவிட நெருக்கடி தந்தார்களா? என்ற பல சந்தேகங்கள் போலீசுக்கு எழுந்தன.. எனவே, அதுகுறித்த விசாரணையையும் தொடங்கினார்கள்.. அப்போதுதான் பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாயின.
தகாத உறவு - மோசடி
அதாவது, சம்பந்தப்பட்ட துறவியுடன், விலாவன் எம்சாவத் என்ற பெண், நெருங்கி பழகியிருக்கிறார்.. துறவியை தன்னுடைய வலையிலும் விழ வைத்துள்ளார்.. கடந்த வருடம், இருவரும் தகாத உறவிலும் ஈடுபட்டுள்ளனர்..
பிறகு கர்ப்பமாக இருப்பதாக துறவியிடம், அந்த பெண் பொய் சொன்னார்.. அத்துடன், "உங்கள் குழந்தையை என்னுடைய வயிற்றில் சுமக்கிறேன், அதற்கு குழந்தை ஆதரவு தொகையாக 72 லட்சம் பாட் (Thai Baht) (ரூ.2 கோடி ரூபாய்) தரவேண்டும் என்று மிரட்ட ஆரம்பித்துவிட்டாராம்..
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த துறவி, அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று தெரியவந்து, அத்துடன் துறவறத்தை விட்டே ஓடிவிட்டாராம்..
அதிரடி சோதனைகள்
இவ்வளவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, விலாவன் எம்சாவத் என்ற பெண் யார் என்ற அடுத்தக்கட்ட அதிரடியில் இறங்கினார்கள்.. நோந்தபுரி என்ற பகுதியில், அந்த மோசடி வசித்து வருவதை கண்டுபிடித்து, அவரது வீட்டிற்குள் பாங்காக் போலீசார் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.. அப்போது, சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆபாச போட்டோக்களும், வீடியோக்களும் பெண்ணின் வீட்டில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
அத்தனை ஆபாச வீடியோக்களும், துறவிகளை மிரட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டவையாம்.. இப்படி, இந்த 3 வருடங்களில் மட்டும், மொத்தம் 9 துறவிகளை ஒரே பாணியில் மிரட்டி, 385 மில்லியன் பாட் பணத்தையும் மிரட்டி பறித்தது அம்பலமாகியிருக்கிறது.. 385 மில்லியன் பாட் என்றால் நம்ம ஊர் மதிப்பில் ரூ.100 கோடி ரூபாயாகும்.
ஆபாச வீடியோக்கள்
இப்போது, கைதாகியிருக்கும் விலாவன் எம்சாவத் என்ற பெண்ணுக்கு 35 வயதாகிறது.. அவரிடமிருந்து ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் உட்பட பெரும்பாலான பணத்தை போலீசார் கைப்பற்றியிருக்கிறார்கள்.. அவரது செல்போனை ஆராய்ந்தால், பல துறவிகளுக்கு மிரட்டல் விடுத்ததும் ஊர்ஜிதமாகியிருக்கிறது..
இதையெல்லாம் கேள்விப்பட்டு தாய்லாந்து மன்னரும், பொது மக்களும் புத்த துறவிகள் மீது அதிருப்தியில் உள்ளனர். பிரம்மச்சரிய விதிகளை ஒருஇளம் பெண் உடைத்தெறிந்துவிட்டாரே? என்றும் உறைந்து போயிருக்கிறார்கள்..
தாய்லாந்து புத்த மத அமைப்பின் நிர்வாக அமைப்பு துறவற விதிகளை மறு ஆய்வு செய்ய குழு அமைக்க போவதாக அறிவித்திருந்தாலும், விதிகளை மீறும் துறவிகளுக்கு அபராதம் மற்றும் கடுமையான தண்டனைகளை விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாம்..
போலீசார் பரபர
இது குறித்து போலீசார் சொல்லும்போது, "பாங்காக் அருகே உள்ள நோன்தாபுரியில், விலாவன் எம்சாவத்தின் சொகுசு பங்களாவில் நடத்தப்பட்ட சோதனையில் செல்போன் மற்றும் லேப்டாப்களில் துறவிகளின் 80,000 அந்தரங்க வீடியோக்கள், புகைப்படங்கள் கிடைத்தன. இவை 2022ல் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை எடுக்கப்பட்டவை. இதில் மடாலயங்களின் 9 தலைமை துறவிகளும் அடக்கம்.
இவைகளை வைத்து மிரட்டி கடந்த 3 வருடங்களில் துறவிகளிடம் 100 கோடி ரூபாய் வரை பணம் பறித்துள்ளார். சமூக வலைதளங்கள் வாயிலாக துறவிகளை தொடர்புகொண்டு தன் வலையில் வீழ்த்தி, திட்டத்தை நிறைவேற்றியுள்ளார் விலாவன் எம்சாவத்.
கோபத்தில் மன்னர்
இதில், ஒரு துறவி, அந்த பெண்ணை ஷாப்பிங் அழைத்துச் சென்று, 75 லட்சம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி தந்திருக்கிறார்.. எனவே, இந்த பாலியல் மோசடியில் சிக்கிய துறவிகளிடமும் விசாரணை நடந்து வருகிறது. கைதான பெண்ணுடன், உறவில் இருந்ததை பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர்" என்றனர்.
இந்த விவகாரம் தாய்லாந்தில் பெரும் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.. அந்நாட்டு மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் தன்னுடைய 73வது பிறந்த நாளை முன்னிட்டு, 80க்கும் மேற்பட்ட துறவிகளுக்கு அழைப்பிதழ்களை அனுப்ப முடிவு செய்திருந்தாராம்.. ஆனால், அத்தனை அழைப்பிதழ்களையும் தற்போது ரத்து செய்துவிட்டார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications