தமிழ்நாட்டில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை.. எங்கு ரொம்ப அதிகம் தெரியுமா? தேர்தல் அதிகாரி தகவல்!
சென்னை : தமிழ்நாட்டில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில், 39 மக்களவைத் தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அரசியல்கள் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தல் பணிகள் தீவிரம்: மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் மொத்தம் உள்ள 68,144 வாக்குச் சாவடிகளில் 8050 பதற்றமானவை என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
பதற்றமான வாக்குச்சாவடிகள்: இதுதொடர்பாக பேசியுள்ள தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, "தமிழ்நாட்டில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக மதுரையில் 511 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. தென் சென்னையில் 456 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 39 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன." என அவர் தெரிவித்துள்ளார்.
சத்ய பிரதா சாகு: மேலும், வேட்பாளர்கள் பணம் கொடுக்கக் கூடாது, வாக்காளர்களும் பணம் வாங்கக் கூடாது. 85 வயதுக்கு மேற்பட்டோர் 18ஆம் தேதி வரை தபால் வாக்குகளை பதிவு செய்யலாம். தபால் வாக்குகளை பெற வாக்குப்பதிவு அலுவலர்கள் இரண்டு முறை வீட்டுக்கு வருவார்கள். இரண்டு முறையும் தபால் வாக்கு செலுத்த முடியாதவர்கள் வாக்குப்பதிவு நாளில் நேரில் வாக்களிக்கலாம் என்று தெரிவித்துள்ளார் சத்ய பிரதா சாகு.
85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கும் பணி இன்று தொடங்கியது. இன்று முதல் 3 நாட்களுக்கு, 3 குழுக்களாக பிரிந்து, அவர்களின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளை பெறும் பணிகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்காளர்களின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள், தபால் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
வாக்காளர் எண்ணிக்கை: இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 ஆக உள்ளது. அதில், ஆண்கள் 3 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரத்து 793; பெண்கள் 3 கோடியே 17 லட்சத்து 19 ஆயிரத்து 665; மூன்றாம் பாலினத்தவர் 8,467 பேர்.
இந்த வாக்காளர் பட்டியலின்படி ஸ்ரீபெரும்புதூர் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மொத்தம் 23 லட்சத்து 82 ஆயிரத்து 119 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் தொகுதியில் 13 லட்சத்து 45 ஆயிரத்து 120 வாக்காளர்கள் உள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications