சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்ன சொல்றீங்க.. சென்னையில் 81% பேருக்கு இந்த சத்து இல்லையாம்! மோசமான பிரச்சினைகள் ஏற்படுமாம்! பகீர்

வைட்டமின் டி சத்து உடலில் குறைந்தால் மனச்சோர்வு, சர்க்கரை நோய், புற்றுநோய், எலும்புகள் சம்பந்தமான நோய், முடக்குவாதம் போன்றவை எளிதில் நம்மைத் தாக்கிவிடும்.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் 81 சதவீதம் பேருக்கு வைட்டமின் - டி சத்துக் குறைபாடு இருப்பதாக அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.

மனிதனுக்கு மிக அத்தியாவசியமான சத்துகளில் ஒன்றான வைட்டமின் டி, சென்னை மக்கள் பெரும்பாலானோருக்குக் குறைவாக இருப்பதை ஒரு பெரிய எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இயந்திரத்தனமான வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை, துரித உணவுகளின் மீதான நாட்டம் போன்றவையே இந்த நிலைக்குக் காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வைட்டமின் டி குறைவு.... கொரோனா தொற்று... உயிரிழப்பை அதிகரிக்கும்... புதிய ஆய்வில் தகவல்!! வைட்டமின் டி குறைவு.... கொரோனா தொற்று... உயிரிழப்பை அதிகரிக்கும்... புதிய ஆய்வில் தகவல்!!

வைட்டமின் டி -இன் முக்கியத்துவம்

வைட்டமின் டி -இன் முக்கியத்துவம்

மனித உடலுக்கு மிக மிக அத்தியாவசியான சத்துகளில் முதலிடம் பிடிப்பது வைட்டமின் டி தான். எலும்புகளுக்குத் தேவையான கால்சியம், உடலுக்குத் தேவையான பாஸ்பேட் போன்றவற்றைச் சீராக வைத்திருப்பதே வைட்டமின் டி-இன் முக்கிய வேலை ஆகும். அது மட்டுமல்லாமல், எதிர்ப்புச் சக்தி மண்டலத்தை வலுப்படுத்துவது; சர்க்கரை நோய் வருவதைத் தடுப்பது; சில புற்றுநோய்களைத் தடுப்பது; உடல் எடைக்குறைப்புக்கு உதவுவது, ரத்த அழுத்தத்தைக் குறைப்பது உள்ளிட்ட முக்கிய பணிகளை வைட்டமின் டி செய்கிறது.

27 நகரங்களில் ஆய்வு

27 நகரங்களில் ஆய்வு

இந்த வைட்டமின் டி சத்து உடலில் குறைந்தால் மனச்சோர்வு, சர்க்கரை நோய், புற்றுநோய், எலும்புகள் சம்பந்தமான நோய், முடக்குவாதம் போன்றவை எளிதில் நம்மைத் தாக்கிவிடும். இந்நிலையில், இந்தியா முழுவதும் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வைட்டமின் டி தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது. 27 நகரங்களைச் சேர்ந்த 2.2 லட்சம் மக்களிடம் நடத்தப்பட்ட இந்த சோதனையில் அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளியாகின.

சென்னையில் 81% பேர்

சென்னையில் 81% பேர்

அதாவது, இந்திய மக்கள்தொகையில் 76 சதவீதம் பேர் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களில் 79 சதவீதம் பேருக்கு வைட்டமின் டி சத்து குறைவாக உள்ளது. பெண்களில் 75 சதவீதம் பேருக்கு இந்த சத்துக் குறைபாடு உள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் அதிக அளவில் இந்த சத்துக் குறைபாட்டுக்கு ஆளாகி இருக்கிறார்கள். நகரங்களின் வரிசையில் வதோதரா (குஜராத்) மக்கள் 89 சதவீதம் பேருக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கிறது. இதில் சென்னையில் 81 சதவீதம் பேர் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காரணமும்.. தீர்வும்..

காரணமும்.. தீர்வும்..

வைட்டமின் டி குறைபாட்டுக்கு மருத்துவர்கள் சொல்லும் முதன்மையான காரணம் வாழ்க்கை முறை மாற்றம்தான். 8 மணிநேரம் அலுவலகத்தில் இயந்திரத்தனமாக உட்கார்ந்தபடியே வேலை பார்ப்பது, உடற்பயிற்சி இல்லாதது, சத்தான உணவை விரும்பாமல் சுவைக்காகத் துரித உணவுகளை (ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ்) உண்பது போன்றவையே வைட்டமின் டி சத்து குறைபாடு ஏற்படக் காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். உடலில் வைட்டமின் டி சத்தை அதிகரிக்க வேண்டுமானால் அதிகாலை சூரியக் கதிர்கள் உடலில் படும்படி செய்ய வேண்டும். சூரியனில் இருந்து வெளிவரும் யுவி -பி கதிர்வீச்சு வைட்டமின் டி-ஐ நமக்கு கொடுக்கிறது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவை தவிர, முட்டை மஞ்சள் கரு, மீன், இறைச்சி, சத்தான உணவுகள், தானியங்கள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொண்டாலே வைட்டமின் டி குறைபாட்டை போக்கிவிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

English summary
A shocking study has revealed that 81 percent of people in Chennai are vitamin D deficient. mechanical lifestyle, lack of exercise, and a penchant for fast food are primary reasons for vitamin d deficiency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X