86000 ஏழைகள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு..ஸ்டாலின் மாஸ் சிக்சர்! புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா
சென்னை: புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை, எளிய மக்கள் 86,000 பேருக்கு பட்டா வழங்க முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், 6 மாதங்களில் பட்டா வழங்கும் பணியை முடிக்க 2 குழுக்களையும் அமைத்துள்ளார். இதன் மூலம் 63 ஆண்டு கால பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அடுத்த இரண்டு வாரங்களுக்கு தமிழக நிதி நிலை அறிக்கை தாக்க செய்யப்பட உள்ள நிலையில் இந்த கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதன்படி தான் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை, எளிய மக்கள் 86,000 பேருக்கு பட்டா வழங்க முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், 6 மாதங்களில் பட்டா வழங்கும் பணியை முடிக்க 2 குழுக்களையும் அமைத்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது:-
ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு.. சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் "பெல்ட் ஏரியாக்களில்" ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் - நகராட்சிகள் - மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளோம்!
6 மாதங்களில் இதனைச் செய்துமுடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்கவுள்ளோம்! உங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications