8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு.. இன்று முதல் ஹால் டிக்கெட்.. பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி
சென்னை: தனித் தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட்டுகளை இன்று 12ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த மாதம் நடக்க உள்ளது.. இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம்? எப்போது விண்ணப்பிக்க வேண்டும்? என்பது குறித்து, ஏற்கனவே, அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது.

தனித்தேர்வர்கள்: அதில், "தமிழகத்தில் தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் 19 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் ஜூலை 18 முதல் 24-ஆம் தேதி வரை தேர்வுத்துறை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டும். அங்கு இணையம் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தேர்வுக் கட்டணம் - ரூ.125, இணையவழி பதிவுக் கட்டணம் - ரூ.70, மொத்தம் - ரூ.195 பணமாக சேவை மையங்களில் நேரடியாகச் செலுத்த வேண்டும். மேற்குறிப்பிட்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தட்கல் முறையில் ஜூலை 26, 27ம் தேதிகளில் பதிவு செய்துகொள்ளலாம். இதற்கு தேர்வுக் கட்டணத்துடன், தட்கல் கட்டணத் தொகையாக ரூ.500 கூடுதலாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பம்: முதன்முதலாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள், ஆன்லைன் விண்ணப்பத்துடன் பள்ளி பதிவுத் தாள் நகல் அல்லது சான்றிடப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் அல்லது பிறப்புச் சான்றிதழ் நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல, ஏற்கனவே 8-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி தோல்வி அடைந்த பாடங்களை எழுதுவதற்கு விண்ணப்பிப்பவர்கள், இவர்கள் முந்தைய மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களை கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
அனைத்துத் தனித்தேர்வர்களும் ரூ.42-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, பின் கோடுடன் கூடிய சுய முகவரியிட்ட உறையை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.. தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்தத் தேர்வு குறித்த விரிவான கால அட்டவணை உள்ளிட்ட தகவல்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்." என்று அறிவித்திருந்தது.
ஹால் டிக்கெட்: இந்நிலையில், தனி தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 8ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனி தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருக்கிறது.

இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "வருகின்ற ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் ஆகஸ்ட் 23-ம் தேதி வரை நடைபெற உள்ள பொதுத் தேர்வை எழுத விண்ணப்பித்த 8-ம் வகுப்பு தனித் தேர்வர்கள், இன்று முதல் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் " என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தொடங்குகிறது: எனவே, தேர்வில் பங்கேற்க விரும்புவோர், வரும் 18 முதல் 24ம் தேதிக்குள் அரசு தேர்வு மையங்களின் சேவை மையங்களுக்கு சென்று, ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம். சேவை மையங்களின் முகவரிகள், தேர்வுக்கான விதிகள், தகுதி உள்ளிட்ட விபரங்கள், www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications