8வது ஊதியக் குழு பலன்கள்.. ரூ.69000 சம்பளமா? பென்ஷன், அரியர் எவ்வளவு? அரசு ஊழியர்களுக்கு அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 8வது ஊதியக் குழுவின் சம்பள உயர்வை, மத்திய அரசு ஊழியர்களும், பென்ஷன் வாங்குபவர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.. இப்போது வாங்கும் சம்பளம் எவ்வளவு உயரும், பென்ஷன் எவ்வளவு அதிகரிக்கும், அரியர் பணம் கிடைக்குமா என்று நிறைய பேர் காத்திருக்கிறார்கள். ஆனால், சம்பள உயர்வு உடனே கிடைத்துவிடுமா என்றால், அதற்கு இன்னும் காலமாகலாம். ஏன் இந்த தாமதம்? சம்பள உயர்வு குறித்த இப்போதுள்ள நிலைமை என்ன? இங்கே சுருக்கமாக பார்க்கலாம்..!!

8வது ஊதியக் குழு 2025 நவம்பர் 3-ம் தேதி அமைக்கப்பட்டது.. தனது பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பிக்க இந்தக் குழுவுக்கு 18 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 2027 மே அல்லது ஜூன் மாதத்தில் அறிக்கை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அறிக்கை சமர்ப்பிக்கப்படும் இறுதி தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

8th Pay Commission Central Government Employees Salary 8

8வது ஊதியக் குழு அறிக்கை

3 உறுப்பினர்களைக் கொண்ட ஊதியக் குழு முதலில் தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும். அதன்பிறகு, குழு பரிந்துரைத்துள்ள சம்பள உயர்வுகளை அரசு ஆய்வு செய்யும். அந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளலாமா, மாற்றங்கள் தேவையா என்பதையும் முடிவு செய்யும்.

அதுமட்டுமல்லாமல், சம்பள உயர்வால் அரசுக்கு எவ்வளவு கூடுதல் செலவு ஏற்படும் என்பதையும் அரசு கணக்கிட வேண்டும். இந்த நடைமுறைகள் எல்லாம் முடிந்து, அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிறகுதான் புதிய சம்பள முறை அமலுக்கு வரும்.

இதற்கெல்லாம் கால அவகாசம் தேவைப்படும் என்பதால், அறிக்கை வெளியான பிறகும் சம்பள உயர்வுக்காக ஊழியர்கள் காத்திருக்க வேண்டியிருக்கலாம். ஒருவேளை சில பரிந்துரைகள் முன்கூட்டியே தயாரானால், இறுதி அறிக்கைக்கு முன்பே இடைக்கால அறிக்கையையும் குழு அளிக்க வாய்ப்புள்ளது. ஆனால், இதற்கு எந்த உறுதியான தகவலும் இல்லை..

அடுத்து மும்பை கூட்டம்

8வது ஊதியக் குழு தனது பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஊழியர்கள், பென்ஷன்தாரர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளைக் கேட்டறிய, அக்டோபர் 7, 8 தேதிகளில் பெங்களூருவில் கூட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக அக்டோபர் 22, 23 தேதிகளில் மும்பையில் கூட்டம் நடைபெறவுள்ளது

ரூ.69,000 சம்பளம் கிடைக்குமா?

இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது. இதை ரூ.69,000 ஆக உயர்த்த வேண்டும் என்று கர்நாடக ஓய்வூதியதாரர்கள் சங்கம் பரிந்துரைத்துள்ளது. இதற்காக 3.833 என்ற ஃபிட்மென்ட் ஃபேக்டரைப் பயன்படுத்தவும் கோரிக்கை வைத்துள்ளது.. (ஃபிட்மென்ட் ஃபேக்டர் என்பது, தற்போதுள்ள அடிப்படை சம்பளத்தை புதிய சம்பளமாக மாற்றுவதற்கு பயன்படுத்தப்படும் கால்குஷேன் நம்பராகும்)

தேசிய கூட்டு ஆலோசனை குழுவின் ஊழியர் தரப்பும், அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர் சம்மேளனமும் 3.833 என்ற விகிதத்தை வலியுறுத்தியுள்ளன. அதே நேரத்தில், பிபிஎம்எஸ் அமைப்பு 4.0 என்ற ஃபிட்மென்ட் ஃபேக்டரைக் கோருகிறது. அரசு எந்த விகிதத்தை ஏற்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை..

அதேபோல், குறைந்தபட்ச பென்ஷனான ரூ.9,000-ஐ ரூ.34,470 ஆக உயர்த்தவும் கர்நாடக ஓய்வூதியதாரர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இந்த தொகை இப்போதுள்ள குறைந்தபட்ச பென்ஷனைவிட கிட்டத்தட்ட 3.83 மடங்கு அதிகமாகும்.. இருந்தாலும் இவை சங்கங்கள் முன்வைத்த பரிந்துரைகள் மட்டும்தான்.. அரசு இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை..

ஜனவரி 2026 முதல் அரியர் கிடைக்குமா?

புதிய சம்பளத்தை ஜனவரி 1, 2026 முதல் கணக்கிட வேண்டும் என்று ஊழியர்கள் நிறையவே எதிர்பார்க்கிறார்கள்.. ஒருவேளை அரசு அந்த தேதியிலிருந்து புதிய சம்பளத்தை அமல்படுத்த முடிவு செய்தால், தகுதியுள்ளவர்களுக்கு இடைப்பட்ட காலத்துக்கான அரியர் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், இதுவரை அரியர் வழங்குவது குறித்த இறுதி அறிவிப்பும் வெளியாகவில்லை.

பொதுவாக ஊதியக் குழுக்கள் சுமார் 10 வருட இடைவெளியில் அமைக்கப்படுவதால், இப்போது எடுக்கப்படும் முடிவுகள் அடுத்த பல வருடங்களுக்கு ஊழியர்களின் சம்பளம், அலவன்ஸ், பென்ஷன் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மொத்தத்தில், 8வது ஊதியக் குழுவின் அறிக்கை 2027-ல் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சம்பள உயர்வு எப்போது கிடைக்கும், எவ்வளவு உயரும், அரியர் வருமா என்பதற்கு அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகுதான் தெளிவான பதில் கிடைக்கும்.. அதுவரை ஊழியர்களும் பென்ஷன்தாரர்களும் காத்திருக்க வேண்டியதுதான்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+