இது லிஸ்ட்லயே இல்லியே.. நிறம் மாறும் எடப்பாடி.. தைலாபுரத்தில் "மூன்று முடிச்சு".. எகிறி அடிக்கு பாமக
சென்னை: இந்த முறை யாருடன் கூட்டணி வைப்பது என்பதில், "மதில்மேல் பூனை"யாக பாமக உள்ளதாக தெரிகிறது.. சென்னையில் நடக்கப்போகும் பொதுக்குழு கூட்டத்தில், தன்னுடைய கூட்டணி முடிவை பாமக அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முறையும், திமுக கூட்டணி பலமாகவே உள்ளது.. எனினும், திமுக கூட்டணிக்கு பாமக முயன்றதாக தெரிகிறது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் இதற்கு, பிடிகொடுக்கவில்லையாம். பிறகு பார்க்கலாம் என்ற ரீதியில் பாமக தலைமைக்கு பதிலளித்து விட்டாராம்.

அப்படியே கூட்டணியில் இணைவதானாலும், 3 சீட்டுக்கு மேல் ஒதுக்கும் எண்ணம் திமுக மேலிடத்துக்கு இல்லையாம். அதனால்தான், கூட்டணி கதவை திமுக மூடியதாக தெரிகிறது.
திமுக முடிவு: இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. "வரும் 2026ல் மறுபடியும் முதல்வராக ஸ்டாலினை ஏற்போம்" என்று அன்புமணி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற கண்டிஷனை திமுக விதித்துள்ளதாக சொல்கிறார்கள்.
அப்படியானால், அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாமக முயலுமா? என்ற அடுத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. இதுசம்பந்தமாக அதிமுக-பாமக தரப்பில் சீக்ரெட்டான பேச்சுவார்த்தை ஏற்கனவே நடத்தப்பட்டதாம். அப்போது, 9 + 1 என்ற ரீதியில் பாமக சீட் பேரம் நடத்தியதாகவும், அதிமுக இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் சொல்கிறார்கள்.

அதிமுக முடிவு: காரணம், சமீப தேர்தல்களில் பாமகவுடன் கூட்டணி வைத்தும், அக்கட்சி போதுமான வெற்றியை பெற்றித்தரவில்லை.. அத்துடன், 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு விவகாரம், பிற சமுதாயத்தினரின் ஓட்டுகளை வரவிடாமல் பாமக தடுத்து விடும் என்று மூத்த அதிமுக தலைவர்கள் கருதுகிறார்களாம்.. அதனால், அதிமுகவுடனும் பாமக கூட்டணி வைப்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.
அப்படியானால், பாஜகவுடன் கூட்டணி வைக்க பாமக முயலுமா? என்ற அடுத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. 3வது அணியை பாஜக கட்டமைக்க நேர்ந்தால், அவர்களுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்கவும் பாமக நினைத்தாலும், இங்கேயும் ஒரு சிக்கல் முளைத்துள்ளது.. பாஜக ஒதுக்கப்படும் 13 தொகுதிகளில், சிதம்பரம், கடலூர், தர்மபுரியில் கண்டிப்பாக பாமக வெற்றிபெற்றால்தான் மத்திய அமைச்சர் போஸ்டிங் தரப்படும் என்ற கண்டிஷனை பாஜக போட்டிருக்கிறதாம்.
கண்டிஷன்: ஆக, 3 கட்சிகளிலுமே கண்டிஷன் போடப்பட்டுள்ளதால், இதில் எந்த முடிவை பாமக எடுக்க போகிறதென்று தெரியவில்லை. இதனால், அரசியல் களம் தகித்து காணப்படுகிறது.
பாமகவை பொறுத்தவரை, ஒவ்வொரு தேர்தலிலும், வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய இடத்தில் உள்ளது.. வலுவான வாக்குவங்கியையும் தொடர்ந்து தக்க வைத்தும் வருகிறது.. வடமாவட்டங்களையும் தாண்டி, தென்மாவட்டங்களிலும் கூடுதல் கவனத்தை செலுத்தி, வாக்கு வங்கியை பலப்படுத்தி வருகிறது.

பாமக வாக்குகள்: அதுவும் இல்லாமல், பாமக தலைவராக அன்புமணி பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு அதிரடிகள் செய்யப்பட்டு, புதுரத்தம் கட்சிக்குள் பாய்ச்சப்பட்டுள்ளது. இதையெல்லாம் பிற கட்சிகள் கவனிக்காமல் இல்லை.. எனவேதான், இந்த முறை திமுக, அதிமுக கட்சிகள், பாமகவை அவ்வளவு லேசில் விட்டுவிடாது, நிச்சயம் கூட்டணிக்குள் கொண்டுவரும் முயற்சியை கையிலெடுக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்..!!
அதுமட்டுமல்ல, மத்திய அமைச்சர் பதவி வாக்குறுதி தந்தால் தான், கூட்டணி என்பதில் பாமக உறுதியாக உள்ளதால், கூட்டணி நிலைப்பாடு குறித்த ஆர்வம் எகிறி வருகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications