Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் குவாட்டர் "பாட்டிலுக்கு" தடை? காகித குடுவையில் 90 மில்லி? அரசுக்கு ஏன் இவ்ளோ எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 90 மிலி மதுவை காகித குடுவைகளில் (டெட்ரா பேக்) அடைத்து விற்பனை செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கசிந்துவரும் தகவல்களுக்கு, எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. என்ன காரணம்?

"தமிழ்நாட்டில் கள்ளச்சாராய சாவுகளைத் தடுக்கும் நோக்கத்துடன் 90 மிலி மதுவை காகிதக் குடுவைகளில் அடைத்து விற்பனை செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான கருத்துரு தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகியிருக்கிறது.

Tasmac

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. இன்றைய தினமும், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். காகிதக் குடுவைகளில் 90 மிலி மது விற்கப்பட்டால் அது தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டின் இளைய சமுதாயத்தையும் சீரழித்து விடும் என்று எச்சரித்துள்ளார்.

மதுபானம்: 90 மில்லி மதுபானம், காகித குடுவைகளில் விற்கப்பட்டால், அது மில்க்ஷேக், பழச்சாறுகள் போலவே இருக்கும் என்பதால், மாணவர்கள், சிறுவர்கள் பயன்படுத்தினாலும் மற்றவர்களால் எளிதாக கண்டுபிடிக்க முடியாது. நொறுக்குத் தீனிகளைப் போல புத்தகப் பைகளில் வைத்து எடுத்துச் செல்லும் நிலை உருவாகி விடும். அதனால், 90 மிலி மது அறிமுகம் செய்யப் படுவது மிகப்பெரிய சமூக சீரழிவை ஏற்படுத்தி விடும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார் அன்புமணி.

90 மில்லி காகித குடுவை மதுபானம் குறித்து, கடந்த ஜுன் மாதமே அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் பேசியிருந்தார்.. அப்போதுஅமைச்சர் சொன்னபோது, "மது பாட்டில் உடைவதிலிருந்துதான், முறைகேடு பிரச்னைகள் ஆரம்பிக்கின்றன. எனவேதான், கர்நாடக மாநிலத்தில் உள்ளது போலவே, கண்ணாடி பாட்டில்களுக்கு பதில், காகிதக் குடுவையில் (டெட்ரா பேக்) வழங்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கட்டிங்: ஒரு குவாட்டர் பாட்டிலை வாங்கி இரண்டு கட்டிங்காக பிரிக்கும்போது தான் அதில் விஷம் உள்ளிட்ட பொருட்கள் கலப்பதற்கு வாய்ப்புள்ளது.. அதனால், 90 மில்லி (கட்டிங்) காகிதக் குடுவையில் வழங்கினால், இதற்கான வாய்ப்புகள் குறைவு" என்றும் அமைச்சர் கூறியிருந்தார்.

அமைச்சரின் இந்த கருத்துக்கு ஒருசாரார் ஆதரவு தந்தபோதிலும், டாகடர் ராமதாஸ் உடனடியாக அப்போதே எதிர்ப்பை தன்னுடைய பதிவு செய்திருந்தார். "டெட்ராவில் 90 மில்லி மது அறிமுகம் செய்யப்பட்டாலும், மதுக்கடைகள் முன்கூட்டியே திறக்கப்பட்டாலும் பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்தும்" என்று அதிரடியாக அறிவித்திருந்தார்.

செல்லபாண்டியன்:
இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பிய நிலையில், மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் செல்லபாண்டியன் வெளியிட்டிருந்த ஒரு அறிவிப்பானது அதற்கு மேல் பரபரப்பை ஏற்படுத்தி பலரது கவனத்தையும் பெற்றிருந்தது.

செல்லபாண்டியன் கூறும்போது, "டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மில்லி டாஸ்மாக் மதுபானத்தில் தேவையான அளவு தண்ணீர் கலந்து ஒரே பாக்கெட்டாக விற்பனை செய்ய வேண்டும். டெட்ரா பாக்கெட்டாக மது விற்பனை செய்வதால் பிளாஸ்டிக் டம்ளர், வாட்டர் பாட்டில் வாங்குவது பார்களில் குறையும். அதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். ஒரே பாக்கெட்டில், ஒரே மடக் மடக் இதை அமல்படுத்தினால் அமைச்சருக்கு முக்கால் பவுன் மோதிரம் பரிசாக சங்கம் சார்பில் வழங்கப்படும்" அறிவித்தார்.

பரபரப்பு: இப்படி பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தந்தநிலையில், இந்த விவகாரம் அப்படியே அமுங்கிவிட்டது. லோக்சபா தேர்தல் பரபரப்புக்கு பிறகு, மீண்டும் இந்த விவகாரம் தற்போது வெடித்துள்ளது. அதிலும், கள்ளக்குறிச்சி கொடூர சம்பவத்தையடுத்து, 90 மிலி மதுவை காகிதக் குடுவைகளில் அடைத்து விற்பனை செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வலம்வருகின்றன.

டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் பாட்டில்கள் ரூ.100-க்கும் மேலாக விற்கப்படுவதால்தான், கூலி வேலை செய்பவர்களால், அதை வாங்கி குடிக்க முடியாமல், கள்ளச்சாராயம் குடித்து இறப்பதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது. அதனால்தான், கூலித்தொழிலாளர்களும் எளிதில் வாங்கி குடிக்கும் வகையில் கட்டிங் பாட்டில்களை, குறைந்த அளவில், குறைந்த அளவில் விற்பனை செய்ய தமிழக அர-ச யோசித்து வருவதாக சொல்கிறார்கள்.

வனவிலங்குகள்:
இதுஒருபுறம் கள்ளச்சாராயத்தை தடுக்க உதவும் என்றே தெரிகிறது. அதேபோல டெட்ரா பாக்கெட்கள், கண்ணாடி பாட்டில்களை போல எளிதில் உடையாது... இதனால், நீலகிரி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் வனவிலங்குகள் மதுபான பாட்டில்களால் பாதிப்புக்குள்ளாவது தவிர்க்கப்படுவதுடன், விவசாய நிலங்களில் வீசப்படும் மது பாட்டில்களால் விவசாயிகள் அடிக்கடி காயமடைவதும் தவிர்க்கப்படும் என்றே நம்பப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், ஒரு கண்ணாடி பாட்டில் பேக்கிங் செய்வதற்கான விலை 4 ரூபாய் என்றால், டெட்ரா பாக்கெட்டை பொறுத்தவரை, 2.35 ரூபாய் மட்டுமே தேவைப்படும். அதாவது குறைவான செலவில் நிறைவான லாபம்.. டெட்ரா பாக்கெட் விரைவில் மண்ணில் மக்கிவிடும் என்பதால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அரசு தரப்பில் நம்பப்படுகிறது.

கண்ணாடி பாட்டில்: ஆனால், கண்ணாடி பாட்டில்களைவிட இதில் அதிகம் பாதிப்பு என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.. குறைவான விலையில், 90 மில்லியாகும் மதுபானத்தால், குடிப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துவிடும்.. சிறிய அளவில் பாக்கெட் மதுவை விற்றால், குறைந்த அளவில் குறைந்த விலையில் கிடைப்பதால், புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.. சிறுவர்களையும் மதுப்பழக்கத்திற்கு கொண்டுவந்துவிடும் என்பதே பலரது ஆதங்கமாக உள்ளது..

முழு மதுவிலக்கு அமலுக்கு வரவேண்டும் என்றுதான் மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்களே தவிர, விலை குறைப்பை அல்ல என்று கோரிக்கைகள் வெடித்துள்ளன. அதேசமயம், "மதுபானத்தை அரசே விற்பதால் மது அருந்துவதை குற்றமாக கருத முடியாது" என்று சென்னை ஹைகோர்ட் கூறியிருந்ததை இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது. இதற்கு தமிழ்நாடு அரசு என்ன முடிவெடுக்க போகிறதென்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+