95 நாட்கள் சிகிச்சை..மீனாவின் கணவரை காப்பாற்ற போராடினோம்.. அமைச்சர் மா.சுப்ரமணியன்

நடிகை மீனாவின் கணவர் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளினால் அவர் உயிரிழந்திருக்கிறார் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை மீனாவின் கணவருக்கு உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு யாராவது தானம் செய்தால் மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம் என்று அதற்கு தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

Recommended Video

    Rajinikanth, Sarathkumar, Kushboo என Meena வீட்டில் குவிந்த பிரபலங்கள் *TamilNadu

    நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு 7 மணியளவில் காலமானார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அதை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்தார்.

    48 வயதான வித்யாசாகர் முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டிருந்தார். பின்னர், மார்ச் 2022-ன் இறுதியில், அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டவே அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். படிப்படியாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. நேற்று இரவு வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் இன்று மதியம் 2 மணிக்கு சென்னை பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

    அமைச்சர் மா. சுப்ரமணியன்

    அமைச்சர் மா. சுப்ரமணியன்

    நடிகர் நடிகை மீனாவின் கணவர் வித்யாசகர் கொரோனாவால் இறந்துவிட்டார் என்ற செய்தி பரவுகிறது. ஆனால் அவர் கொரோனாவால் இறக்கவில்லை. கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளினால் அவர் உயிரிழந்திருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

    கொரோனாவால் இறக்கவில்லை

    கொரோனாவால் இறக்கவில்லை

    சென்னை மயிலாப்பூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் இறந்து விட்டதாக தகவல் வருகிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், மீனாவின் கணவர் கொரோனாவால் இருந்ததாக சொல்லப்படுவது தவறு. அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா வந்தது. ஆனால் நேற்று அவர் கொரோனா பாதிப்பால் உயிரிழக்க வில்லை என்று கூறினார்.

    நுரையீரல் பாதிப்பு

    நுரையீரல் பாதிப்பு

    மீனாவின் கணவருக்கு கடந்த டிசம்பர் மாதம் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது . வீட்டிலேயே ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார் . டிசம்பர் மாதம் மருத்துவமனையில் சேர்ந்த ஆறு மாதம் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அதன் பின்னர் அவரின் இருதயம், நுரையீரல் ஆகிய இரண்டு உறுப்புகளும் செயலிழந்து விட்டன.

    95 நாட்கள் எக்மோ சிகிச்சை

    95 நாட்கள் எக்மோ சிகிச்சை

    95 நாட்கள் சுயநினைவின்றி எக்மோ சிகிச்சையில் இருந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவர் சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். அப்போது அவரின் நிலைமை மோசமாகவே இருந்தது. உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு யாராவது தானம் செய்தால் மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம் என்று அதற்கு தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான முயற்சியில் இந்தியா முழுவதும் அவருக்கான உடல் உறுப்பு எந்த ஊரிலும் கிடைக்கவில்லை.

    தமிழக அரசு முயற்சி

    தமிழக அரசு முயற்சி

    பெங்களூர் , மகாராஷ்டிரா என்று பல இடங்களில் சொல்லி வைத்திருந்தோம். ஆனாலும் அவரது ரத்த வகைக்கு அது பொருந்தவில்லை. முதல்வர் உட்பட நாங்கள் எல்லோரும் அவரை காப்பாற்ற நிறைய முயற்சி செய்தோம். மீனாவின் கணவரை காப்பாற்ற தமிழக அரசு எவ்வளவு முயற்சித்தும் முடியவில்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

    மெகா தடுப்பூசி முகாம்

    மெகா தடுப்பூசி முகாம்

    தமிழ்நாட்டில் 31வது மெகா தடுப்பூசி முகாம் வருகிற 10ஆம்தேதி 1 லட்சம் இடங்களில் நடைபெற உள்ளதாகவும் சென்னையில் 3 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+