சென்னையில் 98 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா.. மாநகராட்சி ஆணையர் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் 98 சதவீதம் பேருக்கு அறிகுறியே இல்லை என மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்தார்.

Recommended Video

    சென்னையில் 98 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா

    தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162 ஆக உயர்ந்துள்ளது. நேற்று புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அந்த 104 பேரில் சென்னையில் 94 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    98% of corona patients in Chennai are asymptomatic

    இதனால் சென்னையில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 768 ஆக உயர்ந்துவிட்டது. சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் பாதிப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது. தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிக பாதிப்பு உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில் சென்னையில் 98 சதவீதம் பேருக்கு கொரோனா அறிகுறியே இல்லாமல் பாதிப்பு உறுதியானது.

    சென்னையில் 1900 தள்ளுவண்டிகள், 1182 மினி சரக்கு வாகனங்கள் மூலம் மாநகராட்சி முழுவதும் காய்கறி விநியோகம் நடக்கிறது. இதுவரை 114 மெட்ரிக் டன் காய்கறி தொகுப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    கோயம்பேடு காய்கறி சந்தையில் விலைவாசிகளை ஏற்றி விற்றால் ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாதுகாப்பு கருதியே கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. என பிரகாஷ் தெரிவித்தார். கொரோனா பாதிப்புகள் குறித்து நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்தார்.

    அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் பெருமளவு கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பேரூராட்சி, நகராட்சிகளில் கட்டுக்குள் இருக்கின்றன. ஆனால் சென்னையில்தான் கொரோனா கட்டுக்குள் இல்லை என முதல்வர் கவலை தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+