அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.. விருதுநகர் வரிசையில் செங்குன்றம்..சிறுமியை சிதைத்த போதைக் கும்பல்..!
சென்னை : விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் சென்னை செங்குன்றத்தில் வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியை 5 பேர் கொண்ட போதைக் கும்பல் 2 மாதங்களாக மிரட்டி சிதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி அதனை விடியோ எடுத்துவைத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து அதிகபட்ச தண்டனை பெற்று தர வேண்டும் எனவும், வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

செங்குன்றத்தில் அதிர்ச்சி
இந்நிலையில் விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் சென்னை செங்குன்றத்தில் வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியை 5 பேர் கொண்ட போதைக் கும்பல் மிரட்டி சிதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் தந்தை லாரி ஓட்டுனராக உள்ளார். இவரது தாய் பிரிந்து சென்ற நிலையில், தனது 15 வயது அண்ணன் மற்றும் பாட்டியுடன் வசித்து வரும் சிறுமிக்கு தான் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

13 வயது சிறுமி
குடிப்பழக்கம் கொண்ட அந்த சிறுமியின் தந்தை அடிக்கடி வீட்டுக்கு வர மாட்டார். தாயும் வேறு ஒருவருடன் சென்று விட்டார். இதனால் அவரது அண்ணன்தான் சிறுமியை படிக்க வைத்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் போதையில் சிறுமியின் வீட்டுக்கு வந்த 5 மர்ம நபர்கள் சிறுமியின் அண்ணனை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் அவர் திருத்தணியில் உள்ள அவரது உறவினரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

2 மாதங்களாக கொடுமை
யாருடைய துணையுமின்றி வீட்டில் சிறுமி தனியாக இருப்பதை அறிந்து கொண்ட 5 பேரும் கடந்த மாதம் 8ஆம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு சிறுமியின் வீட்டுக்கு வந்தனர். தூங்கி கொண்டிருந்த சிறுமியை மிரட்டி எழுப்பி 5 பேரும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் கடந்த 2 மாதங்களாக போதை கும்பலைச் சேர்ந்த 5 பேரும் அடிக்கடி வீட்டுக்கு இரவு நேரத்தில் வந்து தாங்க முடியாத அளவுக்கு கொடுமை செய்து வந்துள்ளனர்.

போலீசில் புகார்
அளவுக்கு அதிகமான போதையில், வீட்டை பூட்டி சிறுமியை போதைக் கும்பலைச் சேர்ந்த 5 பேரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றிருக்கிறது. அவர்கள் சொல்வதைக் கேட்டு சிறுமி நடந்து கொள்ள வேண்டும் எனவும், அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் சிறுமியை கொன்று விடுவோம் என்றும் அந்த போதைக் கும்பல் மிரட்டியுள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்த சிறுமி இது குறித்து, அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்த ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ள நிலையில், போதை கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications