ஆஸ்பத்திரிக்கு போன அம்மாவுக்கு ஷாக்! 16 வயது மாணவி கர்ப்பமா? ஒட்டுமொத்த குடும்பத்தை தூக்கிய போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை அருகே 16 வயதே நிரம்பிய சிறுமியை பல நாட்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் வன்கொடுமை சம்பவங்களில் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா, ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருவது போல் தற்போது தமிழகத்தில் இந்த கொடூரங்கள் அரங்கேறுவது சமூக ஆர்வலர்களையும் பெற்றோர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஷாக் சம்பவம்

ஷாக் சம்பவம்

சிறுமிகளை தெரியாதவர்கள், பள்ளி ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் சம்பவத்தால் வெளியே அனுப்ப பெற்றோர் தயங்கி வரும் நிலையில் வீட்டிற்குள் இருக்கும் நபர்களே பிஞ்சு மழலைகளிடமும், சிறுமிகளிடம் அத்து மீறுவதுதான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. அந்த வகையிலான ஒரு சம்பவம் தான் சென்னையில் அரங்கேறி இருப்பதோடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் சென்னையில் ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

வாடகை வீட்டு சிறுமி

வாடகை வீட்டு சிறுமி

சென்னை அருகே உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் கணவரை இழந்த பெண் ஒருவருக்கு 16 மற்றும் 14 வயதில் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அந்த பெண் தனது மகள்களுடன் வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில் வீட்டின் உரிமையாளரான வெங்கடேசன் என்பவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது. இரண்டு மனைவிகளும் வெங்கடேசனை பிரிந்து சென்ற நிலையில் வெங்கடேசனின் சகோதரியான லலிதா என்பவர் வாடகை வீட்டில் வசித்து வந்த பெண்ணிடம் வெங்கடேஷுக்கு ஒரு மகளை மணமுடித்துக் கொடுக்க வேண்டும் என பெண் கேட்டுள்ளார்.

 பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்

அதற்கு சிறுமியின் தாய் மறுப்பு தெரிவித்த நிலையில் அவரை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்த வெங்கடேசன் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்திருக்கிறார். இதனை தெரிந்து கொண்ட சகோதரி லலிதா சிறுமியை வைத்து பணம் சம்பாதிக்க நினைத்து தனக்கு தெரிந்த நபர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய வைத்திருக்கிறார்.

சிறுமி கர்ப்பம்

சிறுமி கர்ப்பம்

இதனால் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அதிர்ச்சி அடைந்த அவர் தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்துள்ளார். அப்போதுதான் சிறுமி கர்ப்பமாக இருக்கும் தகவல் தெரிய வந்தது. இதை அடுத்து சிறுமியிடம் நடத்திய விசாரணையில் வெங்கடேசன் மற்றும் அவரது சகோதரி லலிதா ஆகியோர் தூண்டுதலில் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

போக்சோவில் கைது

போக்சோவில் கைது

இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் வெங்கடேசன் அவரது சகோதரி லலிதா, தாய் விஜயா மற்றும் லலிதாவின் நண்பர் வெங்கப்பன் ஆகிய நான்கு பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள லலிதாவின் நண்பர்களாக கருதப்படும் கிரி, பாலாஜி ஆகியோரை தேடி வருகின்றனர், இந்த சம்பவம் சென்னையில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+